வீட்டில் 'இந்த' இடங்களில் மயில் இறகுகளை வைங்க; குடும்பம் செழிப்பாக இருக்கும்!
Peacock Feather Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் எந்த இடங்களில் மயில் இறகுகளை வைத்தால் மகிழ்ச்சி வரும், குடும்பம் செழிப்பாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

வீட்டில் 'இந்த' இடங்களில் மயில் இறகுகளை வைங்க; குடும்பம் செழிப்பாக இருக்கும்!
இந்து மத வேதங்களின்படி, வழிபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையவை. தெய்வங்களும் இயற்கைக்கு நன்றி தெரிவித்து அதை வழிபடுவதன் முக்கியத்துவத்தை மனிதகுலத்திற்கு விளக்கியுள்ளனர். மேலும் இயற்கையுடன் தொடர்புடைய சில பொருட்களையும் தெய்வங்களும் அணிவார்கள். அந்த பொருட்கள் மனித வாழ்க்கைக்கு ரொம்பவே புனிதமானது என்று கூறப்படுகின்றது.
மயிலிறகு:
இயற்கையுடன் தொடர்புடைய ஒன்று, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது மயிலிறகு. மயிலிறகை உங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கியமாக மயிலிறகை உங்களது வீட்டின் வைப்பதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். மேலும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு பெருகும்.
இதையும் படிங்க: மயில் தோகை கொண்டு இந்த பரிகாரங்கள் செஞ்சி பாருங்க.. அப்போ நடக்குறத நீங்களே பாருங்ளே..!!
வீட்டில் மயில் இறகு வைப்பதன் நன்மைகள்:
- வீட்டில் உள்ள பூஜை அறையில் இரண்டு மயிலிறகுகளை ஒன்றாக வைத்தால் திருமண தடைகள் நீங்கும். வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால், பூஜை அறையில் 5 மயில் இறகுகளை வைத்தால், நேர்மறை ஆற்றல் வீடு முழுவதும் நிரப்பப்படும்.
- வீட்டின் பிரதான கதவு தொடர்பான வாஸ்து குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் கதவு சட்டகத்தில் அமர்ந்த நிலையில் விநாயகர் நிறுவி அவர் மீது மூன்று மயில் இறகுகளை வைக்க வேண்டும்.
- உங்களது படுக்கையறையில் படுக்கைக்கு பின்னால் உள்ள சுவரில் மயிறைகை வைத்தால் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இதையும் படிங்க: பணத்தை ஈர்க்கும் இருக்கும் மயிலிறகு; எந்த திசையில் வைக்கணும் தெரியுமா?!
வீட்டில் மயில் இறகு
- வீட்டின் வரவேற்பறை அல்லது சாப்பாட்டு அறையில் மயிலிறகை வைப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பரஸ்பர நல்லிணக்கம் மேம்படும் மற்றும் பாசம் அதிகரிக்கும்.
- பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால், வீட்டில் சுக்ல பாசத்தின் போது தென்கிழக்கு மூலையில் குறைந்தது 5 அடி உயரத்தில் இரண்டு மயில் இறகுகளை வைக்க வேண்டும்.
குறிப்பு : வீட்டில் கிழிந்த மயிலிறகுகளை ஒருபோதும் வைக்க வேண்டாம். அது நீங்கள் விரும்பிய பலனை தராது.