புதுசா கார் வாங்க போறீங்களா? இன்னும் 20 நாளில் எகிறப்போகும் கார்களின் விலை
கார்களின் விலை உயர்வு பற்றி ஏற்கனவே எல்லா ஊடகங்கள் மூலமாகவும் அனைவருக்கும் தகவல் போய்ச் சேர்ந்துவிட்டது. கார் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது கசப்பான செய்திதான். முக்கியமா இஎம்ஐ முறையில் வாங்குறவங்களுக்கு இது கூடுதலான சுமை. எப்ப விலை ஏறுது? எவ்வளவு ஏறுதுன்னு தெரிஞ்சுக்கலாம்...

இந்தியாவில் கார்களின் விலை உயரும். கார் வாங்குவது கஷ்டமாகும். இதனால ரேட் இன்னும் அதிகமாகும். எந்த கார் எவ்வளவு ஏறுதுன்னு தெரிஞ்சுக்கோங்க. இந்த உயர்வு ஏப்ரல் 17ல இருந்து அமலுக்கு வரப்போகுது.
எவ்வளவு உயருது?
கியா கார்கள் விலை 3% உயர்கிறது. இந்த காரின் வடிவமைப்பு பார்க்க அட்ராக்டிவாக இருக்கும். நடுத்தர மக்கள் இந்த கார் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
டாடா கார் விலை 3% உயரும். டாடா கார்கள் நல்ல வலுவான கட்டமைப்பைக் கொண்ட கார்கள் என பெயர் பெற்றுள்ளன. மேலும் டாடா கார்கள் இந்தியர்களின் உணர்வுகளுடன் இணைந்த காராக கருதப்படுகிறது.
ரெனால்ட் கார் விலை 2% உயர்கிறது. மற்ற கார்களோடு ஒப்பிடும்போது இதில் உயர்வு கம்மி சொல்லலாம். BMW கார் விலை 3% உயர்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இந்த கார்களின் விலை உயர்வு தான் என்று சொன்னாலும் இந்த கார் மீதான மோகம் குறைந்ததாக இல்லை.
ஹூண்டாய் கார்
ஹூண்டாய் கார்களின் விலை 3% உயர்கிறது. இந்த கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாவே உள்ளது. இப்போது அனைத்து கார்களின் விலையும் கணிசமாக உயரப்போகிறது அதிகமாக விற்கின்ற மாருதி கார்கள். மாருதி சுசுகி கார்களின் விலை கூட அதிகமா 4% உயர்கிறது.