Insurance: காப்பீடு க்ளெய்ம் செய்ய முடியலையா? இப்படி செய்யுங்க டக்குன்னு கிடைக்கும்!
காப்பீட்டு பணத்தை எளிதாக கிளெய்ம் செய்ய, சரியான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளைப் புரிந்துகொள்வது அவசியம். பிரச்சினைகள் ஏற்பட்டால், புகார் தீர்வு அதிகாரிகள் மற்றும் ஐஆர்டிஏஐ உதவி செய்யும்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
உதவி செய்யும் காப்பீடு
காப்பீட்டு பணத்தை எளிதாகக் கிளெய்ம் செய்ய சில அடிப்படை செயல்முறைகள் மற்றும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன. இவை குறித்து தெளிவான புரிதல் இருந்தால், எந்த நேரத்திலும் சிக்கல் இல்லாமல் உங்கள் க்ளெய்ம் கிடைக்கும்.
தகவல்கள் முழுமையானவையாக இருக்க வேண்டும்
முதலில், காப்பீடு எடுத்திருக்கும்போது நீங்கள் அளித்துள்ள தகவல்கள் உண்மையானவையாகவும் முழுமையானவையாகவும் இருக்க வேண்டும். விபத்து, திருட்டு, அல்லது இயற்கை பேரிடர் போன்ற நேரங்களில் க்ளெய்ம் கேட்கும் போது, ஆவணங்கள் சரியாகவும் நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக, வாகன விபத்து ஏற்பட்டால் உடனே புகாரளித்து, புகார் எண், சர்வே ரிப்போர்ட், புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கொடுத்தால் க்ளெய்ம் வேகமாக செயல்படும்.
விளக்கம் பெறுவது கட்டாயம்
இறுதியில் க்ளெய்ம் நிராகரிக்கப்பட்டால் அல்லது முழுமையாக கிடைக்கவில்லை என்றால் ஏன் கிடைக்கவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாக கேட்டு விளக்கம் பெறுங்கள். காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டை எப்படிக் கணக்கிட்டது என்றும் அவர்கள் கூறவேண்டும். அதற்கும் மேலாக, தாமதம் ஆகியிருந்தால் அது தொடர்பான காரணங்களை தெளிவாக கேட்டறிய உரிமை உங்களிடம் உள்ளது.
தெளிவான பதில்கள் தரவேண்டும்
மேலும், காப்பீட்டு நிறுவனம் தரும் தகவல்களை எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் தரவேண்டும். இழப்பீடு கோரும்போது மரியாதை மற்றும் ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என்பதும் உங்கள் அடிப்படை உரிமை. நிறுவன ஊழியர்கள், சர்வேயர்கள் போன்றோர் தொழில் நெறியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஐஆர்டிஏஐ உதவி செய்யும்
சில நேரங்களில் க்ளெய்ம் செய்யும் போது தாமதம், தவறான தகவல் அல்லது நிராகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இப்படி நடந்தால் முதலில் காப்பீட்டு நிறுவனத்தின் புகார் தீர்க்கும் அதிகாரியை அணுகலாம். அங்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஐஆர்டிஏஐ (IRDAI) என்ற கட்டுப்பாட்டு அமைப்பிடம் முறையீடு செய்யலாம். இதற்காக வாடிக்கையாளர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருப்பது அவசியம்.அடுத்து, காப்பீடு சம்பந்தப்பட்ட உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவைகள் மூன்றாம் நபர்களுக்கு தெரிவிக்கக் கூடாது. அப்படி ஏற்பட்டால் உடனே புகார் கொடுங்கள். உங்கள் தகவல் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பு.
விதிமுறைகளைப் புரிந்துகொள்வது அவசியம்
ாப்பீடு என்பது நிதி பாதுகாப்பு மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் நியாயமான சிகிச்சை என்ற அடிப்படையிலும் அமைகிறது. க்ளெய்ம் செய்யும் முன் பாலிசியை முழுமையாக வாசித்து அதன் விதிமுறைகளைப் புரிந்துகொள்வது முக்கியம். சரியான தகவல்களும் ஆவணங்களும் இருந்தால் உங்கள் க்ளெய்ம் நடைமுறை எளிமையாகவும் விரைவாகவும் முடியும்.இதற்கென்றே வகுக்கப்பட்ட புகார் தீர்வு நடைமுறைகள் மற்றும் அதிகாரிகள் இருப்பதால், தேவையான போது உரிமைகளைப் பயன் படுத்துங்கள். காப்பீட்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்போது காப்பீட்டு சூழல் நல்லதொரு அனுபவமாக மாறும்.