ரூ.70,000-க்கு 90 கிமீ மைலேஜ் தரும் பைக்.. இந்தியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
குறைந்த விலை, அதிக மைலேஜ் கொண்ட பஜாஜ் பிளாட்டினா, எளிமையான வடிவமைப்பு மற்றும் பயனுள்ள அம்சங்களால் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 70 கிமீ முதல் 90 கிமீ வரை மைலேஜ் தரும் இந்த பைக், தினசரி பயணத்திற்கு ஏற்றதாக உள்ளது.

அதிக மைலேஜ் பைக்
பஜாஜ் பிளாட்டினா என்ற பெயரை கேட்டவுடனேயே மனதில் முதலில் வருவது ‘குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்’ என்பதே. 2006-ஆம் ஆண்டு அறிமுகமான இந்த பைக், இன்று வரை தனது இடத்தை பிடித்திருக்கிறது என்பதே அதிசயம். எவ்வளவு போட்டிகள், எவ்வளவு புதிய டிரெண்டுகள் வந்தாலும், பிளாட்டினாவின் எளிமையான வடிவமைப்பு மற்றும் பயனுள்ள அம்சங்கள்தான் அதை மக்கள் மனதில் நிலைநிறுத்தி இருக்கிறது. அலுவலகத்திற்குப் போகும் நபர், கல்லூரி மாணவர், சிறு தொழில் செய்வோர் என யார் வேண்டுமானாலும் தினசரி பயணத்திற்கு பிளாட்டினாவை தேர்வு செய்கிறார்கள்.
பாஜாஜ் பிளாட்டினா விலை
இந்த பைக்கின் முக்கிய பலம் குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிமீ முதல் அதிகபட்சம் 90 கிமீ வரை ஓடுகிறது. அதனால், எவ்வளவு பெட்ரோல் விலை உயர்ந்தாலும் அது சுமையாக இருக்காது. முழு டேங்க் (11 லிட்டர்) நிரப்பினால் சுமார் 700 – 800 கிமீ வரை எளிதில் பயணம் செய்யலாம். தற்போதைய விலை பிளாட்டினா 100 மாடல் ரூ.70,643, பிளாட்டினா 110 மாடல் ரூ.74,694 (எக்ஸ்-ஷோரூம்).
பாஜாஜ் பிளாட்டினா மைலேஜ்
டிசைன் மிகவும் எளிமையானதுதான். ஆனால் அந்த எளிமையே ஓட்டும்போது சுகமாக உணர வைக்கிறது. நீளமான சீட், மென்மையான சஸ்பென்ஷன், குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை சேர்ந்து இதை மக்கள் விரும்பும் பைக்காக மாற்றி இருக்கிறது. 102cc 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் DTS-i எஞ்சின் தினசரி தேவைக்குத் தேவையான சக்தியையும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் தருகிறது. நகர போக்குவரத்து நெரிசலில் இருந்தாலும், கிராமப்புற சாலைகளில் இருந்தாலும் எளிதில் செல்கிறது.
பாஜாஜ் பிளாட்டினா அம்சங்கள்
இந்த பைக்கின் சீட் உயரம் 807 மில்லிமீட்டர் மட்டுமே. அதனால் இளம் வயதினர் முதல் மூத்தவர்கள் வரை எவரும் சிரமமின்றி ஓட்ட முடியும். எடை வெறும் 117 கிலோ என்பதால் ஹேண்ட்லிங் மிகவும் லேசாக இருக்கும். ஒரு கையால் கூட திருப்ப முடியும். கியர் பொசிஷன் இன்டிக்கேட்டர் போன்ற அம்சம் புதிய ரைடர்களுக்கு கூட தெளிவாக உதவுகிறது.
மைலேஜ் கிங் பைக்
முன்புற ஹாலஜன் ஹெட்லைட், அழகான LED டே-டைம் ரன்னிங் லைட்ஸ், USB சார்ஜிங் போர்ட் போன்றவை பயணிகளை இன்னும் சுலபமாக்குகின்றன. டெலிஸ்கோபிக் ஃபோர்க் (135 மிமீ) மற்றும் SNS ரயர் சஸ்பென்ஷன் (110 மிமீ) நீண்ட பயணங்களிலும் சுகமாக வைத்திருக்கிறது. இதனால் தான் பிளாட்டினா இன்னும் ‘மைலேஜ் கிங்’ என்று தெரிகிறது. எத்தனை புதிய பைக்குகள் வந்தாலும், நம்பிக்கையை வெல்லும் பைக் பஜாஜ் பிளாட்டினாதான்.