MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: இந்த 4 ராசிக்காரங்க வயதுக்கு மீறிய அறிவு கொண்டவர்களாம்.! சிறு வயதிலேயே அதி புத்திசாலியா இருப்பாங்களாம்.! உங்க ராசி இருக்கா?

Astrology: இந்த 4 ராசிக்காரங்க வயதுக்கு மீறிய அறிவு கொண்டவர்களாம்.! சிறு வயதிலேயே அதி புத்திசாலியா இருப்பாங்களாம்.! உங்க ராசி இருக்கா?

Zodiac signs who more intelligent beyond their age: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Oct 23 2025, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வயதுக்கு மீறிய அறிவு கொண்ட ராசிகள்
Image Credit : AI Generated

வயதுக்கு மீறிய அறிவு கொண்ட ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்களும், திறமைகளும் உண்டு. சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே வயதை விட அதிக நுண்ணறிவு, ஆழமான சிந்தனை மற்றும் அறிவு முதிர்ச்சியுடன் காணப்படுவார்கள். இவர்களின் புத்திசாலித்தனம் என்பது புத்தக அறிவை மட்டும் குறிக்காமல் ஞானம், சிக்கல்களை கையாளும் திறமை, உள்ளுணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. தங்களின் வயதை தாண்டிய அறிவாற்றல் மற்றும் புரிதலை வெளிப்படுத்தும் நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

  • கன்னி ராசிக்காரர்கள் அறிவின் கிரகமான புதன் பகவானால் ஆளப்படுபவர்கள். 
  • புதன் பகவான் அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். 
  • புதன் ஆளும் கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே நுணுக்கமான சிந்தனைக்கும், விவரங்களை அலசி ஆராயும் திறனுக்கும் பெயர் பெற்றவர்கள். 
  • இவர்களின் அறிவு எப்போதும் நடைமுறைத் தன்மை கொண்டது. எந்த ஒரு விஷயத்தையும் விஞ்ஞானியை போல தீர ஆராய்வார்கள். 
  • நன்மை, தீமைகளை ஆராய்ந்து மிகவும் திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்பார்கள். 
  • ஒரு சிக்கலை தீர்ப்பதில் அவசரப்படாமல் அதன் மூல காரணத்தை கண்டறிவதிலும், எதிர்காலத்தில் அது மீண்டும் நிகழாமல் இருக்க ஒரு முறையான அமைப்பை உருவாக்குவதிலும் இவர்களின் முதிர்ச்சி வெளிப்படும். 
  • சிறு வயதிலேயே பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலும், கவனத்துடன் வேலை செய்வதிலும் இவர்கள் தனித்து தெரிகிறார்கள்.
35
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்கள் அதிக சிந்தனையாளர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். 
  • இவர்கள் புதுமை மற்றும் மாற்றத்தின் கிரகமான யுரேனஸ் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். 
  • இவர்களின் நுண்ணறிவு என்பது எல்லைகளை தாண்டியதாக இருக்கும். 
  • புதிய யோசனைகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக மாற்றங்களைப் பற்றி ஆழமாக சிந்திப்பார்கள். 
  • இவர்களின் பார்வைகள் பெரும்பாலும் தங்கள் காலத்தை விட முன்னோக்கியதாகவே இருக்கும். 
  • இவர்கள் தங்கள் தனிப்பட்ட உணர்ச்சிகளை விட பொதுநலன் குறித்து அதிகமாக சிந்திப்பார்கள். 
  • உணர்ச்சிவசப்படாமல் ஒரு விஷயத்தை நடுநிலையுடன் அணுகும் திறன் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். 
  • தங்களின் வயது மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மீறி சிந்திக்கும் துணிச்சல், இவர்களின் வயதுக்கு மீறிய ஞானத்தை காட்டுகிறது.
45
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

  • விருச்சிக ராசிக்காரர்கள் ஆழ்ந்த பார்வை மற்றும் விஷயங்களை ஊடுருவி பார்க்கும் உள்ளுணர்வு கொண்டவர்கள். 
  • இவர்கள் ரகசியங்கள் மற்றும் மாற்றத்தின் கிரகமான ப்ளூட்டோ கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். 
  • இவர்களின் புத்திசாலித்தனம் என்பது உளவியல் புரிதல் தொடர்பானது. 
  • மனிதர்களின் மனதை படிக்கும் திறமை கொண்டுள்ளனர். 
  • ஒருவரின் மனதில் உள்ள உண்மை நோக்கங்கள் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்களை இவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். 
  • ஒரு துப்பறிவாளரைப் போல ஆராய்ந்து உண்மையை கண்டறிய ஆர்வம் காட்டுவார்கள். 
  • மேலும் கடினமான சூழ்நிலைகளையும், மனித உறவுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்களையும் அமைதியாகவும், சாமர்த்தியமாகவும் கையாளும் திறன் பெற்று இருக்கிறார்கள். 
  • இதன் காரணமாக இவர்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் விளங்குகின்றனர்.
55
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

  • மிதுன ராசிக்காரர்கள் தகவல்களை வேகமாக செயலாக்குவதிலும், கூர்மையான நகைச்சுவையுடன் பேச்சுத்திறனிலும் வல்லவர்கள். 
  • இவர்களும் புத்திசாலித்தனத்தின் காரணமாக விளங்கும் புதன் பகவானால் ஆளப்படுபவர்கள். 
  • இவர்களின் நுண்ணறிவு என்பது மிக வேகமானது. பஞ்சு எவ்வாறு வேகமாக தண்ணீரை உறிஞ்சுமோ அதுபோல இவர்கள் ஒரு தகவலை வேகமாக உள்வாங்கிக் கொண்டு அதை மற்றவர்களுக்கு புரியும்படி தெளிவாக எடுத்துரைப்பார்கள். 
  • எந்த ஒரு புதிய சூழ்நிலைக்கும் அல்லது குழுவிற்கும் ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் தகவல் தொடர்பு திறனுடன் விளங்குவார்கள். 
  • இக்கட்டான சூழ்நிலையில் உடனடியாக சரியான பதிலை கொடுப்பது, பலதரப்பட்ட கருத்துக்களை ஒரே நேரத்தில் புரிந்து கொள்வது, ஒரு சிக்கலை பல கோணங்களில் பகுப்பாய்வு செய்வது ஆகிய இவர்களின் முதிர்ச்சிக்கான அடையாளங்கள். 
  • இளம் வயதிலேயே இவர்கள் விவாதங்களில் முதிர்ந்த கருத்துக்களை முன் வைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
     

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tri Ekadashi Yoga : பிரச்சனைகளை குஜிலிமஸ்து செய்யப்போகும் திரி ஏகாதசி யோகம்... சுக்கிரன் குரு அருளால் பலன் பெறும் 5 ராசிகள்!
Recommended image2
Trigrahi Raja Yoga: ஒரே ராசியில் 3 கிரகங்கள் சேர்க்கை! திரிகிரக ராஜயோகத்தால் பலன் பெறும் 4 ராசிகள்
Recommended image3
Diwali Astrology 2026: பல வருஷத்துக்கு பிறகு தீபாவளிக்கு வரும் சூப்பர் யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
Astrology: 18 ஆண்டுகளுக்குப் பின் விருச்சிகத்தில் உருவாகும் ராஜயோகம்.! பணத்தையும், புகழையும் குவிக்கப் போகும் 3 ராசிகள்.!
Recommended image2
Astrology: நவம்பர் மாதத்தில் நடக்கும் 6 கிரகப் பெயர்ச்சிகள்.! ராஜ வாழ்க்கை வாழப் போகும் 5 ராசிக்காரர்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved