MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Car : ரூ.7 லட்சம் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 5 சீப் அண்ட் பெஸ்ட் ஆட்டோமேட்டிக் கார்கள் என்னென்ன?

Car : ரூ.7 லட்சம் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 5 சீப் அண்ட் பெஸ்ட் ஆட்டோமேட்டிக் கார்கள் என்னென்ன?

Top 5 Budget Automatic Cars : சிட்டி டிராஃபிக்கில் அடிக்கடி கிளெட்ச், கியரை பயன்படுத்தாமல் இருக்க ஆட்டோமேட்டிக் கார்கள் தான் சிறந்த சாய்ஸ். அப்படி ரூ.7 லட்சத்திற்குள் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 11 2026, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Cheap and Best Automatic Cars
Image Credit : X

Cheap and Best Automatic Cars

சிட்டி டிராஃபிக்ல தினமும் வண்டி ஓட்டுறவங்களுக்கு, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் ஒரு பெரிய வரப்பிரசாதம். அடிக்கடி கிளட்ச்சை மிதிச்சு, கியர் மாத்த வேண்டிய டென்ஷன் இல்லைங்கிறதுதான் இதோட பெரிய ப்ளஸ். சரி, உங்க பட்ஜெட் சுமார் ரூ.7 லட்சம்னா, அதுக்குள்ள வாங்கக்கூடிய டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள் என்னென்னன்னு பார்க்கலாம்.

Car Buying Tips: பெண்கள் பெயரில் கார் வாங்கினா இவ்ளோ லாபமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
டாடா டியாகோ
Image Credit : Gemini AI

டாடா டியாகோ

பட்ஜெட் ஹேட்ச்பேக் செக்மென்ட்ல டாடா டியாகோ ஒரு ஹிட்டான மாடல். இதோட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்ல AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கு. ஒரு ஸ்பெஷல் விஷயம் என்னன்னா, CNG வேரியன்ட்லயும் AMT ஆப்ஷன் கொடுக்கிற சில கார்கள்ல இதுவும் ஒண்ணு. சிட்டியோட டிராபிக்ல ரொம்ப ஈஸியா ஓட்டிட்டுப் போகலாம். இதோட ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.6 லட்சம்.

Related Articles

Related image1
Car Buying Tips: பெண்கள் பெயரில் கார் வாங்கினா இவ்ளோ லாபமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
Related image2
Interesting Facts: கார் கண்ணாடியில் கருப்புப் புள்ளிகள்.. வெறும் டிசைன் இல்ல.. சயின்ஸ் இருக்கு!
36
டாடா டிகோர்
Image Credit : our own

டாடா டிகோர்

ஹேட்ச்பேக் வேணாம், செடான் கார் தான் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு டாடா டிகோர் ஒரு சூப்பர் சாய்ஸ். இதுலயும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின் ஆப்ஷன்களோட AMT கியர்பாக்ஸ் கிடைக்குது. பெரிய பூட் ஸ்பேஸ், வசதியான கேபின் இருக்கிறதுனால, குடும்பத்தோட பயணம் செய்ய இது ஒரு நல்ல கார். இதோட ஆரம்ப விலை சுமார் ரூ.6.8 லட்சம்.

46
நிஸான் மேக்னைட்
Image Credit : Nissan official

நிஸான் மேக்னைட்

காம்பாக்ட் எஸ்யூவி வாங்கணும்னு ஆசைப்படுறவங்களுக்கு நிஸான் மேக்னைட் ஒரு நல்ல ஆப்ஷன். இதுல 1.0 லிட்டர் நார்மல் பெட்ரோல் இன்ஜின்ல EZ-Shift AMT கியர்பாக்ஸும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்ல CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் கிடைக்குது. சிட்டிக்குள்ளயும் சரி, ஹைவேலயும் சரி, ஒரு ஸ்மூத்தான டிரைவிங் அனுபவத்தை இந்த கார் கொடுக்கும். இதோட ஆரம்ப விலை சுமார் ரூ.6.24 லட்சம்.

56
ஹூண்டாய் எக்ஸ்டர்
Image Credit : Car dekho

ஹூண்டாய் எக்ஸ்டர்

நிறைய ஃபீச்சர்ஸோட வர்ற ஒரு மைக்ரோ எஸ்யூவிதான் ஹூண்டாய் எக்ஸ்டர். இதோட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்ல AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கு. மாடர்ன் டிசைன், நல்ல பாதுகாப்பு வசதிகள், பிரீமியம் ஃபீச்சர்ஸ்னு இந்த செக்மென்ட்ல இது ஒரு தனித்துவமான மாடலா இருக்கு. இதோட ஆரம்ப விலை சுமார் ரூ.6.95 லட்சம்.

66
ரெனோ கைகர்
Image Credit : X/Sunderdeep - Volklub

ரெனோ கைகர்

பட்ஜெட் எஸ்யூவி வரிசையில இன்னொரு முக்கியமான மாடல் ரெனோ கைகர். இதுல 1.0 லிட்டர் நார்மல் பெட்ரோல் இன்ஜின்ல AMT ஆப்ஷனும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்ல CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கிடைக்குது. நல்ல பெர்ஃபாமன்ஸ், வசதியான டிரைவிங் அனுபவம் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு கைகர் ஒரு நல்ல சாய்ஸ். இதோட ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.6.99 லட்சம்.

மொத்தத்துல, தினமும் டிராஃபிக்ல வண்டி ஓட்டுறவங்களுக்கு, ஆட்டோமேட்டிக் கார்கள் டிரைவிங்கை ரொம்பவே ஈஸியாக்கும், சோர்வையும் குறைக்கும். உங்க பட்ஜெட் மற்றும் தேவைகளைப் பொறுத்து, இதுல இருந்து ஒரு நல்ல மாடலை நீங்க தேர்ந்தெடுக்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தானியங்கி கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Volkswagen Compact SUV: பிரெஸ்ஸா, நெக்ஸானுக்கு சவால்! வருகிறது ஃபோக்ஸ்வேகனின் புதிய எஸ்யூவி!
Recommended image2
Tata Car Offers: டாடா கார்களுக்கு ஆகஸ்ட் மாதம் சூப்பர் தள்ளுபடி! ரூ.3.35 லட்சம் வரை ஆஃபர்!
Recommended image3
Tata : கம்மி விலையில் 360 டிகிரி கேமரா உடன் கிடைக்கும் டாப் 3 சீப் அண்ட் பெஸ்ட் டாடா கார்கள்
Related Stories
Recommended image1
Car Buying Tips: பெண்கள் பெயரில் கார் வாங்கினா இவ்ளோ லாபமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
Recommended image2
Interesting Facts: கார் கண்ணாடியில் கருப்புப் புள்ளிகள்.. வெறும் டிசைன் இல்ல.. சயின்ஸ் இருக்கு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved