Sports Bike | 5 லட்சத்திற்குள் கிடைக்கும் சீறிப்பாயும் ஸ்போர்ட்ஸ் பைக்ஸ் இதோ!
இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, பல வசதிகளுடன் கூடிய பைக்குகள் Entry Level பிரிவில் வருகின்றன. 5 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்போர்ஸ் பைக்குகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாட்டில் வேகத்தில் ஆர்வம் கொண்ட இளம் ரைடர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக்குகள் எப்போதும் ஒரு பேரார்வம் இருக்கும். இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையானது நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில வருடங்களில் Entry Level பிரிவில் பல சலுகை மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய நிறைய பைக்ஸ் வந்துள்ளது. 5 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்போர்ஸ் பைக்குகளை இங்கே காணலாம்.
KTM RC 390
KTM RC 390 (கேடிஎம் ஆர்சி 390)
கேடிஎம் ஆர்சி 390 என்பது ஸ்ட்ரீட் ரோடு ஸ்போர்ட்ஸ் பைக், இது டிராக் ஃபோகஸ்டு மற்றும் ஏரோடைனமிக் ஸ்டைலிங்கின் செயல்திறன் கொண்டது. அடுத்த தலைமுறை பைக்கான RC 390 சமீபத்தில் வெளிநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்டைலிங் அடிப்படையில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 2025ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. KTM RC 390 ஆரம்ப விலை ரூ.3.18 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BMW G 310 R
BMW G 310 R
இந்த மோட்டார்சைக்கிள் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு ஸ்ட்ரீட்ஃபைட்டர். இது ஒரு கெத்தான வடிவமைப்பு மற்றும் ஸ்டைலான கிராபிக்ஸ் உடன் வருகிறது. இப்போது, இந்த பைக்கின் பதிப்பு BMW M 1000 R மூலம் ஈர்க்கப்பட்டு முற்றிலும் பிரமிக்க வைக்கிறது. BMW G 310 R விலை ரூ.2,85,000.
BMW G 310 R இன்ஜின்: இந்த மோட்டார்சைக்கிள் BS6 வகை பைக் மற்றும் இணக்கமான 313cc லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டார் கொண்டது. இது 9,500rpm இல் 34 PS மற்றும் 7,500rpm இல் 28 Nm உருவாக்கும்.
Kawasaki Ninja 300
Kawasaki Ninja 300 (கவாஸாகி நிஞ்ஜா 300)
கவாஸாகி நின்ஜா 300 இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் இருக்கும் நிஞ்ஜா பைக், இதன் ஆரம்ப விலை ரூ.3.43 லட்சம் முதல் கிடைக்கிறது. அடிப்படை அம்சங்களுடன் பல ஆண்டுகளாக மாறாமல் இன்னுமும் அதே இணை-இரட்டை என்ஜின்களுடன் வெளிவருகிறது. இது இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் இரட்டை சிலிண்டர் ஸ்போர்ட்ஸ் பைக் .
New Royal Enfield Classic 350 : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 2024-ன் விலை எவ்வளவு தெரியுமா?
கவாஸாகி நிஞ்ஜா 300 இன்ஜின்: இந்த பைக்கில் இன்னும் அதே 296சிசி பேரலல்-ட்வின் லிக்விட்-கூல்டு எஞ்சின் கொண்டது. ஸ்லிப்பர் கிளட்ச் உடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியருடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது