MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: பூமியின் மகனான செவ்வாய் பகவான் நிகழ்த்தும் அதிசயம்.! உருவாகும் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 3 ராசிகள்.!

Astrology: பூமியின் மகனான செவ்வாய் பகவான் நிகழ்த்தும் அதிசயம்.! உருவாகும் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 3 ராசிகள்.!

Navapanchama Raja Yoga: விருச்சிக ராசியில் செவ்வாய் பகவான் நெப்டியூனுடன் இணைந்து நவம்பர் 4 ஆம் தேதி நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Nov 03 2025, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விருச்சிகத்தில் இணையும் செவ்வாய் வருணன்
Image Credit : Asianet News

விருச்சிகத்தில் இணையும் செவ்வாய்-வருணன்

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக அறியப்படும் செவ்வாய் பகவான் 9 கிரகங்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார். இவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். செவ்வாய் பகவான் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். அவர் தனது சொந்த ராசியில் இருக்கும் நிலையில் ருச்சக ராஜயோகம் உருவாகிறது. இந்த நிலையில் அவர் பிறகிரகங்களுடன் இணைப்புகள் அல்லது அம்சங்களை உருவாக்கி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறார்.

25
நவபஞ்சம ராஜயோகம் எப்போது உருவாகிறது?
Image Credit : Asianet News

நவபஞ்சம ராஜயோகம் எப்போது உருவாகிறது?

அந்த வகையில் நவம்பர் 4 ஆம் தேதி அவர் வருணனுடன் (நெப்டியூன்) இணைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறார். நவம்பர் 4 ஆம் தேதி காலை 9:27 மணிக்கு செவ்வாய் மற்றும் நெப்டியூன் இருவரும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருக்கின்றனர். செவ்வாய் விருச்சிக ராசியிலும், நெப்டியூன் மீன ராசியிலும் அமைந்து இந்த ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். நெப்டியூன் ஒரு ராசியில் சுமார் 14 ஆண்டுகள் தங்கி இருப்பார்.

Related Articles

Related image1
Astrology: குரு சுக்கிரனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்.! நவ.3 க்கு பிறகு இந்த 3 ராசிகளின் தலையெழுத்தே மாறும்.!
Related image2
Astrology: நவம்பரில் உருவாகும் 6 அரிய ராஜயோகங்கள்.! ஏழ்மை நீங்கி லட்சாதிபதி ஆகப்போகும் 6 ராசிக்காரர்கள்.!
35
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

செவ்வாய் மற்றும் நெப்டியூனில் நவபஞ்சம ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. அதனுடன் உருவாகும் ருச்சக ராஜயோகம் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளை திறக்கும் புதிய வேலை அல்லது புதிய வணிகத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். நிதி ரீதியாக இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். மேலும் கடகத்தில் குரு இருப்பதும் உங்களுக்கு அதிக நன்மைகளை தரும்.

45
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மங்களகரமானதாக இருக்கும். பொன், பொருள், வசதிகள், ஆடம்பரங்கள் ஆகியவற்றை அனுபவிப்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவுகள், நிறைவேறாத ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவது உறுதி. உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும். உங்கள் தகுதிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களில் இருந்து நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் குடும்ப வாழ்க்கையும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வீர்கள். தரமான நேரத்தையும் செலவிடுவீர்கள்.

55
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக இருக்கலாம். நீங்கள் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். வணிகத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த ஆர்டர்கள், ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் மற்றும் பணி மாறுதலாக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
2026ல் கோடி கோடியாக பேங்க அக்கவுண்டுல பணத்தை குவிக்க போகும் டாப் 4 ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?
Recommended image2
Jan 08 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்.! எச்சரிக்கை.!
Recommended image3
Jan 08 Simma Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இன்று பணவரவு கொட்டும்.! இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்.!
Related Stories
Recommended image1
Astrology: குரு சுக்கிரனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்.! நவ.3 க்கு பிறகு இந்த 3 ராசிகளின் தலையெழுத்தே மாறும்.!
Recommended image2
Astrology: நவம்பரில் உருவாகும் 6 அரிய ராஜயோகங்கள்.! ஏழ்மை நீங்கி லட்சாதிபதி ஆகப்போகும் 6 ராசிக்காரர்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved