- Home
- Astrology
- Sani Pariharam : சனி பகவானின் கோபம், உக்கிரம் தணிந்து சுப பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய ரொம்ப எளிய பரிகாரம்!
Sani Pariharam : சனி பகவானின் கோபம், உக்கிரம் தணிந்து சுப பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய ரொம்ப எளிய பரிகாரம்!
Top 4 Astrological Remedies to Overcome Sani Wrath : சனி பகவானின் கோபம், உக்கிரம் தனிந்து சுப பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய ரொம்ப எளிய பரிகாரம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்

சனிப்பெயர்ச்சி 2025 பரிகாரங்கள்
Top 4 Astrological Remedies to Overcome Sani Wrath : ஜோதிட ரீதியாக பார்க்கையில் நவக்கிரகத்தில் முக்கியமான கிரகம் என்றால் அது சனி பகவான் தான். ஒரு ராசியில் நீண்ட நாட்கள் அதாவது இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்து அந்த ராசிக்கான சுப மற்றும் அசுப பலன்களை வழங்குவார்.
ஒருவரின் ஜாதகத்தில் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி இருந்தால், அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும். சூரிய பகவானின் மகனான சனி பகவான் கர்ம வினைகளைத் தீர்ப்பவர். அதாவது, அவர் மக்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நல்லது அல்லது கெட்ட பலன்களைத் தருகிறார்.
சனி பெயர்ச்சி 2025 பரிகாரம்
சனியின் பார்வை மிகவும் வலிமையானது மற்றும் அதன் கோபம் மிகவும் வேதனையானது என்று நம்பப்படுகிறது. பல்வேறு ராசிக்காரர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். அப்படி கோபத்திற்கு ஆளாகும் போது அவர்களின் வாழ்க்கை நரகத்தை விட மோசமாகிறது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்?
சனியின் கோபத்தைத் தவிர்க்க நீங்களும் சில எளிய பரிகாரங்களைச் செய்யலாம். சனியின் தீய பார்வையைத் தவிர்க்க சாஸ்திரங்களில் பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. இதனால் சனி பகவானின் அருள் கிடைக்கும். சில எளிய வழிபாடுகளால் சனியின் கோபத்திலிருந்து விடுபடலாம்.
சனி பகவானுக்குரிய மந்திரம்:
ஓம் பிராங் பிரிங் ப்ரோங் ச: சனீஸ்வராய நம:!
இந்த மந்திரத்தை உச்சரித்தால் சனி பகவான் மகிழ்வார். ஓம் சங் சனீஸ்வராயை நம:! இந்த மந்திரத்தை ஜபித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா
என்ற நவக்கிரகத்திற்குரிய சனி பகவானின் ஸ்லோகத்தை தவறாமல் சொல்லி வரலாம்.
சனி பெயர்ச்சி 2025 பரிகாரங்கள்
சனி பகவானுக்கு எள், எண்ணெய், நிழல் தானம் மிகவும் பிடிக்கும். நிழல் தானம் செய்ய ஒரு குறிப்பிட்ட முறை உள்ளது. ஒரு மண் பாத்திரத்தில் எண்ணெய் எடுத்து அதில் உங்கள் பிரதிபலிப்பைப் பார்த்து தானம் செய்யுங்கள். இந்த பொருட்களை தானம் செய்தால் சனி கிரகம் சாந்தமாகும், சனி பகவானின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ருத்ராட்சம் அணிந்தால் என்ன பலன்
ருத்ராட்சம் அணிந்தால் சனி பகவானின் அருள் கிடைக்கும், சனியின் தீய பார்வை நீங்கும். திங்கள் அல்லது சனிக்கிழமைகளில் கங்கை நீரால் கழுவி ருத்ராட்சம் அணிந்தால் சனியின் கோபத்திலிருந்து விடுபடலாம். ஏழு முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்.