- Home
- Astrology
- Astrology: புத்தாண்டில் உருவாகும் பஞ்சாங்க யோகம்.! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
Astrology: புத்தாண்டில் உருவாகும் பஞ்சாங்க யோகம்.! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
Panchank Rajyog 2026: 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சக்தி வாய்ந்த பஞ்சாங்க யோகம் உருவாக இருக்கிறது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பஞ்சாங்க யோகம் 2025
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அந்த வகையில் சனி மற்றும் சூரியன் இருவரும் முக்கிய மாற்றங்களை சந்திக்க இருக்கின்றனர். ஜனவரி 4, 2026 அன்று சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் சரியாக 72° கோணத்தில் அமைய இருக்கின்றனர். ஜோதிடத்தின் படி இந்த 72 டிகிரி கோணம் என்பது பஞ்சாங்க யோகத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரிய கோணத்தின் விளைவுகளால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சனி மற்றும் சூரியன் உருவாக்கும் பஞ்சாங்க யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். மேஷ ராசியினர் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சனி பகவானின் தாமதப்படுத்தும் குணங்கள் நீங்கி, சூரியனின் வேகத்தால் தடைபட்டு நின்ற பணிகள் மீண்டும் வேகமெடுக்கும். பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்புகள் பாராட்டுக்களைப் பெறும். சொந்த தொழில் செய்பவர்கள் அல்லது கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு சாதகமான நேரம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அல்லது தொழிலை விரிவாக்கம் செய்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பஞ்சாங்க யோகம் சிறப்பான நன்மைகளைத் தரும். பணப்புழக்கம் சீராக இருக்கும். நிலையான செல்வம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முதலீடுகள் குறித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு அல்லது தொலைதூரத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கடன்களை அடைப்பதற்கு அல்லது புதிய முதலீடுகளை திட்டமிடுவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். தொழில் மற்றும் தொழில் சார்ந்து எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். தொழிலில் புதிய ஆர்டர்கள் அல்லது ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். இதன் காரணமாக லாபம் பெருகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பஞ்சாங்க யோகம் உணர்ச்சிப்பூர்வமான சமநிலையைக் கொடுக்கும். குடும்ப உறவுகளில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள், பழைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு சுமூகமான நிலை ஏற்படும். சனி பகவான் கடக ராசிக்காரர்களுக்கு பொறுப்புணர்ச்சியையும் வெற்றிக்கான பாதையையும் காட்டுவார். இந்த காலகட்டத்தில் தாயின் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்து வந்த உடல்நலப் பிரச்சனைகள் தீரும். வீடு, மனை தொடர்பான விஷயங்களில் நன்மை உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பஞ்சாங்க யோகம் சாதகமான காலகட்டத்தை உருவாக்கும். ஆன்மீகத் தேடல் மற்றும் உயர் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல் அல்லது ஞானிகள் ஆதரவு கிடைக்கும். சட்டம் நீதித்துறை சார்ந்த விஷயங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவதற்கும், சமூகத்தில் நற்பெயர் எடுக்கவும் உகந்த காலகட்டத்தை உருவாக்கும். திருமண வாழ்க்கையில் அன்பு நிலைத்திருக்கும். வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். இதன் காரணமாக உறவுகள் வலுப்பெறும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

