- Home
- Astrology
- Astrology: இந்த ராசியில் பிறந்த மாமியார்களுக்கு மருமகளை பாத்தாலே ஆகாதாம்.! சண்டை போட்டுட்டே இருப்பாங்களாம்.!
Astrology: இந்த ராசியில் பிறந்த மாமியார்களுக்கு மருமகளை பாத்தாலே ஆகாதாம்.! சண்டை போட்டுட்டே இருப்பாங்களாம்.!
Zodiac signs that dislike their daughter-in-law: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்த மாமியாருக்கு மருமகளை பார்த்தாலே பிடிக்காதாம். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மருமகளை வெறுக்கும் மாமியார் ராசிகள்
மாமியார் மருமகள் பிரச்சனை காலம் காலமாக இருந்து வந்தாலும் தற்போதைய காலத்தில் மாமியார் மருமகள் உறவு என்பது மிகவும் ஒரு சவாலான பந்தமாக மாறிவிட்டது. ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட ராசியில் பிறந்த சில மாமியார்களுக்கு தங்கள் மருமகளை பார்த்தாலே ஒரு வித ஒவ்வாமை அல்லது பிடிக்காத உணர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையிலான இந்த சிக்கலான உறவுக்கு பின்னால் மாமியாரின் ராசி ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மூன்று ராசிகளில் பிறந்த மாமியார்களுக்கு தங்களுடைய மருமகளிடம் அதீத எதிர்பார்ப்புகள் இருப்பதாலும், தங்கள் ஆளுமைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்கிற மனப்பான்மை இருப்பதாலும் மருமகளை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே ஆளுமை மிகுந்தவர்களாகவும், தன்னைச் சுற்றியே அனைத்தும் நடக்க வேண்டும் என்கிற மனப்பான்மையுடன் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வீட்டில் தாங்கள் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் மாமியாராக மாறும்பொழுது மருமகளிடமிருந்து அதிகபட்ச பாராட்டுகளையும், மரியாதையையும் எதிர்பார்ப்பார்கள்.
மருமகள் இவர்களை மிஞ்சும் அளவிற்கு திறமையாகவோ, அழகாகவோ அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தால் அது இவர்களுக்கு பிடிக்காது. மருமகள் தன் மகனின் மீது அதிகாரம் செலுத்து முயன்றாலோ அல்லது வீட்டின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுக்க முயற்சித்தாலோ சிம்ம ராசி மாமியார்கள் உடனடியாக எரிச்சல் அடைவார்கள். மருமகளை ஒரு போட்டியாளராகவே நினைக்கும் பாங்கு இவர்களிடம் எப்போதும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி மாமியார்கள் மிகுந்த உணர்ச்சிபூர்வமானவர்களாகவும், ரகசியம் காப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தின் மீதும், பிள்ளைகள் மீதும் முழு கட்டுப்பாட்டை கொண்டிருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு இயல்பாகவே சந்தேக குண்டு. எந்த ஒரு செயலையும் கூர்ந்து கவனிப்பார்கள். மருமகள் எதையாவது மறைப்பதாக தோன்றினாலோ அல்லது தனக்குத் தெரியாமல் மகனிடம் ஏதாவது ரகசியம் பேசினாலோ அது இவர்களுக்கு பிடிக்காது.
தங்கள் மகனை தங்களுடைய சொத்து போல பார்ப்பார்கள். மருமகள் மகனிடமிருந்து இவர்களைப் பிரித்து விடுவார் என்ற ஆழமான அச்சம் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இதனால் மருமகள் தனக்குத் தெரியாமல் ஏதாவது செய்தால் அவர்களை வெறுக்க ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலரோ ஆரம்பத்திலேயே மருமகளை ஒதுக்கி வைக்க முயற்சிப்பார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் கடும் உழைப்பாளிகள் மற்றும் அதிக ஒழுக்கமானவர்கள். மகர ராசியில் பிறந்த மாமியார்கள் பாரம்பரியம், விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் மருமகளும் அதே அளவு உழைப்பு, பொறுமை, பொறுப்பு, மரபுகள் மீதான மரியாதையை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
மருமகள்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்தால் அதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. மருமகள்கள் இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலோ அல்லது குடும்பத்தில் இருக்கும் மரபுகளை மீறினாலோ இவர்கள் உடனே கோபமடைவார்கள். அப்படி நடந்து கொள்ளும் மருமகளை பொறுப்பற்றவர்களாக பார்த்து அவர்களை ஒதுக்கி வைக்க துணிவார்கள்.
புரிதல் அவசியம்
மாமியார் மருமகள் உறவு என்பது வெறும் ராசியை மட்டும் சார்ந்ததல்ல. அது பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் அன்பை சார்ந்தது. ஜோதிடத்தின்படி இந்த கருத்துக்கள் பொதுவாக சொல்லப்பட்டவை மட்டுமே. ஒவ்வொரு தனிநபரின் குணாதிசயங்கள், அவர்களின் வளர்ப்பு முறை, அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து இவை மாறுபடலாம். எந்த உறவானாலும் அன்பும், விட்டுக் கொடுத்தலும், நேர்மையான உரையாடலும் இருந்தால் அது நீண்ட நாட்கள் நீடிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றால் எந்த ராசி மாமியாரும் சிறந்த மாமியாராகவே இருக்க முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

