- Home
- Auto
- Royal Enfield Classic 350: புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்.. இந்த 2 அப்டேட்கள் ரைடிங்கை மாற்றும்
Royal Enfield Classic 350: புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்.. இந்த 2 அப்டேட்கள் ரைடிங்கை மாற்றும்
Royal Enfield Classic 350: ராயல் என்ஃபீல்டு தனது மிகவும் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை 2026-ஆம் ஆண்டுக்கான புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350
2026 ஆம் ஆண்டுக்கான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை நிறுவனம் புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. தோற்றம் மற்றும் இன்ஜின் அமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்தாலும், அன்றாட பயன்பாடு மேலும் வசதியாக்கும் இரண்டு முக்கிய அப்டேட்கள் இந்த மாடலில் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நகரப் போக்குவரத்தில் அதிகம் பயணம் செய்பவர்களையும், நீண்ட தூர ரைடர்களையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அஸ்சிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் வேகமான யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவை 2026 கிளாசிக் 350-ன் குறிப்பிடத்தக்க புதிய அம்சங்களாகும். எனினும், இந்த இரு வசதிகளும் தற்போது டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
புதிய ஸ்லிப்பர் கிளட்ச்
புதிய ஸ்லிப்பர் கிளட்ச் அமைப்பு ஓட்டுநரின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது. இந்த கிளட்ச் அமைப்பு இருப்பதால் கிளட்ச் லீவரை குறைந்த அழுத்தத்தில் இயக்க முடியும். இதனால் நகரங்களில் அடிக்கடி நிறுத்தி, மீண்டும் இயக்க வேண்டிய சூழல்களில் கைகளுக்கு ஏற்படும் சோர்வு குறைகிறது.
மேலும், அதிக நேரத்தில் திடீரென கியர்களை குறைக்கும் (Downshift) நேரங்களில் பின்சக்கரத்தில் ஏற்படும் திடீர் அதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் வாகனத்தின் நிலைத்தன்மை மேம்பட்டது, ரைடருக்கு அதிக நம்பிக்கையுடன் வாகனத்தை இயக்கும் அனுபவம் கிடைக்கிறது.
32 கி.மீ மைலேஜ்... நச்சுனு 5 ஹைபிரிட் கார்களை அடுத்தடுத்து களத்தில் இறக்கும் மாருதி
யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்
மற்றொரு முக்கிய அப்டேட், புதிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகும். கிளாசிக் 350-ல் ஏற்கனவே யூஎஸ்பி சார்ஜிங் வசதி இருந்தாலும், அதற்கு பதிலாக வேகமாக சார்ஜ் செய்யும் டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன், ஜிபிஎஸ் நேவிகேஷன் சாதனங்கள் அல்லது பிற மின்னணு கருவிகளை பயணத்தின் போது சார்ஜ் செய்யும் வசதி இதன் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் ரைடர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய மொபைல் சாதனங்களுடன் பொருந்தக்கூடிய டைப்-சி இணைப்பு வழங்கப்பட்டிருப்பது ஒரு கூடுதல் சிறப்பம்சமாகும்.
விலை விவரங்கள்
விலை விவரங்களைப் பொறுத்தவரை, ரெட்டிட்ச் ரெட் நிறத்தில் கிடைக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் ரூ.1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் புதிய ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் இடம்பெறவில்லை. இந்த இரு வசதிகளும் டூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.
அவற்றின் ஆரம்ப விலை ரூ.1.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எமெரால்ட் கிரீன் நிறத்தில் கிடைக்கும் டாப் வேரியண்டின் விலை ரூ.2.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மேலும், ஹலகியோன் பிளாக் மற்றும் ஜோத்பூர் ப்ளூ ஆகிய நிற விருப்பங்கள் 2026 மாடல் வரிசையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
கிளாசிக் 350 அம்சங்கள்
2026 கிளாசிக் 350-ல் எந்த இயந்திர மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் இருந்த அதே 349cc ஜே-சீரிஸ் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தொடர்கிறது. இந்த இன்ஜின் 20.2 hp பவரையும், 27 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும், டெலிஸ்கோபிக் முன் ஃபோர்க், ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்கள், 19 அங்குல முன் சக்கரம் மற்றும் 18 அங்குல பின்சக்கரம் கொண்ட ஸ்போக் வீல் அமைப்பு உள்ளிட்ட மெக்கானிக்கல் அம்சங்களிலும் எந்த மாற்றமும் இல்லை.
எனவே, 2026 அப்டேட் மூலம் கிளாசிக் 350-ன் பாரம்பரிய தோற்றம் மற்றும் சிறந்த செயல்திறன் அப்படியே தொடர்ந்தாலும், அன்றாட பயன்பாட்டை மேம்படுத்தும் புதிய வசதிகள் மட்டுமே இந்த மாடலின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.

