கோடி கோடியா பணம் உங்களை தேடி வர!! எந்த ரத்தினக் கல் வைச்சு மோதிரம் போடனும்?
எந்த ரத்தினக் கல்லை எந்த விரலில் அணிந்தால் அதிர்ஷ்டத்தில் கதவு திறக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எந்த ரத்தின கல் அணியலாம்?
நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்கிறோம். இருப்பினும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போகிறது. ஆனால் ஜோதிடத்தின்படி அதிர்ஷ்டம் பெற கிரகங்கள் நம்முடன் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில், ராசிகளும் கிரகங்களும் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையை பாதிப்பதாக பெரும்பாலான நம்புகிறார்கள். இதற்காக பலர் கைகளில் ரத்தின கற்கள் பதித்த மோதிரத்தை அணிகிறார்கள். அதிர்ஷ்டத்திற்காக முகேஷ் அம்பானி குடும்பம் மட்டுமல்ல, பல அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் ரத்தின கற்கள் பதித்த மோதிரத்தை அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது பார்ப்பதற்கு வெறும் ஃபேஷன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த ரத்தின கற்கள் உண்மையில் அதிஷ்டத்தின் கதவை திறக்கின்றன தெரியுமா? ஆகவே எந்த ரத்தின கற்கள் மோதிரத்தை எந்த விரலில் அணிந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரூபி
ரூபி ரத்தின கல் என்பது சூரியனின் சக்தியை குறிக்கும். இந்த கல் பதித்த மோதிரத்தை அணிந்தால் தன்னம்பிக்கை தலைமைத்துவம் பண்புகள் மற்றும் நம்பிக்கை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கல் பதித்த மோதிரத்தை கடினமான முடிவுகளை எடுப்பவர்கள் அல்லது அதிக ஆற்றல் தேவைப்படும் இடத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமே அணிவார்கள். இந்த கல் பதித்த மோதிரத்தை மோதிர விரலில் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மரகதம்
மரகதம் புதன் கிரகத்தை குறிக்கின்றது. இந்த கல் வார்த்தைகளை பயனுள்ளதாகவும், தெளிவான எண்ணங்களாகவும் மாற்ற பெரிதும் உதவுகின்றது. பொதுவாக இந்த ரத்தினக் கல் பதித்த மோதிரத்தை பொதுமக்களிடம் பேசும் தொழில் செய்பவர்கள் எழுத்தாளர்கள் போன்றோர் தான் இதை அணிவார்கள். இந்த ரத்தின கல் பதித்த மோதிரத்தை சுண்டு விரலில் அணிய வேண்டும்.
நீலக்கல்
நீலக்கல் சனி கிரகத்தை குறிக்கின்றது. இது பொறுமை, வாழ்க்கையின் சிரமங்களை சமாளிக்கும் வலிமை மற்றும் நிலத்தன்மையை தரும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் இந்த கல் பதித்த மோதிரத்தை எல்லோரும் அணியக்கூடாது. ஜோதிடர்களின் ஆலோசனை கேட்டு மட்டுமே இதை அணிய வேண்டும். நடுவிரலில் இந்த கல் பதித்த மோதிரத்தை அணிந்தால் பலன்கள் சிறப்பாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
முத்துக்கள்
முத்துக்கள் சந்திரனை குறிக்கின்றது. இது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், உள் அமைதியை பேனாவும் உதவும். அதிகமாக கோபப்படுபவர்கள் அல்லது தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இது அணிந்தால் நன்மை பெறலாம் என்று நம்பப்படுகிறது. முத்துக்கள் பதித்த மோதிரத்தை சுண்டு விரலில் தான் அணிய வேண்டும்.
சிவப்பு பவள ரத்தினக்கல்
சிவப்பு பவளம் செவ்வாய் கிரகத்தின் சின்னம். இது ஒரு சக்தி வாய்ந்த பாதுகாப்பு இரத்தினமாக கருதப்படுவதால், வாழ்க்கையில் வரும் எல்லாவிதமான சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு இது தைரியத்தையும், போராடும் மன உறுதியையும் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த கல் பதித்த மோதிரத்தை நடுவிரலில் தான் அணிய வேண்டும்.
மேலே சொன்ன ரத்தின கற்கள் வெறும் ஃபேஷன் காக மட்டுமல்ல அவை தனிப்பட்ட நம்பிக்கை, ஆன்மீகம், கலாச்சாரம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகின்றது. ஆனால் இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.