- Home
- Astrology
- Jan 31 Viruchiga Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் விருச்சிக ராசி.! இன்று தன லாபம் உண்டாகும்.!
Jan 31 Viruchiga Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் விருச்சிக ராசி.! இன்று தன லாபம் உண்டாகும்.!
Jan 31 Viruchiga Rasi Palan : ஜனவரி 31, 2026 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, நாள் முழுவதும் சமநிலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைய குறைந்த அளவு முயற்சி போதுமானதாக இருக்கும். உங்கள் இலக்குகளும், லட்சியங்களும் நிறைவேறும் நாளாக இருக்கும்.
நிதி நிலைமை:
இன்று நிதி நிலைமை மேம்படும். பணவரவு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். கணிசமான தொகையை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வசூல் ஆகாத கடன்கள் வசூலாகும். கொடுத்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும் வாய்ப்புகள் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அன்னோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் பக்க பலமாக இருப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பணியிடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரங்கள்:
இன்றைய தினம் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. முருகனுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும். ஏழை எளியவர்களுக்கு பருப்பு அல்லது மளிகைப் பொருட்கள் தானமாக வழங்குவது சுப பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

