MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சுக்ராதித்ய ராஜயோகத்தால் கொட்டப் போகும் பணமழை! இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்!

சுக்ராதித்ய ராஜயோகத்தால் கொட்டப் போகும் பணமழை! இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்!

Venus Sun Raja Yoga: அக்டோபரில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைத்து கோடீஸ்வர யோகம் உண்டாகும். இவை எந்தெந்த ராசிகள்? என விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 04 2026, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுக்ராதித்ய ராஜயோகம்
Image Credit : AI

சுக்ராதித்ய ராஜயோகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் சேர்க்கை மனிதர்களின் வாழ்விலும், ராசிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, இரண்டு முக்கிய கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் போது அங்கு 'ராஜயோகம்' உருவாகிறது. அந்த வகையில், வரும் அக்டோபர் மாதத்தில் சூரிய பகவானும், செல்வத்திற்கும் ஆடம்பரத்திற்கும் அதிபதியான சுக்கிர பகவானும் இணைந்து 'சுக்ராதித்ய ராஜயோகத்தை' உருவாக்கவுள்ளனர்.

பஞ்சாங்கத்தின்படி, கிரகங்களின் ராஜாவான சூரியன், வரும் அக்டோபர் 17-ஆம் தேதி சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசிக்குள் பிரவேசிக்கிறார். ஏற்கனவே அந்த ராசியில் சுக்கிரன் சஞ்சரித்து வருவதால், இவ்விரு கிரகங்களின் சக்தி வாய்ந்த சேர்க்கை நிகழ்கிறது. இந்த அற்புத ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலித்தாலும், குறிப்பான 4 ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம் மற்றும் பண வரவு போன்றவற்றில் அபரிமிட்டமான நன்மைகள் கிடைக்கப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : ChatGPT

1. மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு அவர்களின் 7-வது வீட்டில் இந்தச் சுக்ராதித்ய ராஜயோகம் அமைகிறது. உங்களின் கடின உழைப்புக்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் நீண்ட நாட்களாக வேலை மாற்றத்தையோ அல்லது புதிய வேலையோ தேடிக்கொண்டிருந்தால், இக்காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் அமையும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவார்கள். தடைபட்டு நின்ற காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

35
2. கடகம்
Image Credit : ChatGPT

2. கடகம்

கடக ராசியின் 4-வது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகுவதால், குடும்ப வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பொன்னான நாளாக இது அமையும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் நீண்ட காலக் கனவுகள் நனவாக வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் ஈட்டும் சூழல் உருவாகும். செய்யும் செயல்களில் கவனமாகச் செயல்பட்டால், எதிர்பாராத அளவில் கைநிறைய லாபம் சம்பாதிக்கலாம்.

45
3. கன்னி
Image Credit : ChatGPT

3. கன்னி

கன்னி ராசிக்கு 2-வது வீட்டில் சூரியன் - சுக்கிரன் சேர்க்கை நிகழவுள்ளதால், தன ஸ்தானம் பலப்பட்டு பண மழை பொழியும். எங்கேயோ முடங்கிவிட்டதாக நினைத்த பழைய பணம் அல்லது முதலீடுகள் வட்டியும் முதலுமாக உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபாரம் சூடுபிடித்து நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் திறமைக்கும் பொறுப்புணர்ச்சிக்கும் பணியிடத்தில் பாராட்டுக்கள் குவியும். எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பது நன்மையை தரும்.

55
4. துலாம்
Image Credit : ChatGPT

4. துலாம்

சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியின் முதல் வீட்டிலேயே இந்த சுக்ராதித்ய ராஜயோகம் பிறப்பதால், இந்த ராசிக்காரர்களுக்குக் கோடீஸ்வர யோகம் என்று கூட சொல்லலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளுடன் ஒப்பந்தம் செய்து தொழிலை விரிவுப்படுத்துவார்கள். உங்களுடைய தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். பல்வேறு புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வந்து உங்களின் பொருளாதார நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டவை. உங்கள் சொந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பு துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lakshmi Narayan Yogam : சுக்கிரன்-புதன் சேர்க்கை! அக்டோபரில் பணம், தொழிலில் முன்னேற்றம் பெறும் 5 ராசிகள்?
Recommended image2
Colors Astrology : உங்கள் ராசியின் அதிர்ஷ்ட நிறம் எது தெரியுமா? 12 ராசிகளுக்கும் பின்னால் இருக்கும் கிரக ரகசியம்!
Recommended image3
Astrology: சங்கமிக்கும் ராகு - புதன் - குரு.! 4 ராசிகளுக்கு தினமும் பணமழை.! செல்வம் சேர்க்கும் நேரம் வந்தாச்சு.!
Related Stories
Recommended image1
Astrology: திரிகிரக யோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்.. பணமழை!
Recommended image2
செவ்வாய் பெயர்ச்சியால் அடிமேல் அடி வாங்கப்போகும் 4 ராசிகள்! பண இழப்பு.. தப்பிக்க பரிகாரங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved