பேமிலிக்கு பெஸ்ட் கார்கள்.. இந்தியாவின் மலிவு விலையிலான 7 சீட்டர் டீசல் எஸ்யூவிகள்
இந்தியாவில் அதிக டார்க், பவர் மற்றும் மைலேஜுக்காக டீசல் 7 சீட்டர் எஸ்யூவிகள் விரும்பப்படுகின்றன. இது குடும்ப பயணங்களுக்கு ஏற்ற சிறந்த எஸ்யூவியை தேர்வு செய்ய உதவுகிறது.

டீசல் எஸ்யூவி
இந்திய வாடிக்கையாளர்கள் அதிக டார்க், சிறந்த பவர், மேலும் எரிபொருள் சிக்கனத்திற்காக டீசல் எஸ்யூவிகளை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக 7 சீட்டர் எஸ்யூவிகள் குடும்பத்துடன் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருப்பதால், மஹிந்திரா மற்றும் டாடா போன்ற நிறுவனங்கள் இப்பகுதியில் இன்னும் வலுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. நாட்டின் மலிவு விலையிலான சில டீசல் எஸ்யூவிகளை பார்க்கலாம்.
மஹிந்திரா பொலிரோ
முதலில், மஹிந்திரா பொலிரோ. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான 7 சீட்டர் எஸ்யூவியாகும். ரூ.9.28 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த மாடல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 75 bhp பவரையும் 210 Nm டார்க்கையும் தருகிறது. 16 கிமீ/லிட்டர் மைலேஜ் அளிக்கும் இந்த வாகனம், வலுவான வடிவமைப்பு மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுக்காக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மஹிந்திரா பொலிரோ நியோ
அதே போல மஹிந்திரா பொலிரோ நியோ, பொலிரோவின் நவீன வடிவம். ரூ.9.43 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த எஸ்யூவி, 100 bhp பவரை உருவாக்கும் டீசல் இன்ஜினுடன் வருகிறது. சுமார் 17 கிமீ/லிட்டர் மைலேஜ் தரும் இது, LED லைட்கள், டஸ்கிரீன், ரியர் கேமரா போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. மூன்றாவது வரிசை குழந்தைகள் மற்றும் குறுகிய பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ
அடுத்து மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N. கிளாசிக் மாடல் ரூ.13.03 லட்சம் விலையில் கிடைக்கிறது. 130 bhp பவர் தரும் இந்த மாடல், வலுவான சஸ்பென்ஷனுக்காக பிரபலமானது. ஸ்கார்பியோ N, 200 bhp சக்தி, பனோரமிக் சன்ரூஃப், ADAS உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் ரூ.13.61 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
டாடா சஃபாரி
பிரீமியம் பிரிவில் டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா XUV700 முன்னணி மாடல்களாக உள்ளன. சஃபாரி ரூ.14.66 லட்சம் விலையில் கிடைக்கிறது, 170 bhp பவருடன் 6 மற்றும் 7-சீட்டர் விருப்பங்களைக் கொண்டுள்ளது. அதே சமயம், XUV700 ரூ.14.18 லட்சத்திலிருந்து தொடங்கி, 200 bhp பவர், ADAS, 360° கேமரா, பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களுடன் தொழில்நுட்பம் மற்றும் ஆடம்பரத்தை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.