இந்தியாவில் விற்கும் சிறந்த 5 பேமிலி கார்கள்; முழு லிஸ்ட் இதோ!
2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த குடும்ப கார்கள் பற்றி பார்க்கலாம். மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முதல் ஸ்டைலான கியா செல்டோஸ் வரை, பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற பிற மாடல்களையும், அவற்றின் விலைகளையும் பார்க்கலாம்.
Best Family Cars in India 2024
குடும்ப கார் வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் பட்ஜெட், அம்சங்கள், மாதிரி விருப்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த வடிவமைப்பு உட்பட பல காரணிகளை கருத்தில் கொள்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் இந்திய வாகன சந்தை இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் பல்வேறு சிறந்த குடும்ப கார்களை வழங்குகிறது. நீங்கள் காம்பாக்ட் செடான், வலுவான SUV அல்லது பல்துறை ஹேட்ச்பேக்கைத் தேடுகிறீர்களானால், சிறந்த குடும்ப கார்கள் பட்டியலை இங்கு பார்க்க்கலாம்.
Maruti Suzuki Swift
1. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (2024)
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், அதன் மலிவு விலை, செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகியவற்றின் காரணமாக இந்திய குடும்பங்கள் மத்தியில் தொடர்ந்து பிடித்தமானதாக உள்ளது. இதன் விலையைப் பொறுத்தவரை ₹6.5 லட்சம் முதல் ₹9.65 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதன் இன்ஜின் 1.2-லிட்டர் Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் 82 PS ஆற்றலையும் 112 Nm டார்க்கையும் வழங்குகிறது. மேனுவல் வேரியண்டிற்கு 24.8 கிமீ/லி மற்றும் தானியங்கி பதிப்பிற்கு 25.72 கிமீ/லி மைலேஜ் ஆகும்.
Tata Nexon
2. டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான், அதன் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்திற்குப் பிறகு விற்பனையில் சிறிது சரிவைச் சந்தித்தாலும், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைத் தேடும் குடும்பங்களுக்கு இது ஒரு திடமான தேர்வாக உள்ளது. இதன் விலை ₹7.99 லட்சத்தில் தொடங்குகிறது. 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் உடன் வருகிறது. பல சவால்கள் இருந்தபோதிலும் கடந்த மாதம் 11,457 யூனிட்கள் விற்றது.
Kia Seltos
3. கியா செல்டோஸ் (ஃபேஸ்லிஃப்ட்)
கியாவின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி பிரிவில் புதிய ஆற்றலைக் கொண்டு வந்து, ஆடம்பர மற்றும் நடைமுறைச் சமநிலையை வழங்குகிறது என்றே கூறலாம். இதன் விலையைப் பற்றி பார்க்கும் போது ₹11.99 லட்சம் முதல் ₹18.27 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். அதன் டீசல் எஞ்சினுக்கான 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
Hyundai Alcazar
4. ஹூண்டாய் அல்கசார் (ஃபேஸ்லிஃப்ட்)
ஹூண்டாய் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட அல்கசார் மூன்று வரிசை SUV ஆகும், இது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வசதியை இணைக்கிறது. 1.5L டீசல் மற்றும் 1.5L டர்போ பெட்ரோல் என்ஜின்கள், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் உடன் வருகிறது. 70 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பிற்காக நிலை 2 ADAS உடன் வருகிறது.
Mahindra XUV300
5. மஹிந்திரா XUV300
மஹிந்திரா XUV300, சப்-காம்பாக்ட் SUV பிரிவில் ஈர்க்கக்கூடிய விற்பனை எண்ணிக்கையுடன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் விலை ₹7.49 லட்சத்தில் தொடங்குகிறது. கடந்த மாதம் 10,000 யூனிட் விற்பனையை எட்டியுள்ளது. வெவ்வேறு விருப்பங்களை பூர்த்தி செய்ய மூன்று எஞ்சின் உள்ளமைவுகளில் கிடைக்கும். இதில் உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உங்கள் டிரைவ்களை வசதியுடனும் ஸ்டைலுடனும் அனுபவியுங்கள்.
ரூ.5 லட்சம் கூட இல்லை.. பேமிலியா அசால்ட்டா டூர் போக ஏற்ற 3 பட்ஜெட் கார்கள்!