MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 160 எச்.பி பவர், 29 கிமீ மைலேஜ்: சந்தையை அலறவிட வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட்!

160 எச்.பி பவர், 29 கிமீ மைலேஜ்: சந்தையை அலறவிட வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட்!

ரெனோ நிறுவனம் தனது பிரபலமான டஸ்ட்டர் எஸ்யூவி காரை ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் வரும் அக். 17 அன்று அறிமுகப்படுத்துகிறது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 10 2026, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
29 கிமீ மைலேஜ் தரும் புதிய ரெனோ டஸ்ட்டர்
Image Credit : X

29 கிமீ மைலேஜ் தரும் புதிய ரெனோ டஸ்ட்டர்

இந்தியச் சந்தையில் மீண்டும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ரெனோ டஸ்ட்டர் (Renault Duster) எஸ்யூவி, தற்போது அதிநவீன ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் களமிறங்குகிறது. இதன் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 29 கிமீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனால் எரிபொருள் செலவைக் குறைக்க விரும்பும் எஸ்யூவி பிரியர்களிடம் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் மாடல் வரும் அக். 17 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ளது. இந்த நிகழ்வின்போதே காரின் விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே விற்பனையில் உள்ள டர்போ பெட்ரோல் மாடல்களுடன் சேர்த்து, இந்த ஹைப்ரிட் பதிப்பு 3-வது எஞ்சின் தேர்வாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் & திறன்
Image Credit : X

1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் & திறன்

புதிய டஸ்ட்டர் ஹைப்ரிட் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு மின்மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 1.4 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இணைந்து 160 எச்பி ஆற்றலையும் 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் சிறந்த மைலேஜுடன் உயர் செயல்திறனையும் வழங்க ரெனோ திட்டமிட்டுள்ளது.

இந்த காரின் மிக முக்கிய சிறப்பம்சம் அதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பமாகும். நகரப் போக்குவரத்தில் குறைந்த வேகத்தில் செல்லும்போது இந்த வாகனம் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரப் பயணங்களில் சுமார் 80 சதவீதத்தை மின்சார முறையில் மேற்கொள்ள முடியும் என ரெனோ கூறுகிறது. இதனால் அடிக்கடி ட்ராஃபிக் நெரிசலில் சிக்குபவர்கள் பெட்ரோல் பயன்பாட்டைக் பெருமளவு குறைக்க முடியும்.

35
வெளியில் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை
Image Credit : X

வெளியில் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை

வழக்கமான எலக்ட்ரிக் கார்களைப் போன்று இந்த ஹைப்ரிட் காரை வெளிப்புற சார்ஜிங் நிலையங்களில் இணைத்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. வாகனம் இயங்கும்போதும் பிரேக் பயன்படுத்தும்போதும் ரீஜெனரேட்டிவ் (Regenerative) தொழில்நுட்பம் மூலமாகவே பேட்டரியில் மின்சாரம் தானாகச் சேமிக்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சினும் மின்மோட்டார்களும் சூழ்நிலைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவதால், சார்ஜிங் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் இதை எளிதாகப் பயன்படுத்தலாம்.

மின் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் செயல்பாடுகளைத் துல்லியமாக நிர்வகிக்க மல்டி-மோடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் தனியாக டிரைவிங் மோடுகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமின்றி, வாகனத்தின் தேவைக்கேற்ப இந்த அமைப்பு தானாகவே செயல்படும். இருப்பினும், உண்மையான சாலைப் பயன்பாட்டில் கிடைக்கும் மைலேஜ் என்பது போக்குவரத்து நெரிசல், ஓட்டும் முறை மற்றும் சாலை நிலையைப் பொறுத்து மாறுபடலாம்.

45
மாருதி & டொயோட்டாவிற்கு நேரடிப் போட்டி
Image Credit : X

மாருதி & டொயோட்டாவிற்கு நேரடிப் போட்டி

டஸ்ட்டர் ஹைப்ரிட் கார் லிட்டருக்கு 29 கிமீ மைலேஜ் தரும் என்று ரெனோ அறிவித்துள்ளதன் மூலம், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட், மாருதி விக்டோரிஸ் ஹைப்ரிட் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் ஆகிய கார்களுக்கு இது கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.

தற்போது மாருதி விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் கார்கள் லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜையும், மாருதி விக்டோரிஸ் 28.65 கிமீ மைலேஜையும் தரும் என்று அராய் (ARAI) சான்றளித்துள்ள நிலையில், அவற்றைவிட டஸ்ட்டர் ஹைப்ரிட் கூடுதல் மைலேஜ் தரும் வகையில் வரவுள்ளது.

55
முன்பதிவு நிலவரம்
Image Credit : X

முன்பதிவு நிலவரம்

புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் மாடலுக்கான முன்பதிவு ரூ. 21,000 தொகையுடன் டீலர் வட்டாரங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், 2026ஆம் ஆண்டுக்கான டஸ்ட்டர் ஹைப்ரிட் கார்களின் உற்பத்தி ஒதுக்கீடு ஏற்கெனவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. காரின் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்பட்ட பிறகே, இந்த 29 கிமீ மைலேஜ் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை எந்த அளவுக்குக் கவர்ந்துள்ளது என்பது முழுமையாகத் தெரியவரும்.

About the Author

KD
Kiruthickraj D
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Triumph Bike: ரூ.4,999 போதும்! டிரையம்ப் புதிய பைக் முன்பதிவு தொடங்கியது - விலை, வசதிகள் என்ன?
Recommended image2
சஃபாரி, அல்காஸரை வீழ்த்த வரும் நிஸானின் புது ஆயுதம்.. நிஸான் டெக்டான் 7 சீட்டர் காரின் மாஸ் அப்டேட்!
Recommended image3
பட்ஜெட் விலையில் பக்கா சேஃப்டி: ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்!
Related Stories
Recommended image1
சஃபாரி, அல்காஸரை வீழ்த்த வரும் நிஸானின் புது ஆயுதம்.. நிஸான் டெக்டான் 7 சீட்டர் காரின் மாஸ் அப்டேட்!
Recommended image2
Triumph Bike: ரூ.4,999 போதும்! டிரையம்ப் புதிய பைக் முன்பதிவு தொடங்கியது - விலை, வசதிகள் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved