குடும்பம் குடும்பமா கியா காரை வாங்க போறாங்க.. சிஎன்ஜி-ன்னா சும்மாவா.!
கியா இந்தியா தனது கேரன்ஸ் MPVக்கு புதிய CNG வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற Lovato CNG கிட் உடன் வரும் இந்த மாடல், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

கியா கேரன்ஸ் சிஎன்ஜி
கியா இந்தியா தனது பிரபலமான கேரன்ஸ் MPVக்கு புதிய CNG வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் மிச்சமும் செலவு குறையும், இதனால் விலை உணர்வு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு கார் மேலும் பரவலான விருப்பம் பெறும். புதிய CNG கிட்டின் விலை 77,900 மற்றும் இதன் அடிப்படை பெட்ரோல் வேரியண்ட் விலை 10.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும். இந்த CNG கிட் அரசு அங்கீகாரம் பெற்ற Lovato DIO, மற்றும் 3 வருடங்கள் அல்லது 1,00,000 கிமீ வரை டெக்னிக்கல் வோராண்டி வழங்கப்படுகிறது.
கேரன்ஸ் எம்பிவி
கேரன்ஸ் CNG 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. இது 6 ஸ்பீட் மெனுவல் கேப்ஸ்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில், காரின் பாம்பர்கள், டோர் ஹேண்டில்கள், கியா டைகர் நோஸ் கிரில், ரியர் ஸ்பாய்லர், ஷார்க்-பின் ஆண்டெனா, ஹலஜன் ஹெட்லாம்ப் மற்றும் யில் விளக்குகள் போன்றவை உட்பட ஸ்டைலிஷ் தோற்றம் உள்ளது. காரின் பரிமாணம் 4,540mm நீளம், 1,800mm அகலம் மற்றும் 1,708mm உயரம் (ரூஃப் ரெயில்களுடன்) ஆகும். மேலும் 2,780mm வீல் பேஸ் உள்ளே போதுமான இடத்தை உறுதி செய்கிறது.
கேரன்ஸ் அம்சங்கள்
அரை-லெதரேட் இருக்கைகள், 60:40 ஸ்பிலிட் இரண்டாம் வரிசை இருக்கைகள் ஸ்லைடு, ரிலாக் மற்றும் தம்ஃபிள் செயல்பாடுகளுடன், 50:50 ஸ்பிலிட் மூன்றாம் வரிசை இருக்கைகள் முழு பிளாட்டில் சாய்வுத் திறன் கொண்டது. வண்டியின் உள் பகுதி சாத்தர்ன் பிளாக், கோகூன் பீஜ் மற்றும் நெவி நிறங்களில் வரும். 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிள், 6 ஸ்பீக்கர் ஆடியோ, வோய்ஸ் ரெகக்னிஷன் ஆகியவை பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுகின்றன என்றே கூறலாம்.
பாதுகாப்பு மற்றும் வசதிகள்
கேரன்ஸ் CNG முக்கிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக் ORVMகள், LED டர்ன் சுட்டிகள், ரியர்-வியூ கேமரா, ரியர் டோர் சன் ஷேட்கள், USB Type-C போர்ட்கள் ஆகியவை பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. 10 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன: 6 ஏர் பேக்கள், ESC, VSM, BAS, HAC, DBC, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ABS, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் உயர் நிலை TPMS உட்பட.