MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்த செல்வத்தின் அதிபதி.! ஐஸ்வர்யம் பெறும் 4 ராசிகள்.! சகல நன்மைகளும் கிடைக்குமாம்.!

ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்த செல்வத்தின் அதிபதி.! ஐஸ்வர்யம் பெறும் 4 ராசிகள்.! சகல நன்மைகளும் கிடைக்குமாம்.!

Venus Transit in Rohini Nakshatra : செல்வம் மற்றும் செழிப்பிற்கு அதிபதியாக விளங்கும் சுக்கிர பகவான் ஏப்ரல் 28, 2026 ரோகிணி நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்க இருக்கிறார். இதன் காரணமாக பலன் பெற உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 28 2026, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Venus Transit in Rohini Nakshatra
Image Credit : Asianet News

Venus Transit in Rohini Nakshatra

ஜோதிடத்தின்படி ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் செல்வம் மற்றும் செழிப்பிற்கு அதிபதியான சுக்கிர பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். ரோகிணி நட்சத்திரத்தை சந்திர பகவான் ஆட்சி செய்கிறார். 

சந்திரனின் வீட்டிற்குள் சுக்கிரனின் சஞ்சாரமானது சில ராசிகளுக்கு மகிழ்ச்சியையும், செல்வ செழிப்பையும் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. இவ்வாறு இந்த நட்சத்திரத்தில் மே 8 வரை நிலைத்திருப்பார். அதன் பிறகு அவர் மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். சுக்கிரப் பெயர்சியால் நன்மை பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

25
ரிஷபம்
Image Credit : Gemini AI

ரிஷபம்

சுக்கிரனின் ரோகிணி நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். இந்த காலக்கட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக நிதி மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல ஆதாயங்களைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலையான வருமானத்திற்கான வழிகள் தேடி வரும். 

மனக்கலக்கத்தில் இருந்து வந்தவர்களுக்கு குழப்பங்கள் தீரும். உடல் நிலை மேம்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். அரைகுறையாக நின்ற பணிகளை முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயர்வதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.

Related Articles

Related image1
Budh Gochar 2026 : மேஷ ராசியில் புதன் பகவான் சஞ்சாரம்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்.! அதிரடி திருப்பங்களை சந்திக்கப்போறீங்க.!
Related image2
South Facing Home : தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா? இந்த 4 பரிகாரங்களை செய்தால் நிம்மதியும், அதிர்ஷ்டமும் பெருகும்.!
35
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சுக்கிர பகவானின் நட்சத்திர மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு மூதாதையர் சொத்துக்கள் வாயிலாக நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். பல வழிகளிலும் பணம் வந்து உங்கள் பையை நிரப்பும். வாழ்க்கைத் தரம் உயரும். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். 

உத்தியோகத்திலும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கலாம். பாதியில் நின்ற பணிகள் முடிவடையத் தொடங்கும். உங்களுடைய சமூக வட்டம் மற்றும் வெளி உலகத் தொடர்பு விரிவடையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வம்பு வழக்குகள் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

45
துலாம்
Image Credit : Gemini AI

துலாம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சிக்கு துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வாரி வழங்கும். துலாம் ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது, உங்கள் ஆளுமையை மெருகேற்றுவார். உங்கள் பேச்சில் ஒரு வசீகரம் கிடைக்கும். சுகபோகங்களும், வசதிகளும், ஆடம்பரங்களும் பெருகும். நகை, வாகனம் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். 

செல்வ வளங்களுக்கு எந்த குறைவும் ஏற்படாது. தொழிலில் வளர்ச்சி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். வாழ்வில் திருப்தி உண்டாகும். மனக்கசப்புகள் நீங்கி, குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வியக்க வைக்கும் வகையில் நல்ல செய்திகள் வீடு வந்து சேரும். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும்.

55
கும்பம்
Image Credit : Gemini AI

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ரோகிணி நட்சத்திர பெயர்ச்சியானது நற்பலன்களை அளிக்கும். உங்கள் வணிகம் மற்றும் தொழில் ரீதியான முயற்சிகள் வேகம் பிடிக்கும். பழைய கடன்களில் இருந்து விடுதலைப் பெறுவீர்கள். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் கைக்கு வரும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

உங்களின் தேவைகள், கனவுகள் பூர்த்தியாகத் தொடங்கும். தனியார் துறையில் வேலை பார்த்து வருபவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களின் ஊதிய உயர்வு, சம்பள உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். செல்வ வளங்களுக்கு எந்த குறைவும் ஏற்படாது. உபரி வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சூரிய பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
Recommended image2
Aries Transit: உச்சம் பெறும் சூரியன்.. ஜொலிக்கப் போகும் புதன்: மேஷத்தில் உருவான 'ராஜயோகம்' யாருக்கு லாபம்?
Recommended image3
ஜோதிடம் பயமுறுத்தும் கலையா? நடிகர் தாமு சொல்லும் Astrology ரகசியம்.!
Related Stories
Recommended image1
Budh Gochar 2026 : மேஷ ராசியில் புதன் பகவான் சஞ்சாரம்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்.! அதிரடி திருப்பங்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image2
South Facing Home : தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா? இந்த 4 பரிகாரங்களை செய்தால் நிம்மதியும், அதிர்ஷ்டமும் பெருகும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved