- Home
- Astrology
- Viruchiga Rasi Palan Dec 05: விருச்சிக ராசி நேயர்களே, இன்று அடித்து ஆடப்போறீங்க.! லக் உங்க பக்கம் தான்.!
Viruchiga Rasi Palan Dec 05: விருச்சிக ராசி நேயர்களே, இன்று அடித்து ஆடப்போறீங்க.! லக் உங்க பக்கம் தான்.!
Dec 05 Viruchiga Rasi Palan : டிசம்பர் 05, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 05, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மனோபலத்துடனும் காணப்படுவீர்கள். நிலுவையில் இருக்கும் பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாகும்.
உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சுக்கிரன் மற்றும் புதனின் நிலை காரணமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு மனக்கவலைகள் அல்லது உடல் சோர்வுகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் தைரியம் கிடைக்கும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை சீராக இருக்கும். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தியாவசியமற்ற விஷயங்களுக்காக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. முதலீடுகள் குறித்து நிதானமாக முடிவு எடுக்கவும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்றைய தினம் தீர்வு காண்பீர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் பேசும் பொழுது கவனத்துடன் பேச வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இணக்கமாக இருக்கும். குடும்பத்தாரின் ஆதரவு மனதிற்கு ஆறுதல் அளிக்கும். துணையுடன் வெளிப்படையாக பேசுவது உறவை மேலும் பலப்படுத்தும். திருமணமானவர்களுக்கு இது மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
பரிகாரங்கள்:
துர்க்கை அம்மன் அல்லது முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாடு செய்வது துணிச்சல், வீரம் மற்றும் வெற்றியைத் தரும். அம்மன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை கலந்த பால் வழங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

