- Home
- Astrology
- Astrology: இந்த 5 ராசிகளுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்க.! திரும்பும் திசை எல்லாம் ஆப்பு வச்சிட்டே இருப்பாங்க.!
Astrology: இந்த 5 ராசிகளுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்க.! திரும்பும் திசை எல்லாம் ஆப்பு வச்சிட்டே இருப்பாங்க.!
Zodiac signs with the most enemies: ஜோதிடத்தின் படி சில ராசிகளை சேர்ந்தவர்களுக்கு அதிகம் எதிரிகள் இருப்பார்களாம். அந்த ராசிகள் என்ன? எதிரிகள் அதிகம் இருப்பதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எதிரிகளை உருவாக்கும் ராசிகள்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் பண்புகள் உள்ளன. சில ராசிக்காரர்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகின்றனர். அதேசமயம் சில ராசிக்காரரகள் எதிரிகளையும் மோதல்களையும் விரும்புகின்றனர். இந்த ராசிகள் தங்கள் நேர்மையான பேச்சு, தைரியமான அணுகுமுறை மற்றும் ஆதிக்க பண்புகள் காரணமாக மற்றவர்களுடன் மோதல்களை எதிர்கொள்கின்றனர். இந்த கட்டுரையில் எதிரிகளையும் மோதல்களையும் விரும்பும் ஐந்து ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமும், பேச்சுத் திறமையும் கொண்டவர்கள். ஆனால் இவர்களின் இரட்டை நிலைப்பாடு, இரு மனநிலைகள் மற்றும் மாறுபட்ட கருத்துக்கள் மற்றவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இவர்களின் வார்த்தைகளில் சில நேரங்களில் இருவேறு வேறுபட்ட நிலைகள் காணப்படுவது எதிர்மறையான எதிர்வினைகளை தூண்டிவிடும்.
மிதுன ராசிக்காரர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள். இந்த குணம் காரணமாக இவர்கள் நம்பகத்தன்மை இல்லாதவர்களாக விளங்குகின்றனர். இதன் காரணமாக மோதல்களும், எதிரிகளும் இவர்களுக்கு இயல்பாகவே அதிகம் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். கம்பீரமான ஆளுமை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் ஆளுமையை மூலம் அனைவரையும் ஈர்ப்பார்கள். ஆனால் இவர்களின் ஆதிக்க போக்கு மற்றும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற ஆசை மற்றவர்களை எரிச்சல் அடைய செய்யும்.
இவர்கள் தங்கள் கருத்துக்களை உறுதியாக வெளிப்படுத்துவதால் இவர்களை எதிர்க்கும் நபர்களுடன் மோதல்கள் இயல்பாக ஏற்பட்டுவிடும். இவர்களின் தலைமைப் பண்பு மற்றும் மற்றவர்களை வழி நடத்தும் ஆவல் சிலருக்கு பொறாமையை தூண்டி எதிரிகளை உருவாக்கி விடுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் ஆழமான எண்ணங்கள் மற்றும் தீவிரமான குணமானது, மற்றவர்களின் உணர்வுகளை ஆராயும் பழக்கம் கொண்டு விளங்குகிறது. இவர்களின் இந்த பழக்கம் சிலருக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. மேலும் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதால் மற்றவர்கள் இவர்களை நம்புவது கடினமாக இருக்கிறது.
இதனால் தவறான புரிதல்கள் மற்றும் மோதல்கள் உருவாகிறது. இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களை சுற்றி அதிக எதிரிகள் உருவாகுகின்றனர். இவர்களின் உறுதியான மனப்பான்மை மற்றும் பழிவாங்கும் தன்மையும் மோதல்களை அதிகரிக்கிறது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தைரியமானவர்கள், உற்சாகம் நிறைந்தவர்கள். இவர்களின் வேகமான மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றவர்களை எதிரிகளாக மாற்றி விடும். இவர்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்துகின்றனர். இதன் காரணமாக மற்றவர்களின் உணர்வுகள் புண்படுவது உண்டு. இவர்களின் அதிக ஆதிக்க பண்பு மற்றும் மற்றவர்களை வழி நடத்த வேண்டும் என்கிற ஆசை சில சமயங்களில் மோதல்களை உருவாக்குகிறது.
குறிப்பாக இவர்களின் கருத்துக்களை எதிர்க்கும் நபர்களுடன் அதிக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். தங்கள் கருத்துக்களை பிறரிடம் திணிக்க இவர்கள் முயற்சி செய்ய முனைப்புடன் செயல்படுகின்றனர். இதன் காரணமாக இவர்களுக்கு அதிக எதிரிகள் உருவாகின்றனர்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். இவர்கள் தங்களது லட்சியங்களை அடைவதில் அதிக முனைப்புடன் இருக்கின்றனர். இவர்களின் விருப்பத்திற்கு மாறாக யாரேனும் செயல்பட்டால் அவர்களை தைரியமாக எதிர்ப்பதற்கு தயாராக இருப்பார்கள். இவர்கள் தங்கள் கருத்தை பிறர் ஏற்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பிறரின் கருத்தை ஏற்க மறுத்து வாதிடுவார்கள்.
இவர்களின் இந்த பிடிவாத குணம் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். மேலும் லட்சியங்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர்கள், தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பணியிடத்திலும் வெற்றியை காண்கின்றனர். இதன் காரணமாகவும் இவர்களுக்கு எதிரிகள் அதிகரிக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)