- Home
- Astrology
- சந்தோஷத்தை அள்ளித்தள்ளும் சௌபாக்கிய யோகம்.! 4 ராசிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்.! இனி கஷ்டமோ, நஷ்டமோ இல்லை.!
சந்தோஷத்தை அள்ளித்தள்ளும் சௌபாக்கிய யோகம்.! 4 ராசிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்.! இனி கஷ்டமோ, நஷ்டமோ இல்லை.!
செப்டம்பர் 4 ஆம் தேதி காலையில் யோகத்தில் சுப கிரக அமைப்பு உருவாகிறது. இதனுடன் சௌபாக்கிய யோகமும் சேர்ந்தே வருகிறது. இதனால் சில ராசிகளுக்கு குரு மற்றும் சௌபாக்கிய யோகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ரிஷபம் - எதிரிகள் சரண் அடைவர்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நட்சத்திரங்கள் கூட்டமைப்பு உங்கள் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு வசதிகளின் பலன்களையும் தரும். இன்று உங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக பலன்களைத் தரும். புதிய வாகனங்களை வங்கி குவிப்பீர்கள். புதிய ஆடை அணிகலன்கள் வந்து சேரும். நல்ல செய்திகள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும். வேலை மாற்றத்திற்கு முயற்சிப்பவர்கள் வெற்றி பெறலாம். காசு பணம் புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள், தலைமை பதவி ஆகியவை உங்களை வந்து சேரும். எதிரிகள் சரண் அடைவர்.
கடகம் - தொட்டது துலங்கும்
கடக ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டமான நேரம் தொடங்குகிறது.உங்களுக்கு மகிழ்ச்சியான சில செய்திகள் வரலாம். நீங்கள் வீட்டிலோ அல்லது வேலையிலோ சில மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். உங்கள் எதிரிகள் விரும்பினாலும் உங்களுக்கு தீங்கு செய்யவே முடியாது. முன்னெச்சரிக்கையாக, உங்கள் உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு தொடர்பு கொள்வர். உங்களின் உத்தரவுக்கு கட்டுப்படும் நிலை பலருக்கு ஏற்படும். நல்லதை செய்தால் நண்பர்களும் உறவினர்களும் உங்கள் பின்னாடியே ஓடிவருவர். புதிய அதிர்ஷ்டம் பின் தொடர்வதால் எந்த இலக்கையும் எளிதாக அடையலாம். முயற்சி அனைத்தும் வெல்லும்.
கன்னி - நல்ல காலம் பொறக்குது
கன்னி ராசிக்காரர்களுக்கு ஒன்றல்ல பல விஷயங்களில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. நீங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். உங்களுக்குள் எந்தவிதமான பதற்றமும் இருந்தால் இனி அது காணாமல் போகும். வருமானம் மற்றும் நிதி விஷயங்களிலும் கன்னி ராசிக்காரர்களுக்கு இனி நல்லதே நடக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உங்கள் ஏதாவது நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாம். குழந்தைகளிடமிருந்து உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த விஷயத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
விருச்சிகம் - மாற்றம் முன்னேற்றம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. எந்தத் தடையுள்ள வேலையும் மீண்டும் தொடங்கலாம். அரசுத் துறை தொடர்பான உங்கள் வேலைகள் இனி எளிதில் முடிவடையும். இறக்குமதி-ஏற்றுமதி வேலையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இனி நீங்கள் மூதாதையர் சொத்தில் இருந்து பலன்களைப் பெற முடியும். பழைய கடன்கள் வந்து சேரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கதவை தட்டும்.