- Home
- Auto
- Ather Konarc : EV மார்க்கெட்டை தெறிக்கவிட வந்தாச்சு ஏத்தர் கொனார்க்! மேஜிக் கீ முதல் ஏர்வாக் வரை இம்புட்டு வசதிகளா?
Ather Konarc : EV மார்க்கெட்டை தெறிக்கவிட வந்தாச்சு ஏத்தர் கொனார்க்! மேஜிக் கீ முதல் ஏர்வாக் வரை இம்புட்டு வசதிகளா?
Ather Konarc EV Launched : ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தங்களது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டரான 'ஏத்தர் கொனார்க்' மாடலை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செஞ்சிருக்காங்க. ஆட்டோ ஹோல்டு, பார்க் அசிஸ்ட், மேஜிக் கீனு ஏகப்பட்ட புது ஃபீச்சர்ஸ் இதுல இருக்கு.

Ather Konarc EV Launched
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதுசா ஒரு மாடலை களமிறக்கி இருக்காங்க. தங்களோட 4வது ஆண்டு கம்யூனிட்டி தினத்தை முன்னிட்டு, 'ஏத்தர் கொனார்க்' (Ather Konarc) அப்படிங்கிற புது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவுல அறிமுகம் செஞ்சிருக்காங்க. தினசரி பயன்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்ட புது EL பிளாட்ஃபார்மையும் கொனார்க் மாடலோட சேர்த்து அறிமுகப்படுத்தி இருக்காங்க. இதுல இருக்குற கொனார்க் S 161 மாடல், ஒரு முறை சார்ஜ் செஞ்சா 161 கிலோமீட்டர் வரைக்கும் ரேஞ்ச் கொடுக்கும். ஆட்டோ ஹோல்டு, பார்க் அசிஸ்ட், மேஜிக் கீனு நிறைய சூப்பரான ஃபீச்சர்ஸ் இந்த ஸ்கூட்டர்ல இருக்கு.
Ather EL01: கம்மி விலையில் அதிக மைலேஜ் தரும் புதிய ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ள ஏத்தர்!
ஒரு லட்ச ரூபாய்க்கு கொனார்க் S 100
இப்போதைக்கு S மற்றும் Z அப்டீங்கிற ரெண்டு வேரியண்ட்கள்ல ஏத்தர் கொனார்க் வருது. இதுல S சீரிஸ்ல இருக்குற மூணு மாடல்களுக்கான விலையை மட்டும் கம்பெனி அறிவிச்சிருக்காங்க. கொனார்க் S 100 மாடலோட ஆரம்ப விலை ரூ.99,999. அதேபோல S 125 மாடலுக்கு ரூ.1,21,999, S 161 மாடலுக்கு ரூ.1,44,999 என விலை நிர்ணயம் செஞ்சிருக்காங்க. இது எல்லாமே எக்ஸ்-ஷோரூம் விலைதான். எதிர்காலத்துல 200 கிலோமீட்டர் ரேஞ்ச் கொடுக்கிற மாடலையும் கொனார்க் சீரிஸ்ல கொண்டு வர கம்பெனி பிளான் பண்ணிருக்காங்க. 125 கி.மீ, 161 கி.மீ ரேஞ்ச் கொடுக்கிற கொனார்க் Z மாடல்களையும் பின்னாடி அறிமுகம் செய்யப்போறாங்க. Z சீரிஸ்க்கான விலையை கம்பெனி இன்னும் அறிவிக்கல.
2027-ல் இன்னும் நிறைய மாடல்கள்
கொனார்க் S 125, S 161 மாடல்களுக்கான டெலிவரி செப்டம்பர் மாசத்துல தொடங்கும்னு எதிர்பார்க்கப்படுது. ஆனா, S 100 மாடல் 2027-ம் வருஷத்தோட முதல் காலாண்டுலதான் மார்க்கெட்டுக்கு வரும். 200 கி.மீ ரேஞ்ச் கொடுக்கிற S சீரிஸ் மாடலை 2027-ம் வருஷத்தோட மூணாவது காலாண்டுல அறிமுகம் செய்ய பிளான் பண்ணிருக்காங்க. Z சீரிஸ் மாடல்கள் 2027-ம் வருஷத்தோட ரெண்டாவது காலாண்டுல வர வாய்ப்பிருக்கு.
161 கி.மீ வரைக்கும் ரேஞ்ச்
ஏத்தர் நிறுவனத்தோட புது EL பிளாட்ஃபார்மை அடிப்படையா வெச்சு உருவான முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த கொனார்க்தான். சுமார் 2.6 மில்லியன் கிலோமீட்டர் ஓட்டிப் பார்த்த டேட்டாவை வெச்சுதான் இந்த பிளாட்ஃபார்மை உருவாக்கி இருக்கிறதா கம்பெனி சொல்றாங்க. கொனார்க் S 100 மாடல் 2.1 kWh பேட்டரியோடவும், S 125 மாடல் 2.7 kWh பேட்டரியோடவும், S 161 மாடல் 3.5 kWh பேட்டரியோடவும் வருது. S 100 மாடல் 4 kW பீக் பவர் மற்றும் 16 Nm டார்க் திறனை கொடுக்கும். S 125, S 161 மாடல்கள் 4.7 kW பீக் பவர் மற்றும் 16 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த மூணு மாடல்களுமே அதிகபட்சமா 70 கி.மீ வேகத்துல போகக்கூடியவை.
பார்க்கிங் செய்ய பார்க் அசிஸ்ட்
தினசரி பயன்பாட்டை ரொம்ப ஈஸியாக்குற நிறைய ஃபீச்சர்ஸோட கொனார்க் வருது. மோட்டார் உதவியோட ஸ்கூட்டரை பின்னாடி நகர்த்த பார்க் அசிஸ்ட் வசதி உதவும். வண்டியை நிறுத்துனதுக்கு அப்புறம் அதே இடத்துல நிக்க வைக்க ஆட்டோ ஹோல்டு சிஸ்டம் பயன்படும். Z வேரியண்ட்ல AEBS வசதியும் கிடைக்கும். எலக்ட்ரானிக் கண்ட்ரோல் மூலமா பிரேக்கிங்கை மேம்படுத்தவும், வண்டி நிக்கிற தூரத்தை குறைக்கவும், சடனா பிரேக் பிடிக்கும்போது பின் சக்கரம் லாக் ஆகுறதை தடுக்கவும் இந்த சிஸ்டம் உதவும்னு கம்பெனி சொல்றாங்க.
ஆப் மூலமா பூட் ஓபன் பண்ணலாம்
மேஜிக் கீ சிஸ்டம் மூலமா ஏத்தர் ஆப்பை பயன்படுத்தி ஸ்கூட்டரோட பூட் ஸ்பேஸை ஓபன் பண்ண முடியும். கொனார்க் Z 161 மாடல்ல இந்த சிஸ்டத்தோட சேர்த்து ஆட்டோ-பாப் ஃபீச்சரும் கிடைக்கும். இதன் மூலமா பூட் ஸ்பேஸ் தானாவே ஓபன் ஆகிடும்.
கூகுள் மேப்ஸ் மற்றும் வாட்ஸ்அப்
கொனார்க் Z மாடலோட டேஷ்போர்டுல கூகுள் மேப்ஸ், வாட்ஸ்அப் வசதிகள் கிடைக்கும். ஸ்கூட்டர் சும்மா நிக்கும்போது கிரிக்கெட் ஸ்கோர் பார்க்குற வசதியும் இதுல இருக்கு. ஏத்தர் கனெக்ட் சப்ஸ்கிரிப்ஷன் மூலமா திருட்டு அலர்ட், டோ அலர்ட், ரைடு ஸ்டேட்டஸ், ஃபைண்ட் மை ஸ்கூட்டர், ரிமோட் சார்ஜிங் ஸ்டேட்டஸ், OTA அப்டேட்ஸ் மாதிரியான வசதிகளும் கிடைக்கும். டாப் வேரியண்ட்ல வெஹிக்கிள் ஃபெயில்சேஃப் வசதியும் கொடுத்திருக்காங்க. S 125, S 161 மாடல்கள்ல ஏர்வாக் ஃபீச்சரும் கிடைக்கும்.
Ather Voice on Ather: பேசினாலே போதும்.. ஸ்கூட்டரைத் தொடாமலேயே கட்டுப்படுத்தும் ஏதரின் புதிய அம்சம்

