MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • துளசி செடியை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க.. பெரும் நிதி இழப்பு ஏற்படுமாம்..

துளசி செடியை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க.. பெரும் நிதி இழப்பு ஏற்படுமாம்..

வாஸ்து மற்றும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துளசியின் முக்கிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Mar 28 2024, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Vastu Plants

Vastu Plants

இந்து மதத்தில் துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் துளசிக்கு செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் அது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே பலரும் துளசி செடியை லட்சுமி தேவியின் வடிவில் வழிபட்டு வருகின்றனர். வாஸ்து மற்றும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துளசியின் முக்கிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

29

உங்கள் வீட்டில் துளசி செடி இல்லை என்றால் வீட்டில் துளசி செடியை நடுவது கார்த்திகை மாதம் தான். துளசி லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது, மேலும் துளசி செடியை வீட்டிற்குள் கொண்டு வந்து கார்த்திகை மாதத்தில் நட்டால், லட்சுமி தேவியும் வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் துளசி செடி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அகற்றும் என்றும் நம்பப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

39

சாஸ்திரங்களின்படி, துளசி செடியை கார்த்திகை மாதத்தில் ஏதேனும் ஒரு வியாழன் அன்று வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வியாழன் என்பது விஷ்ணுவின் நாளாகும், விஷ்ணுவின் வடிவமான துளசி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது.
 

49

வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடிகளை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் எப்போதும் வைக்க வேண்டும். இந்த திசையில் தெய்வங்கள் இருப்பதாக ஐதீகம்.

59

வீட்டின் பால்கனி அல்லது ஜன்னலில் துளசி செடிகளை வைக்கலாம்.. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள திசையை கவனிக்க வேண்டும். துளசி செடிகளை தவறுதலாக கூட வீட்டின் தெற்கு திசையில் நடக்கூடாது. இந்த திசை பித்ருவுக்குரியது, இங்கு துளசி செடியை வைத்தால் பெரும் நிதி இழப்பு ஏற்படலாம்.

 

 

69

துளசி செடிகளை வீட்டின் நுழைவாயிலிலோ அல்லது குப்பைகள் வைக்கும் இடத்திலோ அல்லது செருப்பு அகற்றும் இடத்திலோ ஒருபோதும் நடக்கூடாது. துளசி செடியை எப்போதும் மண் பானையில் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரங்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். 

உங்கள் பாதங்களை வைத்தே உங்களின் ஆளுமை பற்றி சொல்லிவிடலாம்.. தெரிஞ்சுக்க இதை படிங்க..
 

79

துளசி செடி புதன் கிரகத்தை குறிக்கிறது. இந்த கிரகம் கிருஷ்ணரின் வடிவமாக கருதப்படுகிறது. ஆனால் துளசி செடியை மாலை நேரத்தில் தொடக்கூடாது.. இது தவிர ஏகாதசி, ஞாயிறு, சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஆகிய நாட்களில் கூட துளசியைத் தொடக்கூடாது. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட துளசிக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.

89

துளசி இலைகளை 15 நாட்கள் பகவான் கிருஷ்ணரின் முன் வைத்து, இலைகள் காய்ந்ததும் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் எப்போதும் 1, 3, 5 அல்லது 7 துளசி செடிகள் இருக்க வேண்டும். துளசி செடியை 2, 4, 6 ஆகிய எண்களில் வைக்கக்கூடாது. துளசி செடிகளை அசுத்தமான கைகளாலோ அல்லது அழுக்கு கைகளாலோ தொடக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.

99

துளசி செடிகளை சமையலறை அல்லது குளியலறைக்கு அருகில் வைக்கக்கூடாது. பூஜை அறையின் ஜன்னல் அருகே துளசி செடியை வைக்கலாம். நீங்கள் தினமும் துளசியை வலம் வர விரும்பினால், தண்ணீர் ஊற்றும் போது, துளசி செடியை மூன்று முறை சுற்றி வரவும். 

 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கூட்டணி அமைத்த சனி-புதன்.! உருவான லாப திருஷ்டி யோகம்.! 4 ராசிகள் காட்டில் பணமழை கொட்டப்போகிறது.!
Recommended image2
Maha Shivaratri 2026: மகா சிவராத்திரியில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! பிப். முதல் 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப்போகுது.!
Recommended image3
Sani Peyarchi: 27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த வீட்டில் சனி பகவான்.! 4 ராசிகளுக்கு பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved