MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • லிட்டருக்கு 34 கிமீ மைலேஜ்.. குறைந்த விலையில் அதிக மைலேஜ் வாரி வழங்கும் டாப் 5 கார்கள்.. முழு லிஸ்ட்!

லிட்டருக்கு 34 கிமீ மைலேஜ்.. குறைந்த விலையில் அதிக மைலேஜ் வாரி வழங்கும் டாப் 5 கார்கள்.. முழு லிஸ்ட்!

Top 5 Best Mileage Cars in India 2026: இந்தியாவில் விலை குறைவாக இருப்பது மட்டுமின்றி, மைலேஜ் வாரி வழங்கும் டாப் 5 கார்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 19 2026, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மைலேஜ் வாரி வழங்கும் டாப் 5 கார்கள்
Image Credit : AI

மைலேஜ் வாரி வழங்கும் டாப் 5 கார்கள்

இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கார்களின் விலை குறைவாக இருக்க வேண்டும், அதே வேளையில் மைலேஜ் வாரி வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் விலை குறைவாக, மைலேஜ் அதிகமாக வழங்கும் டாப் 5 கார்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

26
மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio)
Image Credit : Google

மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio)

நமது நாட்டில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி செலிரியோ தன்வசம் வைத்துள்ளது. இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் ஒரு லிட்டருக்கு 26 கிமீ வரையிலும், சிஎன்ஜி வேரியன்ட் 34 கிமீ வரையிலும் மைலேஜ் கொடுக்கிறதது. இந்த காரில் 'Idle Start-Stop' தொழில்நுட்பம் உள்ளது. 

அதாவது சிக்னலில் நிற்கும்போது இன்ஜின் தானாகவே அணைந்து விடும். கிளட்ச் அழுத்தும்போது ஸ்டார்ட் ஆகும். இதனால் எரிபொருள் மிச்சமாகும். மேலும் இந்த மாடலில் 7-இன்ச் ஸ்மார்ட் பிளே டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ.4.70 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Related Articles

Related image1
ரஜினி முதல் விஜய் வரை.. 2026-ல் நம்ம ஊரு ஸ்டார்களின் டாப் 5 'காஸ்ட்லி' கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!
Related image2
கியர் மாற்ற தேவையில்லை.. டிராஃபிக் கவலை இல்லை.. டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
36
மாருதி சுஸுகி ஆல்டோ K10 (Maruti Suzuki Alto K10)
Image Credit : our own

மாருதி சுஸுகி ஆல்டோ K10 (Maruti Suzuki Alto K10)

மாருதி சுஸுகி ஆல்டோ K10 பெட்ரோல் கார் ஒரு லிட்டருக்கு 24.80 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. சிஎன்ஜி வேரியண்ட்டில் 33.85 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.3.70 லட்சம் ஆகும். இந்த மாடலின் பராமரிப்பு செலவு குறைவு. இதன் சிறிய உருவத்தால் குறுகிய சாலைகளிலும் எளிதாக ஓட்ட முடியும். மேலும் டூயல் ஏர்பேக்குகள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஆப்பிள் கார் பிளே என பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

46
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)
Image Credit : social media

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)

ஒரு மினி எஸ்யூவி போல தோற்றமளிக்கும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25.30 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4.26 லட்சம் ஆகும். இந்த காரின் High Ground Clearance அம்சம் மேடு பள்ளம் நிறைந்த சாலைகளில் சுலபமாக பயணிக்க முடியும். சென்டர் கன்சோலில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் காருக்கு ஒரு நவீன தோற்றத்தை கொடுக்கிறது.

56
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR)
Image Credit : Maruti Suzuki

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR)

இந்திய குடும்பங்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடல் பெட்ரோல் வேரியண்ட்டில் 25.19 கிமீ வரையிலும், சிஎன்ஜி வேரியண்ட் 34 கிமீ வரையிலும் மைலேஜ் கொடுக்கிறது. இந்த காரில் 1.0L மற்றும் 1.2L என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. பின் இருக்கைகளை மடித்து வைத்துக் கொள்ளலாம் என்பதால் அதிக லக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும். இதன் விலை ரூ.4.99 லட்சம்.

66
டாடா டியாகோ (Tata Tiago)
Image Credit : stockPhoto

டாடா டியாகோ (Tata Tiago)

பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் டாடா டியாகோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.30 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. சிஎன்ஜியில் 26.49 கிமீ மைலேஜ் வழங்குகிறது. Global NCAP ரேட்டிங்கில் 4 ஸ்டார் பாதுகாப்பு பெற்ற மாடல் என்பதால் இந்தியர்களின் நம்பகமான காராக இது உள்ளது. மேலும் 8-ஸ்பீக்கர்கள் கொண்ட 'Harman' மியூசிக் சிஸ்டம், அதிர்வுகள் இன்றி சுகமாக பயணம் செய்யும் சஸ்பென்ஷன் அம்சங்கள் உள்ளன. இந்த காரின் விலை ரூ.4.60 லட்சம் ஆகும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
வாகனம்
டாடா கார்கள்
மாருதி கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.75,000 தள்ளுபடி… 5 ஸ்டார் பாதுகாப்பு உள்ள காரை வாங்க ரெடியா.!
Recommended image2
நீண்ட ரேஞ்ச் ஸ்கூட்டர் வந்தாச்சு.. இந்திய மக்கள் எதிர்பார்த்த கேம் சேஞ்சர்.. விலை எவ்வளவு?
Recommended image3
Hybrid Cars: 45 கிமீ மைலேஜ் தரும் கார்! இனி பெட்ரோல் செலவு பாதிக்கு பாதி குறையும்!
Related Stories
Recommended image1
ரஜினி முதல் விஜய் வரை.. 2026-ல் நம்ம ஊரு ஸ்டார்களின் டாப் 5 'காஸ்ட்லி' கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
கியர் மாற்ற தேவையில்லை.. டிராஃபிக் கவலை இல்லை.. டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved