இவங்ககிட்ட மட்டும் வச்சுக்காதீங்க! பகைத்தால் கதையை முடிக்கும் 5 ராசிகள்!
வாழ்க்கையில் எல்லாரிடமும் சகஜமாக பழகலாம், ஆனால் இந்த 5 ராசிக்காரர்களிடம் மட்டும் கொஞ்சம் உஷாரா இருக்கணும். இவர்களை தெரியாமல் பகைத்தகு் கொண்டால்... அப்புறம் உங்க நிம்மதி காலி! அவர்கள் யார் யார்? பார்க்கலாம் வாங்க!

விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்கள் வெளியில் பார்க்க அமைதியாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நீங்கள் ஒரு துரோகம் செய்து விட்டால், அதை மனசுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். "பழிவாங்குவது எப்படி?" என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். சமயம் பார்த்து, நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் காய் நகர்த்துவாங்க! இவர்களிடம் உண்மையை மட்டும் பேசுங்கள். அதுவே உங்களைக் காப்பாற்றும்!
மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் எரிமலை மாதிரி. இவர்களை நீங்கள் கோபப்படுத்தினால், மனசுக்குள் எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்; ஸ்பாட்லயே வச்சு செய்வாங்க! இவர்களுடைய வார்த்தை அம்புகள் உங்கள் இதயத்தைக் கிழிச்சிடும். இவர்களிடம் பகை வைத்துக் கொண்டால், உங்கள் இமேஜ் டேமேஜ் ஆவதை யாராரும் தடுக்க முடியாது. இவர்கள் கோபமாக இருக்கும் போது சைலண்டாக ஒதுங்குவது தான் புத்திசாலித்தனம்.
சிம்மம் :
சிம்ம ராசிக்கார்கள் எப்போதுமே கெத்தா இருக்க நினைப்பார்கள். இவர்களுடைய சுயமரியாதையில் கை வைத்தால்... அவ்வளவுதான், சிங்கம் கர்ஜிக்க ஆரம்பிச்சிடும்! இவர்களை பகைத்துக் கொண்டால், உங்களை ஒட்டுமொத்தமாக குரூப்பில் இருந்தும் அசிங்கப்படுத்தி, தனிமைப்படுத்திடுவாங்க. இவர்களிடம் உங்கள் ஈகோவைக் காட்டாதீங்க, இவங்களோட பவர் அசாத்தியமானது!
மகரம் :
மகர ராசிக்காரர்கள் கோபப்பட்டு கத்த மாட்டாங்க. ஆனால், உங்களை எப்படி வீழ்த்தணும் என்று செஸ் கேம் மாதிரி 'மாஸ்டர் பிளான்' போடுவாங்க. நீங்கள் தப்பு பண்ற வரைக்கும் பொறுமையாக காத்துட்டு இருந்து, சரியான நேரத்தில் உங்களோட வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பாங்க. இவங்ககிட்ட தொழில்முறை ரீதியாவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ நேர்மையாக நடந்துக்கோங்க.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களுடைய பலமே அவங்களோட பேச்சுதான். இவங்களை நீங்க பகைச்சுக்கிட்டா, அவங்ககிட்ட இருக்கும் 'நெக்ஸ்ட் லெவல்' சாணக்கியத்தனத்தை காட்டுவாங்க. ஊர் முழுக்க உங்களைப் பத்தி நெகட்டிவாக பேசி, உங்களோட நல்ல பேரை ஒரே நாளில் காலி பண்ணிடுவாங்க! இவங்ககிட்ட உங்களோட ரகசியங்களை அதிகமாக பகிர்ந்துக்காதீங்க.
