முழு சார்ஜில் 200 கிமீ பயணிக்கும் ஸ்கூட்டர்; விலையும் இவ்வளவுதானா?
கோமகி நிறுவனம் அப்கிரேட் செய்யப்ட்ட வெனிஸ் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரி அதிக வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
budget electric scooters
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதுப்புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் கோமகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் நல்ல மவுசு உள்ளது.
best electric scooters
அந்த வகையில் கோமகி நிறுவனம் அப்கிரேட் செய்யப்ட்ட வெனிஸ் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது இந்த ஸ்கூட்டரின் பேட்டரி அதிக வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் வெப்பம் தாங்காமல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெடிக்கும் பிரச்சனை நிலவி வருவதால் வெனிஸ் ஸ்கூட்டரில் இந்த பாதுகாப்பு அம்சம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரிகளை ஐந்து மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இதில் உள்ள போர்ட்டபிள் சார்ஜர்கள் 90 சதவீதம் வரை நான்கு மணி நேரத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டவை.
best electric scooters
வெனிஸ் அப்கிரேட் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை தடையின்றி பயணிக்க முடியும். இந்த மாடலின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை அல்ட்ரா-ப்ரைட் ஃபுல் எல்இடி லைட்டிங் சிஸ்டம், 3,000 வாட் ஹப் மோட்டார், 50 ஆம்ப் கன்ட்ரோலர், ரிவர்ஸ் மோட் ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்கூட்டரில் ஆன்-போர்டு நேவிகேஷன், சவுண்ட் சிஸ்டம், ஆன்-ரைடு வசதிகள் வழங்கும் டிஎப்டி தொடு திரையும் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1,67,500 ஆகும்.
electric scooter price
கோமகி நிறுவனம் இதை விட குறைந்த விலையில் எம்ஜி ப்ரோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சில நாட்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இந்த ஸ்கூட்டரில் 2.2 kW கிலோவாட் மற்றும் 2.7 kW கிலோவாட் கொண்ட LiFePO4 பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரியாக இது அமைந்துள்ளது.
இந்த பேட்டரியை ஸ்கூட்டரை நான்கு முதல் 5 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும். இரண்டு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.53,999ல் இருந்து தொடங்குகிறது.