MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Car Mileage Tips: கார் மைலேஜை எகிற வைக்க 5 சீக்ரெட் டிப்ஸ்! இனி பெட்ரோல் பங்க் அடிக்கடி போக வேண்டாம்!

Car Mileage Tips: கார் மைலேஜை எகிற வைக்க 5 சீக்ரெட் டிப்ஸ்! இனி பெட்ரோல் பங்க் அடிக்கடி போக வேண்டாம்!

Car Mileage Tips: என்னதான் காரை நன்றாக பராமரித்தாலும் மைலேஜ் சரியாக கொடுக்கவில்லை என்பது பலரின் கவலையாக உள்ளது. கார் மைலேஜை எகிற வைக்கும் 5 சீக்ரெட் டிப்ஸ் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 22 2026, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கார் மைலேஜை அதிகரிக்கும் டிப்ஸ்
Image Credit : AI

கார் மைலேஜை அதிகரிக்கும் டிப்ஸ்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உச்சம் தொடுகிறது. இதனால், நடுத்தர மக்களின் பட்ஜெட் தலைகீழாக மாறுகிறது. இந்தச் சூழலில், எரிபொருள் செலவைக் குறைப்பது மிகவும் முக்கியம். அதற்காக, பலரும் தங்கள் வாகனத்தை நல்ல மைலேஜ் தரும்படி பராமரிக்க விரும்புகிறார்கள். ஆனால், கார் பழையதாகிவிட்டால் மைலேஜ் குறைந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. சில சமயங்களில் நமக்குத் தெரியாமல் செய்யும் சில தவறுகளால்தான் கார் அதிக பெட்ரோல்/டீசல் குடிக்கிறது.

உங்கள் காரும் அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிறது என்றால், கவலைப்படத் தேவையில்லை. சில எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும், உங்கள் காரின் மைலேஜை கணிசமாக மேம்படுத்தலாம். கார் உரிமையாளர்களின் பணத்துக்கு வேட்டு வைக்கும் அந்த 5 தவறுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
முதலில் டயர்களை கவனிங்க‌
Image Credit : Gemini

முதலில் டயர்களை கவனிங்க‌

காரின் மைலேஜில் டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. டயர்களில் காற்று குறைவாக இருந்தால், சாலையில் டயர்களின் அழுத்தம் அதிகரித்து இன்ஜின் மீது அதிக சுமை ஏற்படும். இதனால், காரை இழுக்க இன்ஜின் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக, எரிபொருள் அதிகம் செலவாகும். எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது டயர் பிரஷரை சரிபார்க்கவும். கார் தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்த அளவில் காற்றை நிரப்புங்கள். சரியான டயர் பிரஷர் மைலேஜை அதிகரிப்பதோடு, டயர்களின் ஆயுளையும் நீட்டிக்கும்.

Related Articles

Related image1
லிட்டருக்கு 34 கிமீ மைலேஜ்.. குறைந்த விலையில் அதிக மைலேஜ் வாரி வழங்கும் டாப் 5 கார்கள்.. முழு லிஸ்ட்!
Related image2
Cheapest Bikes: ₹80,000-க்குள்ள செம மைலேஜ் தரும் 5 பைக்குகள்! பக்கத்து வீட்டுக்காரரே கேட்பார்!
34
சர்வீஸ் செய்வது முக்கியம்
Image Credit : our own

சர்வீஸ் செய்வது முக்கியம்

வண்டி புதுசா இருந்தாலும் சரி, பழசா இருந்தாலும் சரி... ஒவ்வொரு காருக்கும் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வது அவசியம். இன்ஜின் ஆயில் அல்லது ஏர் ஃபில்டரை சரியான நேரத்தில் மாற்றவில்லை என்றால், இன்ஜினின் செயல்திறன் குறையும். அழுக்கான ஏர் ஃபில்டர் இருந்தால், இன்ஜினுக்கு போதுமான காற்று கிடைக்காது. இது எரிபொருள் அதிகம் செலவாகக் காரணமாகும். எனவே, இன்ஜின் ஆயில், ஏர் ஃபில்டர், ஆயில் ஃபில்டர் ஆகியவற்றைத் தவறாமல் மாற்றுவது மிகவும் முக்கியம்.

கியர்களை மாற்றுவதும் முக்கியம்

பலர் வண்டி ஓட்டும்போது தேவையில்லாமல் கிளட்ச் மீது காலை வைத்துக்கொண்டே இருப்பார்கள். இதை 'ஹாஃப்-கிளட்ச் டிரைவிங்' என்று சொல்வார்கள். இந்த பழக்கம் காரின் பாகங்களைப் பாதிப்பதோடு, மைலேஜையும் குறைக்கும். அதேபோல, சரியான நேரத்தில் கியர்களை மாற்றுவதும் முக்கியம். குறைந்த வேகத்தில் அதிக கியரிலும், அதிக வேகத்தில் குறைந்த கியரிலும் ஓட்டினால் இன்ஜின் மீது அழுத்தம் அதிகரிக்கும். இன்ஜின் எவ்வளவு ஸ்மூத்தாக இயங்குகிறதோ, அந்த அளவுக்கு மைலேஜ் சிறப்பாக இருக்கும்.

44
காரில் அதிக எடை வேண்டாம்
Image Credit : Google

காரில் அதிக எடை வேண்டாம்

டிராஃபிக் சிக்னலில் அல்லது டிராஃபிக் ஜாமில் 30 வினாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், இன்ஜினை ஆஃப் செய்வது நல்லது. கார் நிற்கும்போது கூட இன்ஜின் ஆன் செய்யப்பட்டிருந்தால் எரிபொருள் வீணாகும். எனவே, காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கும்போது இன்ஜினை ஆஃப் செய்யுங்கள். இது பெட்ரோலைச் சேமிப்பதோடு, மைலேஜிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

நிறைய பேர் காரின் டிக்கியை ஒரு ஸ்டோர் ரூம் போலவே மாற்றிவிடுவார்கள். கனமான கருவிகள், தேவையில்லாத பொருட்களை டிக்கியில் வைப்பதால் காரின் எடை கூடும். வாகனத்தின் எடை எவ்வளவு அதிகரிக்கிறதோ, அதை இழுக்க இன்ஜின் அவ்வளவு அதிக சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் எரிபொருள் அதிகம் செலவாகும். எனவே, காரில் அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாகன மைலேஜ்
ஆட்டோ
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Maruti Cars Discount: கார் வாங்க இதுதான் சரியான நேரம்! ஜூன் முதல் விலை உயர்கிறது.. இன்விக்டோ முதல் பலேனோ வரை ஜாக்பாட் ஆஃபர்!
Recommended image2
Scooters vs Bikes Mileage: பைக் மாதிரி ஸ்கூட்டர் ஏன் மைலேஜ் கொடுப்பதில்லை? இன்ஜினுக்குள் ஒளிந்திருக்கும் 'அந்த' ரகசியம்!
Recommended image3
இந்தியர்கள் எதிர்பார்த்த கார்! பெரிய ஸ்கிரீன், பிரீமியம் லுக்! மிரட்டும் Honda City Facelift
Related Stories
Recommended image1
லிட்டருக்கு 34 கிமீ மைலேஜ்.. குறைந்த விலையில் அதிக மைலேஜ் வாரி வழங்கும் டாப் 5 கார்கள்.. முழு லிஸ்ட்!
Recommended image2
Cheapest Bikes: ₹80,000-க்குள்ள செம மைலேஜ் தரும் 5 பைக்குகள்! பக்கத்து வீட்டுக்காரரே கேட்பார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved