- Home
- Astrology
- Astrology : சிம்ம ராசியில் சந்திக்கும் சூரியன் சுக்கிரன்.! செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 4 ராசிகளின் தலைவிதியே மாறப் போகுதாம்.!
Astrology : சிம்ம ராசியில் சந்திக்கும் சூரியன் சுக்கிரன்.! செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 4 ராசிகளின் தலைவிதியே மாறப் போகுதாம்.!
செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அழகை குறிக்கும் கிரகமான சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்ராதித்ய ராஜயோகம்
நவகிரகங்களில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சியைத் தரும் கிரகமாக விளங்குகிறார். இவர் செப்டம்பர் 15ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே சிம்ம ராசியில் சூரிய பகவான் பயணித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சூரியனும் சுக்கிரனும் இணைந்து சிம்ம ராசியில் சுக்கிராதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகம் மிகவும் செல்வாக்கு மிக்க யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் சில ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 15 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவதால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். தொழிலில் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் யோகம் உண்டு. மோசமான நிதி நிலைமையை மீண்டும் சரியான பாதைக்கு திருப்ப முடியும். கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். குடும்ப உறவுகளில் இருந்த தவறான புரிதல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். உங்களது துணைவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். நிலம், சொத்து, மனை, வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வருகிறது.
சிம்மம்
சிம்ம ராசியில் சுக்கிரன் நுழைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ஏற்கனவே சிம்ம ராசியில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் கூடுதல் நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். இந்த சுக்ராதித்ய ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளை கொண்டு வரவுள்ளது. இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் ஆதரவுடன் எந்த சவால்களையும் திறமையாக முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையிலும் நல்ல செய்திகளைப் பெறலாம். முதலீட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய ராஜயோகம் நல்ல பலன்களை அளிக்க உள்ளது. சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். உங்கள் தொழிலை பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு உண்டு. சிறிதாக தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை மாற்றுவீர்கள். தொழில் விரிவாக்கத்திற்காக கடன் கேட்டு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு விரைவில் கடன் கிடைக்கும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரலாம். தனியார் நிறுவனங்ளில் வேலை செய்து வருபவர்களுக்கு பதிவு உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். சிறிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில், நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும்.
தனுசு
சூரியன் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் சுக்ராதித்ய ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு உடல் நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். உங்கள் செல்வம் அபரிமிதமாக அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடனிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். தொழிலில் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இதன் காரணமாக ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)