- Home
- Astrology
- Astrology: அதிக சுயமரியாதை கொண்ட 4 ராசிக்காரர்கள்.. இவங்கல்லாம் நெருப்பு மாதிரி.. இவங்கள சீண்டுறவங்க தொலைஞ்சாங்க.!
Astrology: அதிக சுயமரியாதை கொண்ட 4 ராசிக்காரர்கள்.. இவங்கல்லாம் நெருப்பு மாதிரி.. இவங்கள சீண்டுறவங்க தொலைஞ்சாங்க.!
ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட ராசிகளைச் சேர்ந்தவர்கள் அதிக சுயமரியாதை கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சுயமரியாதை மிக்க ராசிக்காரர்கள்
சுயமரியாதை என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய பண்பாகும். சுயமரியாதை என்பது ஒரு நபரின் தன்னம்பிக்கை மற்றும் தன்மானத்தின் அடையாளமாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்கள் அதிக சுயமரியாதை கொண்ட நபர்களாக இருக்கின்றனர். இவர்கள் எப்போதும் தங்கள் சுயமரியாதையை உயர்ந்த நிலையில் வைத்திருக்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் தங்கள் கண்ணியத்தை காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கின்றனர். இந்த கட்டுரையில் உயர்ந்த சுயமரியாதை கொண்ட நான்கு ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைமைப் பண்பு கொண்டவர்கள். இவர்கள் தங்கள் தனித்துவத்தையும், திறமைகளையும் மிகவும் மதிக்கின்றனர். தங்களை எப்போதும் உயர்ந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். மற்றவர்களின் விமர்சனங்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. மாறாக தங்கள் முடிவுகளில் உறுதியாக இருக்கின்றனர். இவர்களின் சுயமரியாதை என்பது அவர்களின் அடையாளத்தின் மையப் பகுதியாகும். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதில்லை. யாராவது அவர்களின் சுயமரியாதையை உரசிப் பார்த்தால் பொங்கி எழுந்து விடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளையும், முடிவுகளையும் ஆழமாக மதிக்கின்றனர். தங்கள் தனிப்பட்ட மதிப்புகளை மற்றவர்களுக்கு முன்னாள் வெளிப்படுத்த இவர்கள் தயங்குவதில்லை. தங்கள் சுயமரியாதையை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். இவர்களின் உறுதியான மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கை அவர்களை மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்க வைக்கிறது. சுயமரியாதைக்கு யாரேனும் இழுக்கு ஏற்படுத்தினால் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சுயமரியாதையை பாதிக்கும் எந்த காரணியாக இருந்தாலும் அதை விட்டு அவர்கள் விலகிச் செல்ல தயங்குவதில்லை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் மற்றும் கண்டிப்பானவர்கள். இவர்கள் தங்கள் இலக்குகளையும், பொறுப்புகளையும் மிகவும் மதிக்கின்றனர். தங்களின் கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் மூலமாக சுயமரியாதையைப் பெறுகின்றனர். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தாலும் தங்கள் முடிவுகளை எப்போதும் தங்களுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எடுக்கின்றனர் சுயமரியாதை என்பது வெற்றிக்கான அடித்தளம் என்று நம்புகின்றனர். கடின உழைப்பு சுயமரியாதை ஆகியவையே தங்களை உயர்த்தும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துபவர்களை துச்சம் என மதித்து அவர்களை விட்டு விலகி விடுவர்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தைரியமான மற்றும் முனைப்பான குணத்திற்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்கள் திறமைகளையும், ஆற்றல்களையும் மிகவும் மதிக்கின்றனர். எந்த ஒரு சவால்களையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இவர்களுக்கு உண்டு. இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் சுயமரியாதைக்கு குறைவு ஏற்படுவதற்கு அனுமதிப்பதில்லை் தங்கள் கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மையை மதிக்கின்றனர். தங்களது சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கின்றனர். சுயமரியாதைக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் தனித்து நின்று போராடும் அளவிற்கு மன உறுதி கொண்டவர்கள். நியாயத்திற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிட கருத்துக்கள், பஞ்சாங்கம் மற்றும் மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த தகவலை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை)