MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • அமேசான் சேல்; 1 லட்சம் ரூபா எலக்ட்ரிக் பைக் வெறும் 49,000 தான் - இன்னும் பல அதிரடி அஃபர்ஸ் இருக்கு!

அமேசான் சேல்; 1 லட்சம் ரூபா எலக்ட்ரிக் பைக் வெறும் 49,000 தான் - இன்னும் பல அதிரடி அஃபர்ஸ் இருக்கு!

Discount for Electric Bike : அமேசான், இந்த 2024ல் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூபாய் 20,000 வரை தள்ளுபடி மற்றும் சிறந்த கார் மற்றும் பைக் ஆக்சஸெரீகளுக்கு 80% வரை பெரிய தள்ளுபடி வழங்குகிறது.

2 Min read
Ansgar R
Published : Oct 17 2024, 07:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Electric Scooters

Electric Scooters

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் இப்பொது அமலில் உள்ளது. அதில், சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களுக்கு சுமார் 20,000 வரை தள்ளுபடியுடன் அற்புதமான சலுகைகளை வழங்குகிறது அமேசான் நிறுவனம். மேலும், சிறந்த பிராண்டுகளின் சிறந்த கார் மற்றும் பைக்குகளின் பாகங்கள் மீது 80% வரை தள்ளுபடியை நீங்கள் பெறமுடியும். 

தங்களுடைய புதிய ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் மூலம் தங்கள் பயணத்தை மேம்படுத்த விரும்பும் வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என்றே கூறலாம். மேலும், பிரீமியம் டாஷ் கேம்கள், திறமையான டயர் இன்ஃப்ளேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய கருவிகள் உட்பட பல ஈர்க்கக்கூடிய பொருட்கள் இந்த முரையில் அதிரடி விலை குறைப்பில் கிடைக்கிறது.

Diwali Offer: இந்த காருக்கு மட்டும் ரூ.4.4 லடசம் தள்ளுபடியா? எந்தெந்த வண்டிக்கு எவ்வளவு தள்ளுபடி தெரியுமா?

24
E Bikes offer Sale

E Bikes offer Sale

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 

AMO Electric Bike Inspirer EV பைக் சுமார் 68,000 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், இந்த அமேசான் சேலில் சுமார் 26 சதவிகிதம் விலை குறைக்கப்பட்டு வெறும் 49,890 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. EMI (மாதம் 2500 ரூபாய்) மற்றும் பிற அடிப்படை சலுகைகளும் இதில் உள்ளது.

OLA S1 Pro Electric Scooter, இப்பொது சந்தையில் அதிக அளவில் வரவேற்பை பெரும் எலக்ட்ரிக் வண்டிகளில் ஓலாவிற்கு நல்ல மவுசு இருந்து வருகின்றது. அவ்வப்போது ஓலா குறித்த சில சர்ச்சைகள் "வெடித்தாலும்", உண்மையில் இந்த வாகனத்திற்கான வரவேற்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இந்த OLA S1 ப்ரோ இப்பொது 1.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், அமேசானில் சுமார் 1.2 லட்சத்திற்கு விற்பனையாகி வருகின்றது. 

Green Invicta Electric Scooter, வாகன சந்தையில் மெல்ல மெல்ல முன்னேறி வரும் க்ரீன் இன்விக்டா நிறுவனம் தனது வண்டிகளை அதிரடி விலை குறைப்பில் அமேசான் மூலம் விற்பனை செய்கிறது. அந்த வகையில் 60 கிலோமீட்டர் ரேஞ்சு கொண்ட, 95,000 ரூபாய் விலை உள்ள Green Invicta Electric Scooter இப்பொது 44,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

34
Green Udaan Bike

Green Udaan Bike

Green Udaan எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. அன்றாட போக்குவரத்துக்கு என்பதை தாண்டி, குறிப்பாக வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் அறிமுகமாகியுள்ளது சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். 250வாட் மின் மோட்டாருடன் சுமார் 25 முதல் 35 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடுய மின் வாகனங்கள் இப்பொது விற்பனையில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த "கிறீன் உடன்" மின் ஸ்கூட்டர்கள் வியாபாரிகளுக்கு சிறந்த பல அம்சங்களை வழங்குகிறது. அந்த வகையில் மார்க்கெட்டில் இப்பொது சுமார் 54,000 ரூபாய்க்கு விற்பனையாகும் இந்த வாகனம் அமேசான் சேலில் 26,599 ரூபாவுக்கு விற்பனையாகிறது. 

44
Great Indian Festival

Great Indian Festival

அமேசானின் இந்த விற்பனையில் இன்னும் பல சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உங்களால் தேர்வு செய்யமுடியும். புதுமையான வடிவமைப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை உருவாக்க இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயன்படுகிறது. மேலும் அமேசானின் இந்த விற்பனையானது, முன்னணி பிராண்டுகளின், பபுதிய மாடல் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை தேர்வு செய்ய உதவுகிறது.

அட அட! ரூ.40,000 தள்ளுபடியா! Ola S1X, டிவிஸ் iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க இதுதான் சரியான நேரம்!!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved