- Home
- Astrology
- Astrology: இந்த 5 ராசிக்காரர்களை துரதிஷ்டம் துரத்தும்.! வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்.!
Astrology: இந்த 5 ராசிக்காரர்களை துரதிஷ்டம் துரத்தும்.! வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்.!
ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியே இல்லாத, சபிக்கப்பட்டது போன்ற வாழ்க்கை வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் யார்? அதற்கான பின்னணி என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

துரதிஷ்டம் துரத்தும் 5 ராசிகள்
நம்மை சுற்றி இருக்கும் சிலருக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வெற்றிகள் நிறைந்ததாகவும் இருக்கும். அதே சமயம் பலருக்கு தடைகளும், சவால்களும் நிறைந்ததாக இருக்கும். ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு அவர்களின் கிரக அமைப்பு மற்றும் பிற காரணங்களால் தொடர்ச்சியாக துரதிஷ்டம் அல்லது சவால்கள் நிறைந்த வாழ்க்கை அமையலாம். குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு துரதிஷ்டம் பின் தொடர்ந்து வருவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த ராசிகள் என்ன? அவர்களின் வாழ்க்கை ஏற்படும் சவால்கள், அவற்றிற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள். இவர்கள் கனவு உலகில் வாழ்பவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்களின் ஆளுமை கிரகமான குரு இவர்களுக்கு ஆழமான உணர்வுகளையும், புரிதல்களையும் தருகிறார். அதே சமயம் கிரக நிலைகளால் இவர்கள் புரிதல் குறைபாடு, மனக்குழப்பம், முடிவெடுக்க முடியாமை போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு உறவுகளில் ஏமாற்றம், நிதி நெருக்கடி மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்கள் தொடர்ந்து ஏற்படலாம். இவர்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்சினைகளை விட மற்றவர்களில் பிரச்சனைகளில் மூழ்கடித்து சொந்த வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள். இவர்களின் அதீத உணர்ச்சி மற்றும் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கத்தால் இவர்களுக்கு வாழ்க்கை துரதிஷ்டமாக மாறுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் தீவிரமான ஆளுமை மற்றும் ஆழமான எண்ணங்களுக்கு பெயர் பெற்றவர்கள். அதே சமயம் இந்த கிரகங்களின் ஆதிக்கம் காரணமாக பொறாமை, கோபம் மற்றும் உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம். விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புகள், உறவு முறிவுகள், மன அழுத்தங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். இவர்களின் தீவிரமான உணர்ச்சிகள் சில சமயங்களில் அவர்களை தவறான பார்வைக்கு இட்டுச் செல்கின்றன. அவர்கள் வெளிப்புறப் போராட்டங்களைத் தவிர, உட்புற போராட்டங்களை அதிகம் எதிர்கொள்கின்றனர். அவர்கள் உணர்ச்சிகள் கடல் போன்றது. வெளிப்புறம் அமைதியாக இருந்தாலும், உள்ளே பெரிய புயல்களை கொண்டிருப்பர்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கும், பொறுப்புணர்வுக்கும் பெயர் பெற்றவர்கள். இவர்களை ஆளும் கிரகமான சனி இவர்களுக்கு ஒழுக்கத்தையும், அர்ப்பணிப்பையும் தருகிறது. இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைத்தாலும், எதிர்பாராத தோல்விகள், தாமதங்கள் உறவுகளில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சனியின் செல்வாக்கு காரணமாக இவர்களுக்கு கடுமையான சவால்கள் மற்றும் தடைகள் ஏற்படுகிறது. சனிபகவானின் கடுமையான பாடங்கள் மற்றும் அவர்களின் அதிகப்படியான பொறுப்புணர்வு காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு துரதிஷ்டம் ஏற்படுகிறது. இவர்கள் தங்கள் மனதிற்குள்ளாகவே மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒழுக்கமானவர்களாகவும், பகுப்பாய்வு திறன் உள்ளவர்களாகவும் அறியப்படுகின்றனர். இவர்களை புதன் கிரகம் ஆள்கிறது. புதன் இவர்களுக்கு தெளிவான சிந்தனையும், விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையும் வழங்குகிறது. ஆனால் புதனின் செல்வாக்கு இவர்களை அதிகப்படியான கவலை, சந்தேகம், மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. தங்கள் வாழ்க்கையில் சிறு விஷயங்கள் நடந்தாலும் அதைப்பற்றி அதிகப்படுமாக கவலைப்படுகின்றனர். இதனால் இவர்கள் வாய்ப்புகளையும், மகிழ்ச்சிகளையும் இழக்க நேரிடுகிறது. இவர்களின் அதிகப்படியான பகுப்பாய்வு மற்றும் கவலைப்படும் பழக்கத்தால் இவர்கள் வாழ்க்கையில் துரதிஷ்டம் உருவாகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமும், தகவல் தொடர்பு திறனும் உள்ளவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் ஆளுமை கிரகமான புதன் இவர்களுக்கு விரைவான விஷயத்தையும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் தருகிறது. அதே சமயம் புதனின் செல்வாக்கு இவர்களுக்கு நிலையற்ற மனநிலை, முடிவெடுக்க இயலாமை, குழப்பம் ஆகியவற்றையும் உருவாக்கலாம். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள், உறவுகளில் சிக்கல் மற்றும் தவறான முடிவுகளால் பாதிக்கப்படலாம். இவர்களின் நிலையற்ற மனநிலை மற்றும் முடிவெடுக்க இயலாமை காரணமாக இவர்களின் வாழ்க்கையில் துரதிஷ்டம் உருவாகிறது.
(குறிப்பு: ஜோதிடத்தில் ஒரு ராசிக்காரர் துரதிஷ்டத்தால் பாதிக்கப்படுவது என்பது அவர்களின் கிரக அமைப்புகள் மற்றும் ஆளுமை பண்புகளால் ஏற்படும் சவால்களை குறிக்கிறது. மேற்கூறப்பட்ட ஐந்து ராசிகளும் தங்கள் தனித்துவமான குணங்களால் பல சவால்களை எதிர்கொண்டாலும் இந்த சவால்களை வெற்றிகரமாக கையாள்வதற்கு உளவியல் வலிமை, தியானம் மற்றும் நல்ல ஆலோசனைகள் உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டியாக இருந்தாலும், நமது வாழ்க்கையை மாற்றும் சக்தி நம் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்)