130 கிமீ ரேஞ்ச்.. ஜப்பானில் இருந்து அப்படியே வருது.. ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
ஹோண்டா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர் 130 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது மற்றும் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும்.
Honda U Go Electric Scooter
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டார்ஸ் விரைவில் இந்திய சந்தையில் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இது மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு வகையிலும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Honda
இதன் டிசைனிங், பேட்டரி பேக் மற்றும் பவர்ஃபுல் மோட்டார் ஆகியவையும் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இது 130 கிலோ மீட்டர் நீண்ட தூரம் மற்றும் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். இதில் 1.2 கிலோவாட் மின்சார மோட்டார் பயன்படுத்தப்படும் என்றும், இது ஸ்கூட்டரை 53 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க உதவும் என்றும் கூறுகின்றனர்.
U Go Electric Scooter
ஹோண்டா யூ கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற பல மேம்பட்ட அம்சங்களைப் பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் மொபைல் போன் இணைப்பு, புளூடூத் இணைப்பு, முன் டிஸ்க் பிரேக், டிரம் பிரேக், டியூப்லெஸ் டயர்கள், வசதியான செட், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளும் உள்ளன.
Electric Vehicles
அதேபோல ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர்கள் வரை நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்ட மிகப் பெரிய பேட்டரி பேக் இதில் காணப்படும். ஹோண்டாவின் யூ கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ஆனது இந்திய சந்தையில் ரூ.87,000 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் விலை குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது கூடுதல் விஷயமாகும்.
குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?