MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 100 கிமீ ஸ்பீடு; 114 கிமீ ரேஞ்ச்; அட! ரூ.1 லட்சத்துக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா?

100 கிமீ ஸ்பீடு; 114 கிமீ ரேஞ்ச்; அட! ரூ.1 லட்சத்துக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா?

Hero Vida V2 electric scooter: ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லைட், பிளஸ் மற்றும் புரோ என 3 விதமான மாடல்களில் இது களமிறங்கியுள்ளது. 

2 Min read
Author : Rayar A
| Updated : Dec 06 2024, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hero Vida V2 electric scooter

Hero Vida V2 electric scooter

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், அனைவரும் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாக எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. 

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் மவுசை கருத்தில்கொண்டு பல்வேறு நிறுவனங்களும் போட்டிபோட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ விடா வி2 (Hero Vidஅ வ்2 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
electric scooter sales in india

electric scooter sales in india

லைட், பிளஸ் மற்றும் புரோ என 3 விதமான மாடல்களில் இந்த ஸ்கூட்டரை களமிறக்கியிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முக்கியமே அதன் பேட்டரிதான். ஹீரோ விடா வி2 ஸ்கூட்டரை பொறுத்தவரை வி2 லைட் மாடலில் 2.2kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. வெறும் 3 மணி நேரம் 30 நிமிடங்களில் இந்த பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும்.

வி2 பிளஸ் மாடலில் 3.44kWh பேட்டரி பேக் தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. வி2 புரோ மாடலில் 3.94kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேட்டரிகளையும் 5 முதல் 6 மணி நேரத்துக்குள் 80 சதவீதம் சார்ஜ் செய்து விட முடியும். ரேஞ்ச் மற்றும் வேகத்தை பொறுத்தவரை  வி2 புரோ மாடல் மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதுவும் 40 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடும்.
 

34
electric scooter price

electric scooter price

இந்த மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 114 கிமீ வரை பயணிக்க முடியும். வி2 பிளஸ் மாடல் மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்க முடியும். வி2 லைட் மாடலை பொறுத்தவரை அதிகப்பட்சமாக மணிக்கு 69 கிமீ வேகத்தில் செல்லும். முழுமையான சார்ஜில் 64 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கும்.

ஹீரோ விடா வி2 ஸ்கூட்டரின் அனைத்து மாடல்களிலும் 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என ரைடிங் மோட்கள் உள்ளன. மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு ரெகன், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

44
electric scooter features

electric scooter features

ஹீரோ விடா வி2 ஸ்கூட்டரின் விலையை பொறுத்தவரை அனைவரும் வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில்தான் அமைந்துள்ளது. வி2 லைட் மாடலில் விலை வெறும் ரூ.96,000 மட்டுமே. வி2 பிளஸ் மாடலின் விலை ரூ.1.15 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வி2 புரோ மாடலின் விலை ரூ.1.35 லட்சத்தில் இருந்து தொடங்குறது.
 

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஹீரோ விடா V2
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Car Offers: ரூ.4.99 லட்சம் முதல் கார்கள்! தீபாவளி சிறப்புச் சலுகையில் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள்
Recommended image2
Best Selling Bikes: 6 மாதங்களில் 21 லட்சம் பைக்குகள் விற்பனை! இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட பைக் எது?
Recommended image3
715 கி.மீ ரேஞ்ச், 1156 hp பவர்: நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் மிரட்டலான 5 எலெக்ட்ரிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved