- Home
- Astrology
- Nov 12 Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் அடிக்கும் பந்துகள் எல்லாமே சிக்ஸர் தான்.!
Nov 12 Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் அடிக்கும் பந்துகள் எல்லாமே சிக்ஸர் தான்.!
Nov 12 Viruchiga Rasi Palan : நவம்பர் 12, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 12, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைய தினம் உங்கள் வளர்ச்சி நிலையாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.
நிதி நிலைமை:
பணப்புழக்கம் இன்று திருப்திகரமாக இருக்கும். உங்களுடைய முழு திறனையும் பயன்படுத்தி நிதி நிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நேர்மறையான எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் நல்ல புரிதல் உருவாகும். உங்கள் சுறுசுறுப்பான மற்றும் நகைச்சுவையான குணம் கடினமான சூழலையும் மகிழ்ச்சியாக மாற்றும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு சிறு குழப்பங்கள் ஏற்படலாம். எனவே அமைதியுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரங்கள்:
இன்று கால பைரவரை வழிபடுவது நன்மைகளைத் தரும். பசு மாடுகளுக்கு உணவளிப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள், ஏழைப் பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.