புதிய டியாகோ EV: மலிவு விலையில் இத்தனை அம்சங்களா?
2026 Tata Tiago EV Review: 2026 டாடா டியாகோ EV, புதிய வடிவமைப்பு, பிரீமியம் கேபின், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பல மேம்பாடுகளுடன் வந்துள்ளது. சிறந்த நகர ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது இந்த கார்.

டாடா டியாகோ வசதிகள்
இந்தியாவில் மலிவு விலையில் எலக்ட்ரிக் கார் வாங்க விரும்புபவர்களுக்கு Tata Tiago EV ஏற்கனவே பரிச்சயமான பெயர். தற்போது 2026 மாடலில் பல முக்கிய அப்டேட்களுடன் இந்த ஹேட்ச்பேக் அறிமுகமாகியுள்ளது. புதிய முன்புற வடிவமைப்பு, பிரீமியம் கேபின், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், 6 ஏர்பேக் மற்றும் லைஃப்டைம் பேட்டரி வாரண்டி போன்ற அம்சங்கள், இந்த காரின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளன. இரண்டு பேட்டரி தேர்வுகளுடன் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.
டாடா டியாகோ பேட்டரி
19.2kWh மற்றும் 24kWh பேட்டரி பேக்குகள் கிடைக்கின்றன. 24kWh மாடல் 74 bhp சக்தி மற்றும் 114 Nm டார்க் வழங்குகிறது. நகர சாலைகளில் சத்தமின்றி மென்மையாக இயங்கும் இந்த கார், Sport Mode-ல் வேகமான ஆக்சிலரேஷனையும் வழங்குகிறது. அதிகபட்சமாக 122 கிமீ வேகத்தை எட்ட முடியும். Drive, Reverse, Neutral மற்றும் Sport என நான்கு டிரைவிங் மோடுகள் இருப்பதால், ஓட்டும் அனுபவம் மிகவும் எளிமையாக உள்ளது.
சார்ஜிங் வசதிகள்
ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் வசதியிலும் Tiago EV குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ARAI சான்றளித்த ரேஞ்ச் 286 கிமீ என்றாலும், நடைமுறை பயன்பாட்டில் சுமார் 190 கிமீ வரை பயணிக்க முடிகிறது. தினசரி அலுவலகப் பயணம் மற்றும் வார இறுதி குறுகிய தூர சுற்றுலாவுக்கு இது போதுமானதாக இருக்கும். 3.3kW AC சார்ஜரில் இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாம். விருப்பமாக வழங்கப்படும் 7.2kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் நேரம் குறைகிறது.
நகர நெரிசலை சமாளிக்கலாம்
30kW DC ஃபாஸ்ட் சார்ஜரில் வெறும் 30 நிமிடங்களில் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடிவது நீண்ட பயணங்களுக்கு கூடுதல் பலமாகும். பயண வசதியிலும் Tiago EV ஏமாற்றுவதில்லை. பேட்டரி கீழ்பகுதியில் பொருத்தப்பட்டிருப்பதால் காரின் நிலைத்தன்மை மேம்பட்டுள்ளது. நகர நெரிசலிலும், நெடுஞ்சாலையிலும் ஸ்டீயரிங் துல்லியமாக செயல்படுகிறது. பின்புற AC வென்ட்ஸ், வசதியான இருக்கைகள், கூடுதல் சேமிப்பு இடங்கள் மற்றும் 240 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவை குடும்பப் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
அசத்தும் டாடா tiyako
மொத்தத்தில், குறைந்த விலையில் அதிக வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு, வேகமான சார்ஜிங், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நம்பிக்கையளிக்கும் செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கே வழங்கும் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்காக 2026 Tata Tiago EV திகழ்கிறது. முதல் முறையாக EV வாங்க நினைப்பவர்களுக்கும், பெட்ரோல் காரிலிருந்து மின்சார காருக்கு மாற விரும்புபவர்களுக்கும் இது கவனிக்க வேண்டிய முக்கிய தேர்வாக இருக்கிறது.

