- Home
- Astrology
- Vastu Tips: பணம் தண்ணீராக செலவாகிறதா? உங்கள் வீட்டு சமையலறை மற்றும் பாத்ரூம் குழாய்களை உடனே செக் பண்ணுங்க!
Vastu Tips: பணம் தண்ணீராக செலவாகிறதா? உங்கள் வீட்டு சமையலறை மற்றும் பாத்ரூம் குழாய்களை உடனே செக் பண்ணுங்க!
Vastu Shastra Tips: வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, வீட்டில் உள்ள குழாய்களில் இருந்து தண்ணீர் கசிவது என்பது வெறும் தண்ணீர் விரயம் மட்டுமல்ல, அது நிதி நெருக்கடியின் அறிகுறி.
வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை நம்முடைய வசிப்பிடத்தோடு சீரமைத்து, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். வாஸ்துவின்படி, வீட்டில் உள்ள குழாய்களில் இருந்து தண்ணீர் கசிவது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. இதனால் நிதிப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படியானால், இதில் உள்ள உண்மை என்ன? இது குறித்து வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.

குழாயில் இருந்து மீண்டும் மீண்டும் தண்ணீர் கசிந்தால்
சிலருக்கு இதுபற்றி தெரியாமலே பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக சமீபகாலமாக பலர் நிதிப் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தின்படி, நீங்கள் அறியாமல் செய்யும் சில தவறுகளே உங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்கு காரணமாகின்றன. முக்கியமாக, வீட்டில் உள்ள தண்ணீர் குழாய் மீண்டும் மீண்டும் கசிந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
குழாயில் இருந்து தண்ணீர் கசிவது அசுபம்
நீங்கள் அடிக்கடி நிதிப் பிரச்சனைகளால் அவதிப்பட்டால், உங்கள் வீட்டுத் தண்ணீர் குழாய்களை நிச்சயம் சரிபார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், குழாயில் இருந்து ஒரு துளி தண்ணீர் மீண்டும் மீண்டும் கசிந்தாலும் அது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி இது சுபமானது அல்ல. குழாயில் இருந்து தண்ணீர் கசிவது அசுபமாக கருதப்படுகிறது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இது வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் எவ்வளவு தண்ணீர் கசிகிறதோ, அவ்வளவு செலவுகள் இருக்குமாம். குழாயில் இருந்து தண்ணீர் சொட்டினால், ஏதோ ஒரு ரூபத்தில் பணம் செலவாழி நிதி நெருக்கடிகள் ஏற்படும். குறிப்பாக, உடல்நலப் பிரச்சனைகள் அதிகமாக வாட்டும் என்று வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனால்தான் தண்ணீர் குழாய் விஷயத்தில் நிச்சயமாக கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு துளி நீர் 100 ரூபாய்க்கு சமம்
எனவே, உங்கள் வீட்டில் தண்ணீர் குழாயில் இருந்து தண்ணீர் கசிவதாக நீங்கள் உணர்ந்தால், அதே நேரத்தில் நீங்கள் நிதிப் பிரச்சனைகளை எதிர்கொண்டால், தாமதிக்காமல் அதை சரிசெய்ய வேண்டும். "ஒரு துளி நீர் 100 ரூபாய்க்கு சமம்", அதாவது தண்ணீர் கசிவால் நீங்கள் நிதி ரீதியாக எவ்வளவு நஷ்டம் அடைகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

