ரூ.4 லட்சத்திற்கு கீழ் ரேட் இருந்தா.. இந்த காரை யாரு தான் வாங்க மாட்டாங்க!
ஜிஎஸ்டி 2.0 மற்றும் தள்ளுபடிகளால் மாருதி சுசுகியின் கார்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால், டிசம்பர் மாதத்தில் இக்கார்களின் விற்பனை 92% வளர்ச்சி கண்டு, மினி செக்மென்ட் மீண்டும் சந்தையில் மவுசு பெற்றுள்ளது.

மலிவு விலை கார்
மாருதி சுசுகியின் மலிவு விலை கார் மீண்டும் சந்தையில் மவுசு பெற்றுள்ளது. பல மாதங்களாக சரிவடைந்த விற்பனை, ஜிஎஸ்டி 2.0 காரணமாக விலை குறைக்கப்பட்டதையடுத்து டிசம்பர் மாதத்தில் திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக Alto K10 மற்றும் S-Presso போன்ற மினி செக்மென்ட் கார்களுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மாருதி சுசுகி மினி செக்மென்ட்
டிசம்பர் 2025-ல் மாருதி சுசுகி மினி செக்மென்டில் மொத்தம் 14,225 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 92 சதவீத வளர்ச்சியாகும். இந்த விற்பனையில் சுமார் 10,800 யூனிட்கள் Alto K10 ஆகும். S-Presso கார் விற்பனை 3,000 யூனிட்டுகளை கடந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த செக்மென்டுக்கான அதிகபட்ச விற்பனை இதுவே.
ஆல்டோ கே10
Alto K10 மற்றும் S-Presso இணைந்து மாருதியின் மொத்த விற்பனையில் 6.2 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன. இதற்கிடையில், மாருதியின் காம்பாக்ட் செக்மென்ட் கார்களான Dzire, Baleno, Wagon R, Swift, Celerio மற்றும் Ignis ஆகியவற்றின் விற்பனையும் உயர்ந்துள்ளது. 2025 முழுவதும் அதிகம் விற்பனையான கார் Dzire ஆக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டும் Baleno 22,108 யூனிட்டுகள் விற்பனையாகி முன்னிலையில் இருந்தது.
கூடுதல் தள்ளுபடிகள்
GST குறைப்பைத் தொடர்ந்து Alto மற்றும் S-Presso கார்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. இதனால் இக்கார்களின் விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக குறைந்தது. தற்போது Alto K10-ன் தொடக்க விலை ரூ.3.70 லட்சமாகவும், S-Presso ரூ.3.50 லட்சமாகவும் குறைந்துள்ளது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இந்த கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 2026-லும் இந்த விற்பனை வேகம் தொடருமா என்பது அனைவரும் கவனமாக உள்ளது.

