- Home
- Astrology
- Nov 04 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, விடாமுயற்சிக்கான பலன்களை இன்று அனுபவிப்பீர்கள்.! நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.!
Nov 04 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, விடாமுயற்சிக்கான பலன்களை இன்று அனுபவிப்பீர்கள்.! நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.!
Today Rasi Palan : நவம்பர் 04, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 04, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் தன்னம்பிக்கை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சில விஷயங்களில் சிறிய தடைகள் ஏற்பட்டாலும், நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கான பலன்களைப் பெறுவீர்கள். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள். இயந்திரங்களை கையாளும் தொழிலாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
இன்று எதிர்பாராத விதமாக பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், குடும்பத்தின் தேவைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி ஆதாயங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் அவசரப்பட்டு புதிய முதலீடுகளை தவிர்த்து யோசித்து முடிவு எடுக்கவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். மனம் திறந்து பேசுவதன் மூலம் கருத்து வேறுபாடுகள் நீங்கி, நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதமான போக்கை விட்டுக் கொடுத்து கையாளுவது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் அல்லது சகோதரர்கள் மூலம் பண உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பரிகாரங்கள்:
முருகப்பெருமான் அல்லது சிவபெருமானை வணங்குவது நன்மைகளைத் தரும். செவ்வாய்க்கிழமை என்பதால் அம்மன் ஆலயங்களில் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷம். நீல நிறத் துணியில் கோதுமையைக் கட்டி கோயிலில் தானம் அளிப்பது சிறந்தது. ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.