MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Electric Scooter Subsidy: இஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா? ரூ.5,000 வரை மானியம்.. எப்படி பெறுவது?

Electric Scooter Subsidy: இஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா? ரூ.5,000 வரை மானியம்.. எப்படி பெறுவது?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு மத்திய அரசின் PM E-DRIVE திட்டம் மூலம் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை கிடைக்கும். எந்த ஸ்கூட்டர்களுக்கு இந்த மானியம் கிடைக்கும், அதை வாங்கும்போது எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!

3 Min read
Author : Velmurugan s
Published : Oct 01 2026, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மின்சார ஸ்கூட்டருக்கு மானியம்..
Image Credit : Asianet News

மின்சார ஸ்கூட்டருக்கு மானியம்..

பெட்ரோல் விலை உயர்வு, தினசரி பயணச் செலவு என பல காரணங்களால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு மத்திய அரசின் PM E-DRIVE திட்டம் மூலம் விலைச் சுமையை ஓரளவு குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, தகுதி பெறும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு தற்போது ஒரு kWh பேட்டரி திறனுக்கு ரூ.2,500 என்ற அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூ.5,000 வரை கிடைக்கும்.

ரூ.5,000 மானியம் எப்படி கணக்கிடப்படுகிறது?

இந்த திட்டத்தில் மானியம் ஸ்கூட்டரின் மொத்த விலையை வைத்து மட்டும் கணக்கிடப்படுவதில்லை. அதன் பேட்டரி திறன் (kWh) முக்கியமானதாகும்.

உதாரணமாக, தகுதியான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 kWh பேட்டரி இருந்தால், ரூ.2,500 × 2 = ரூ.5,000 என்ற அளவில் ஊக்கத்தொகை கணக்கிடப்படும்.

அதே நேரத்தில், இந்த ஊக்கத்தொகைக்கு ஒரு வாகனத்திற்கு ரூ.5,000 என்ற உச்சவரம்பு உள்ளது. மேலும், ஊக்கத்தொகை வாகனத்தின் ex-factory விலையில் 15 சதவீதத்தைத் தாண்டக்கூடாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எல்லா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் கிடைக்குமா?
Image Credit : internet

எல்லா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் கிடைக்குமா?

இல்லை. இது முக்கியமான விஷயம்.

PM E-DRIVE திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் e-2W மாடல்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை கிடைக்கும். மேலும், தகுதியான வாகனத்தின் அதிகபட்ச ex-factory விலை ரூ.1.50 லட்சம் என்ற வரம்பும் உள்ளது. எனவே, நீங்கள் வாங்கும் ஸ்கூட்டர் இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் சரிபார்ப்பது அவசியம்.

மானியத்தை பெற தனியாக அலைய வேண்டுமா?

இதுதான் இந்த திட்டத்தின் முக்கியமான வசதி.

PM E-DRIVE திட்டத்தில் தகுதியான வாடிக்கையாளருக்கு ஊக்கத்தொகை பொதுவாக வாகனத்தின் கொள்முதல் விலையில் முன்கூட்டியே குறைக்கப்பட்ட தொகையாக வழங்கப்படுகிறது. பின்னர் அந்த தொகையை சம்பந்தப்பட்ட வாகன உற்பத்தியாளருக்கு மத்திய அரசு திருப்பிச் செலுத்துகிறது.

அதாவது, வாடிக்கையாளர் தனியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று மானியத் தொகையைப் பெற வேண்டிய நடைமுறை அல்ல. வாங்கும் நேரத்திலேயே தகுதி மற்றும் திட்ட நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட வேண்டும்.

34
ஆதார் e-KYC முக்கியம்
Image Credit : Website/konarc

ஆதார் e-KYC முக்கியம்

PM E-DRIVE திட்டத்தில் வாடிக்கையாளருக்கான e-Voucher நடைமுறையும் உள்ளது. திட்டத்தின் கீழ் e-KYC மற்றும் Aadhaar Face Authentication மூலம் e-Voucher உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அதைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு அனுப்பப்படும் என அதிகாரப்பூர்வ PM E-DRIVE தகவல் தெரிவிக்கிறது.

எனவே, ஸ்கூட்டர் வாங்கும்போது உங்கள் Aadhaar விவரங்கள், மொபைல் எண் மற்றும் வாகனப் பதிவு தொடர்பான தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வது முக்கியம்.

2026-ல் முக்கியமான மாற்றம்

முன்னதாக PM E-DRIVE திட்டத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை காலக்கெடு 31 ஜூலை 2026 என இருந்தது. ஆனால், 10 ஆகஸ்ட் 2026 அன்று வெளியான திருத்தத்தின் மூலம் e-2W பிரிவுக்கான திட்ட காலம் 31 மார்ச் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், e-2W பிரிவுக்கான மொத்த ஆதரவு எண்ணிக்கையும் 45,79,120 வாகனங்கள் என உயர்த்தப்பட்டு, இந்தப் பிரிவுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2,767 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

44
ரூ.5,000 மானியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Kinetic

ரூ.5,000 மானியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்கள் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்:

• PM E-DRIVE திட்டத்தில் தகுதியான மாடலா என்பதை சரிபார்க்கவும்.

• வாகனத்தின் ex-factory விலை ரூ.1.50 லட்சத்திற்குள் உள்ளதா பார்க்கவும்.

• பேட்டரி திறன் அடிப்படையில் கிடைக்கும் ஊக்கத்தொகையை உறுதி செய்யவும்.

• அதிகபட்ச ஊக்கத்தொகை ரூ.5,000 என்பதை கவனத்தில் கொள்ளவும்.

• Aadhaar e-KYC மற்றும் e-Voucher நடைமுறையை முடிக்கவும்.

• வாகனப் பதிவு மற்றும் ஆவணங்களில் தவறு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

• டீலரிடம் invoice-ல் PM E-DRIVE incentive சரியாகக் கழிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

வாங்கும் முன் இதை மட்டும் மறக்காதீங்க!

PM E-DRIVE ஒரு fund-limited scheme. அதாவது, திட்டத்திற்கான ஒதுக்கப்பட்ட நிதி முன்கூட்டியே தீர்ந்துவிட்டால், 31 மார்ச் 2028 என்ற காலக்கெடுவுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட திட்டப் பிரிவு நிறுத்தப்படலாம் என்று மத்திய அரசின் திருத்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

எனவே, “2028 வரை மானியம் கண்டிப்பாக கிடைக்கும்” என்று மட்டும் நினைக்காமல், நீங்கள் வாங்கும் நேரத்தில் மாடல் தகுதி, பதிவு, e-Voucher மற்றும் திட்ட நிதி நிலை ஆகியவற்றை சரிபார்ப்பது அவசியம்.

மத்திய அரசின் PM E-DRIVE திட்டம் மூலம் ஏற்கனவே லட்சக்கணக்கான எலக்ட்ரிக் வாகனங்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளன. 22 ஜூலை 2026 நிலவரப்படி மட்டும் 20,56,831 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதனால், இனி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், ஸ்கூட்டரின் விலையை மட்டும் பார்க்காமல் PM E-DRIVE மானியத்திற்கு அந்த மாடல் தகுதியானதா என்பதையும் கட்டாயம் சரிபார்த்து வாங்குவது முக்கியம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்சார ஸ்கூட்டர்
சிறந்த விலையில் மின்சார ஸ்கூட்டர்
ஆட்டோ
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
36.47 கி.மீ மைலேஜ் தரும் மாருதி ஆட்டோமேட்டிக் CNG கார்கள்: பட்ஜெட்டுக்கு ஏற்ற பெஸ்ட் சாய்ஸ் எது?
Recommended image2
ABS பிரேக், 60 கி.மீ மைலேஜ்: மழைக்கால பயணத்திற்கு ஏற்ற டாப் 5 டூ-வீலர்கள்!
Recommended image3
Bamboo Petrol : இனி பெட்ரோல்-டீசல் வேண்டாம்... வரப்போகுது மூங்கில் பெட்ரோல்! ஒரு லிட்டர் 65 ரூபாய்தானா?
Related Stories
Recommended image1
Honda QC3: அதிக பொருட்கள் வைக்கலாம்.. 145 கி.மீ ரேஞ்ச்.. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் விலை எவ்ளோ? முழு விபரம்
Recommended image2
Ampere Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.1 கூட தேவையில்லையா? 5 ஆண்டு உத்தரவாதத்துடன் வரும் மாடல்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved