MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.6 லட்சத்திற்குள் 7 சீட்டர் வாங்க வேண்டுமா? இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் கார் இதுதான் பாஸ்

ரூ.6 லட்சத்திற்குள் 7 சீட்டர் வாங்க வேண்டுமா? இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் கார் இதுதான் பாஸ்

குறைந்த விலையில் கிடைக்கும் 7 சீட்டர் காரான இது அக்டோபர் மாதத்தில் 50% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த மாடல், அதன் மலிவு விலை, விசாலமான பூட் ஸ்பேஸ் போன்ற அம்சங்களால் குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாக விளங்குகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 20 2025, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மலிவு 7 சீட்டர் கார்
Image Credit : Google

மலிவு 7 சீட்டர் கார்

இந்தியாவில் குறைந்த விலையில் 7 சீட்டர் கார் வாங்க நினைக்கும் குடும்பங்களுக்கு ரெனால்ட் டிரைபர் ஒரு பெரிய வரவேற்பைப் பெற்ற மாடலாக மாறியுள்ளது. வெறும் ரூ.5.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த 7 சீட்டர், செக்மெண்ட்-இன் விலையில் உண்மையான “கேம் சேஞ்சர்” ஆகும். தள்ளுபடி விலை, பயனுள்ள அம்சங்கள், குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களால் இந்த மாதத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெனால்ட் நிறுவனமும் சமீபத்தில் வெளியிட்ட விற்பனை கணக்குகள் இதையே உறுதிப்படுத்துகின்றன.

24
ரெனால்ட் டிரைபர் விற்பனை
Image Credit : Asianet News

ரெனால்ட் டிரைபர் விற்பனை

ஒவ்வொரு மாதமும் ஆட்டோ நிறுவனங்கள் வெளியிடும் விற்பனைத் தரவுகளைப் பார்க்கும்போது, ​​ரெனால்ட் அக்டோபரில் நல்ல உயர்வைக் கண்டுள்ளது. தற்போது ரெனால்ட்டின் கைவரிசையில் Triber, Kwid, Kiger ஆகிய மூன்று மாடல்கள் மட்டுமே உள்ளன. ஆனால் 2025 ஜனவரியில் புதிய வடிவமைப்பில் டஸ்டர் மீண்டும் அறிமுகமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரெனால்ட் 4,672 யூனிட்ஸ் விற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21% வளர்ச்சி. செப்டம்பருடன் ஒப்பிடுகையில் மாதத்துக்கு மாதம் 10% அதிகரிப்பு ஏற்பட்டது.

Related Articles

Related image1
கார் லோனுக்கு எந்த வங்கி பெஸ்ட்? குறைந்த வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் பட்டியல் இதோ
Related image2
டாடா நானோவுக்கு பிறகு ஹிட் அடித்த கார்.. ஸ்விஃப்ட்டுக்கு போட்டி.. விலை ரொம்ப கம்மி
34
6 லட்சம் கீழ் 7 சீட்டர்
Image Credit : our own

6 லட்சம் கீழ் 7 சீட்டர்

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ரெனாலின் மிகப்பெரிய ஹிட் மாடல் Triber. அக்டோபர் 2025-ல் மட்டும் 3,170 யூனிட்ஸ் விற்றுள்ளது, இது கடந்த ஆண்டு 2,111 யூனிட்ஸுடன் ஒப்பிடுகையில் 50% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி. மற்ற இரண்டு மாடல்களில், Kiger அக்டோபரில் 948 யூனிட்ஸ் மட்டுமே விற்றது, இது கடந்த ஆண்டைவிட 9.97% சரிவு. Kwid விற்பனையும் 706-இல் இருந்து 554-ஆக குறைந்துள்ளது.

44
குறைந்த விலையில் 7 சீட்டர் கார்
Image Credit : Asianet News

குறைந்த விலையில் 7 சீட்டர் கார்

ரெனால்ட் டிரைபர் விலையில் குறைவாக இருந்தாலும், அம்சங்களில் எந்தக் குறையும் இல்லை. இந்தியாவின் மிகவும் மலிவு 7 சீட்டர் என அழைக்கப்படும் இந்த மாடல் 625 லிட்டர் பரந்த பூட் ஸ்பேஸுடன் வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசைக்கும் ஏசி வென்டுகள், வயர்லெஸ் சார்ஜிங், 21 ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்கள், மாறிக்கொள்ளக்கூடிய சீட் லேஅவுட் போன்ற வசதிகள் அனைத்தும் அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. எனவே குறைந்த விலையில் அதிக பயன் தேடும் குடும்பங்களுக்கு டிரைபர் இன்னும் சிறந்த தேர்வாக தொடர்கிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெனால்ட் ட்ரைபர்
குடும்ப கார்கள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Skoda Kylaq: வாடிக்கையாளர்களிடம் எகிறும் டிமாண்ட்..! சரசரவென உயர்ந்த வெயிட்டிங் பீரியட்
Recommended image2
வாங்குனா இப்படி ஒரு ஸ்கூட்டர் வாங்கணும்..! 'லைஃப்டைம்' வாரண்டியுடன் களமிறங்கும் டாப் இ-ஸ்கூட்டர்கள்..!
Recommended image3
ரூ.1.37 லட்சத்தில் ராயல் என்ஃபீல்ட் பைக்.. 36.2 கி.மீ மைலேஜ் தருது.. எந்த மாடல்?
Related Stories
Recommended image1
கார் லோனுக்கு எந்த வங்கி பெஸ்ட்? குறைந்த வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் பட்டியல் இதோ
Recommended image2
டாடா நானோவுக்கு பிறகு ஹிட் அடித்த கார்.. ஸ்விஃப்ட்டுக்கு போட்டி.. விலை ரொம்ப கம்மி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved