- Home
- Astrology
- Viruchiga Rasi Palan Nov 20: விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் 4 கிரகங்கள் இணைவு.! இன்று அடிக்கப்போகும் ஜாக்பாட்.!
Viruchiga Rasi Palan Nov 20: விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் 4 கிரகங்கள் இணைவு.! இன்று அடிக்கப்போகும் ஜாக்பாட்.!
Nov 20 Viruchiga Rasi Palan : நவம்பர் 20, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 20, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன், புதன், சந்திரன், செவ்வாய் ஆகியோரின் கூட்டணி இருப்பதால் உங்களுடைய கருத்துக்களும், முடிவுகளும் கவனத்தை ஈர்க்கும்.
துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்களை நீண்ட நாட்கள் வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பேசும் பொழுது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவது நல்லது.
நிதி நிலைமை:
சுக்கிரனின் வலுவான நிலை காரணமாக பண வரவு சீராக இருக்கும். எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது ஆடம்பரங்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். எனவே முதலீடுகள் குறித்து நிதானமாக முடிவெடுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குருவின் பார்வை காரணமாக உறவுகளில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் தெளிவு பிறக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். சனியின் ஆதிக்கம் காரணமாக தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். குடும்ப பொறுப்புக்கள் உங்களுக்கு சற்று அழுத்தத்தை கொடுக்கலாம்.
பரிகாரங்கள்:
இன்று ஏற்படும் தடைகளில் இருந்து நிம்மதி பெறுவதற்கு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சூரியனுக்கு நீர் அர்ப்பணித்து வழிபடலாம். துர்க்கை அம்மனை வழிபடுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும். மாற்றுத்திறனாளிகள் அல்லது ஏழைப் பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

