MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மின்சார ஸ்கூட்டர் விலை குறையுது.. மத்திய அரசு கொடுத்த சர்ப்ரைஸ்.. மக்கள் குஷி.!

மின்சார ஸ்கூட்டர் விலை குறையுது.. மத்திய அரசு கொடுத்த சர்ப்ரைஸ்.. மக்கள் குஷி.!

மத்திய அரசு 'PM e-Drive' திட்டத்தின் கீழ் மின்சார வாகன மானியத்தை நீட்டித்துள்ளது. இதன் மூலம், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் 2026 ஜூலை வரை தொடரும். இது நுகர்வோருக்கு விலை குறைப்பை ஏற்படுத்தும்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 30 2026, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மின்சார வாகன மானியம் 2026 வரை நீட்டிப்பு
Image Credit : Asianet News

மின்சார வாகன மானியம் 2026 வரை நீட்டிப்பு

மின்சார வாகனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசு, மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க ‘PM e-Drive’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய காலத்தை நீட்டித்துள்ளது. இதனால் மின்சார ஸ்கூட்டர், பைக் வாங்கும் சாதாரண மக்களுக்கு விலை குறைந்து பெரிய நிவாரணம் கிடைக்கிறது. குறிப்பாக பெட்ரோல் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.

25
மின்சார ஸ்கூட்டர் விலை குறையும்
Image Credit : Website/TVS

மின்சார ஸ்கூட்டர் விலை குறையும்

புதிய அறிவிப்பின் படி, மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியம் 2026 ஜூலை 31 வரை தொடரும். அதே நேரத்தில், இ-ரிக்ஷா மற்றும் e-கார்ட் வாகனங்களுக்கு 2028 மார்ச் 31 வரை சலுகை வழங்கப்படும். இதன் மூலம் அதிகமான மக்கள் எரிபொருள் வாகனங்களை விட்டு மின்சார வாகனங்களுக்கு மாறுவார்கள் என்பது அரசின் நோக்கம்.

Related Articles

Related image1
142 கிமீ ரேஞ்ச்..! 80 கிமீ ஸ்பீடு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகையே அதிரவிடும் விடா ஸ்பெஷல் எடிஷன்..!
Related image2
லைசென்ஸ் வேண்டாம்.. ரூ.60,000 மட்டுமே.. 120 கிமீ ஓடும் ஸ்கூட்டர் மக்களே
35
மானியம் நீட்டிப்பு அறிவிப்பு
Image Credit : Google

மானியம் நீட்டிப்பு அறிவிப்பு

இந்த திட்டத்திற்காக அரசு சுமார் ரூ.1,772 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் ஏற்கனவே ரூ.1,259 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 14 லட்சம் வாகனங்களுக்கு மட்டும் மானியம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த இலக்கு 24.8 லட்சம் வாகனங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் விற்பனையாகி இருப்பது இந்த துறையின் வேகமான வளர்ச்சியை காட்டுகிறது.

45
மின்சார வாகன வளர்ச்சிக்கு புதிய ஊக்கம்
Image Credit : Google

மின்சார வாகன வளர்ச்சிக்கு புதிய ஊக்கம்

மின்சார மூன்று சக்கர வாகனங்கள் பகுதியில் எதிர்பார்த்ததை விட அதிக விற்பனை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பிரிவில் தேவையும் அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. ஆனால் இ-ரிக்ஷா மற்றும் இ-கார்ட் வாகனங்களின் விற்பனை குறைவாக இருப்பதால், அந்த பிரிவுக்கான பட்ஜெட் ரூ.192 கோடியில் இருந்து சுமார் ரூ.50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

55
மின்சார ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்
Image Credit : Google

மின்சார ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்

மொத்தத்தில், மின்சார இருசக்கர வாகனங்களே அரசின் முக்கிய கவனமாக உள்ளது. மானியம் நீட்டிப்பு மூலம் விலை குறைந்து மக்கள் எளிதாக வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம் நிறுவனங்களுக்கும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும், பழைய ஸ்டாக்கை விற்பனை செய்யவும் கூடுதல் நேரம் கிடைக்கும். இது இந்தியாவில் மின்சார வாகன வளர்ச்சிக்கு பெரிய முன்னேற்றமாக அமையும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்சார ஸ்கூட்டர்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெறும் ரூ.60000 விலையில் 120 கிமீ ரேஞ்ச்..! மார்கெட்டை கிரங்கடிக்கும் Zelio X-Men+ 2026 வெர்ஷன்
Recommended image2
Budget SUV: 5 ஸ்டார் பாதுகாப்பில் செம்ம மைலேஜ்..! விலை குறைந்த SUV கார்கள்..
Recommended image3
பட்ஜெட் விலையில் சொகுசு பயணம்! - 6 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள்!
Related Stories
Recommended image1
142 கிமீ ரேஞ்ச்..! 80 கிமீ ஸ்பீடு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகையே அதிரவிடும் விடா ஸ்பெஷல் எடிஷன்..!
Recommended image2
லைசென்ஸ் வேண்டாம்.. ரூ.60,000 மட்டுமே.. 120 கிமீ ஓடும் ஸ்கூட்டர் மக்களே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved