- Home
- Astrology
- Astrology: மகர ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! இந்த 5 ராசிகள் ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.! பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்குமாம்.!
Astrology: மகர ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! இந்த 5 ராசிகள் ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.! பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்குமாம்.!
Trigraha Yoga 2025: மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் 5 ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திரிகிரக யோகம் 2025
வேத ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிறர் பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறன. இந்த யோகங்கள் நேர்மறை பலன்களை மட்டுமல்லாது, எதிர்மறை பலன்களையும் வழங்குகின்றன.
அந்த வகையில் மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகமானது ஐந்து ராசிக்காரர்களுக்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மகர ராசியில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சவால்களை சந்திக்க இருக்கும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
- திரிகிரக யோகத்தால் மகர ராசிக்காரர்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்திக்க இருக்கிறீர்கள்.
- இந்த யோகம் நிதி சார்ந்த விஷயங்களில் அழுத்தங்களை ஏற்படுத்தலாம்.
- எனவே அடுத்த சில மாதங்களுக்கு பணம் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
- இந்த யோகமானது திருமண வாழ்க்கையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
- தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- முக்கிய முடிவுகளை எடுப்பதை தள்ளிப் போட வேண்டியது அவசியம்.
- எந்த செயலை செய்வதற்கு முன்னரும் தீர ஆலோசித்து அதன் பின்னர் எடுக்க வேண்டியது அவசியம்.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் சவால்களை கொண்டு வரலாம்.
- எதிரிகள் அதிகரிப்பார்கள். உங்கள் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படலாம்.
- மேலதிகாரிகளுடன் மோதல்கள், திட்டங்களில் தோல்வி அல்லது தடைகள் ஏற்படலாம்.
- குடும்பத்தில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். இதன் காரணமாக அதிக செலவுகள், கடன் சிக்கல்கள் ஏற்படலாம்.
- முதலீடுகளில் இழப்பு, பங்குச்சந்தையில் இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம்.
- வாழ்க்கையில் மோதல்கள், குடும்பத்தில் பிளவுகள், தனிமை உணர்வுகள் அதிகரிக்கலாம்.
- இதயம், முதுகு வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் வாட்டி வதைக்கும்.
- எனவே இந்த காலகட்டத்தில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகமானது பல வழிகளில் எதிர்மறை பலன்களை அளிக்கக்கூடும்.
- உறவுகளில் சீர்குலைவு, தொழிலில் இழப்பு, முடிவெடுக்கும் திறன் குறைவு, மாணவர்களுக்கு கவனக்குறைவு, சொத்துக்களில் சர்ச்சை, கடன் பிரச்சனைகள், செலவுகள் அதிகரிக்கலாம்.
- குடும்ப உறவுகளில் சண்டை, கணவன் மனைவிக்கு இடையே மோதல்கள், தற்காலிக பிரிவு, உறவுகளில் சேதம் ஏற்படலாம்.
- ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சரும நோய்கள், சிறுநீரகப் பிரச்சனை, மன அழுத்தம், கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
- நிதி சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.
- விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் பயணங்களை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு கூட்டு வேலைகளில் தடை, நண்பர்கள் மூலம் இழப்பு, புதிய திட்டங்களில் தோல்வி, சிக்கிய பணம் கைக்கு திரும்பாதது, வங்கி இருப்பு குறைவு, முதலீடுகளில் இழப்பு ஏற்படலாம்.
- உறவுகளில் சேதம், குடும்பத்தில் மோதல்கள், தனிமை உணர்வு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
- ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மூட்டு மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள், மன அழுத்தம் அதிகரிப்பு, இருதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
- நெடுந்தூரப் பயணங்கள் காரணமாக அதீத சோர்வு, நிதி இழப்புகள் ஏற்படலாம்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் எதிர்மறை பலன்களை அதிகரிக்கும்.
- எடுக்கும் காரியங்களில் தவறான முடிவுகள் ஏற்படலாம்.
- வேலை அழுத்தம் அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் மோதல்கள் ஏற்படும்.
- மாணவர்கள் தேர்வுகளில் தடைகளை எதிர்கொள்வார்கள்.
- புதிய திட்டங்கள் தாமதமாகும். திடீர் செலவுகள் அதிகரிக்கும்.
- முதலீடுகளில் இழப்புகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும்.
- துணையுடன் பிரிவு ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் பிரச்சனைகள், சொத்து தகராறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
- மன அழுத்தம், தூக்கமின்மை, மூட்டு வலி, கண் பிரச்சனைகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)