- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசிகள் அடிக்கடி பணப்பிரச்னையில் சிக்கிக்கொள்வார்கள்.! இவங்க கையில சுத்தமா பணம் நிக்காதாம்.!
Astrology: இந்த 4 ராசிகள் அடிக்கடி பணப்பிரச்னையில் சிக்கிக்கொள்வார்கள்.! இவங்க கையில சுத்தமா பணம் நிக்காதாம்.!
Astrology: ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் அடிக்கடி பணப்பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அடிக்கடி பணப்பிரச்சனையில் சிக்கும் ராசிகள்
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. இது பண நிர்வாகத்தில் அவர்களின் அணுகுமுறையை பாதிக்கலாம். சில ராசிக்காரர்கள் தங்கள் செலவு செய்யும் பழக்கம், முடிவெடுக்கும் முறை அல்லது வாழ்க்கை மீதான பொதுவான அணுகுமுறை காரணமாக பண பிரச்சினைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்வார்கள். அத்தகைய ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஆர்வமும், உற்சாகமும் நிறைந்தவர்கள். அவர்களின் திடீர் முடிவுகள் மற்றும் ஆசைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் அவர்களை பணப்பிரச்சனையில் சிக்க வைக்கலாம். மேஷ ராசிக்காரர்கள் திட்டமிடாமல் செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். உதாரணமாக ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் அல்லது ஆடம்பர பொருளை வாங்க வேண்டும் என்றால் உடனடியாக பணத்தை செலவிடுவார்கள். செலவு செய்யும் முன் வரவு, செலவு கணக்கு பார்க்காமல் இருப்பது, அவசர முடிவுகள் எடுப்பது மற்றும் முதலீடுகளில் ஆபத்து எடுக்கும் போக்கு இவர்களிடம் அதிகம் உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள் மற்றும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். இவர்களின் ஆர்வமும், புதிய அனுபவங்களை தேடும் இயல்பும் பணப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இவர்கள் பொழுதுபோக்குகள் அல்லது பயணங்கள் போன்றவற்றிற்கு தேவையில்லாமல் செலவு செய்வார்கள். இவர்கள் பெரும்பாலும் “இருக்கும் பொழுதே வாழ்ந்து விடுவோம்” என்கிற மனப்பான்மையில் இருப்பார்கள். எதிர்காலத்திற்கு சேமிப்பதை விட தற்போதைய இன்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, முதலீடுகளில் அதிக நம்பிக்கை வைத்து ரிஸ்க் எடுப்பது இவர்களின் பழக்கமாகும். இதுவே இவர்கள் பண பிரச்சனையில் சிக்குவதற்கு காரணமாக அமைகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கனவு உலகில் வாழ்பவர்கள் மற்றும் அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள். இவர்கள் பண நிர்வாகம் பெரும்பாலும் உணர்ச்சிகளால் ஆனது. மற்றவர்களுக்கு உதவுவதற்காக அல்லது உணர்ச்சிவசப்பட்டு செலவு செய்வது இவர்களுக்கு வாடிக்கை. உதாரணமாக நண்பர்களுக்கு கடன் கொடுப்பது அல்லது தேவையற்ற விஷயங்களுக்கு பணம் செலவழிப்பது இவர்களின் இயல்பாகும். நிதி திட்டமிடல் இல்லாதது, பணத்தை எப்படி செலவழிக்கிறோம் என்று கவனிக்காமல் இருப்பது, மோசடிகளுக்கு எளிதில் இரையாவது போன்ற காரணங்களால் மீன ராசிக்காரர்கள் அடிக்கடி பணப் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புதுமையை விரும்புபவர்கள் மற்றும் சமூக மாற்றத்திற்காக உழைப்பவர்கள். ஆனால் இவர்களின் தனித்துவமான அணுகுமுறை சில சமயங்களில் பணப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். புதுமையான அதே சமயம் ஆபத்தான முதலீடுகளில் ஈடுபடுவது, பணத்தை தேவையில்லாத வகையில் செலவழிப்பது போன்ற காரணங்களால் இவர்கள் பண பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஒரு பணத்தை ஒரு கருவியாகவே பார்க்கின்றனர். நிதி ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், புதிய யோசனைகளுக்கு பணத்தை செலவழிப்பது, முதலீடுகளில் தோல்வி ஆகிய காரணங்களால் இவர்களுக்கு பண பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அதிக ஆர்வமும், மாற்றத்தை விரும்பும் இயல்பும் கொண்டவர்கள். இவர்களின் மனம் நிலையாக இருப்பது கடினம். இது பண நிர்வாகத்திலும் பிரதிபலிக்கிறது. பல விஷயங்களில் ஒரே நேரத்தில் செலவு செய்ய முயல்வது, பல விஷயங்களில் முதலீடு செய்ய விரும்புவது, புதிய பொருட்களை வாங்க ஆசைப்படுவது ஆகியவை இவர்களின் பணப் பிரச்சனைக்கு காரணமாகும். திட்டமிடப்பட்ட நிதி அணுகுமுறை இல்லாதது, அடிக்கடி மாறும் மனநிலை காரணமாக இவர்கள் அதிக செலவு செய்கின்றனர். இதுவே இவர்களுக்கு பணப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிட்டப்பட்ட ராசிக்காரர்கள் தங்கள் இயல்பான குணங்களால் பணப் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். ஆனால் இது ஒரு பொதுவான கணிப்பு மட்டுமே. ஒவ்வொரு நபரும் தங்கள் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால் பணத்தை செலவு செய்வது என்பது தனிப்பட்ட முடிவுகள் மற்றும் பொறுப்புணர்வுகளைப் பொறுத்தது)