MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • June 28, இன்றைய ராசிபலன்: அட! இந்த ராசிகளுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைக்குமாம்!

June 28, இன்றைய ராசிபலன்: அட! இந்த ராசிகளுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைக்குமாம்!

இன்றைய ராசி பலன்கள் பல திருப்பங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் சுட்டிக்காட்டுகின்றன. தொழில் முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி, மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் நிறைந்த நாளாக இன்று அமையும்

5 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 28 2025, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் (Aries)
Image Credit : Getty

மேஷம் (Aries)

இன்று பொறுமை மிக அவசியம். அலுவலகத்தில் சிரமமான வேலைகளை செய்து முடிக்க நேரிடும். சக ஊழியர்களுடன் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் புதிதாக நினைத்த காரியம் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் தொடர்பான செலவுகள் மேலோங்கும். வருமானம் திருப்திக்குரிய அளவில் வந்தாலும், செலவுகள் கூடுவதால் சற்று சிரமம் காணலாம். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேரும். எதிர்பார்த்த உதவி நண்பர்கள் மூலம் கிடைக்கும். தந்தையுடன் ஆலோசனை நன்மை தரும். மனச்சஞ்சலம் குறைய, தியானம் நல்லது. ஆரோக்கியத்தில் சிறிய சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனை வரலாம்; மருத்துவ ஆலோசனை பெறுங்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து மனநிம்மதி பெறலாம். பயண யோகம் குறைவாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் விரும்பிய செய்தியை பெறுவர். புதிய முதலீடு சீரான வருமானத்தை தரும். நண்பர்கள் சந்திப்பு ஆனந்தத்தை ஏற்படுத்தும். 

அசுவினி – முயற்சி வெற்றி தரும்

பரணி – செலவுகள் அதிகம்

கிருத்திகை – உறவினர்கள் உதவி

முதலீடு: நிலத்தில் புது முதலீடு நன்று

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம் (Taurus)
Image Credit : Freepik

ரிஷபம் (Taurus)

இன்று பல புதிய சந்தர்ப்பங்கள் கைகூடும். தொழிலில் வளர்ச்சியைக் குறிக்கும் முக்கிய நாள். புது வாடிக்கையாளர்களால் ஆதாயம் அதிகமாகும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான சுகமான செய்தி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வீட்டில் சந்தோஷ சூழல் பெருகும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் முயற்சிகள் கைகூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. மனநிலை உற்சாகத்துடன் இருக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். விஷ்ணுவுக்கு விரதம் இருந்தால் நன்மை அதிகரிக்கும். புதிய வீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கலாம். பயணங்களில் சிறிய தாமதம் ஏற்படும். பழைய கடனைத் திரும்பப்பெற வாய்ப்பு. ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பர்கள் சந்திப்பால் ஆனந்தம். இன்று உங்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கிருத்திகை – சுபச் செய்தி; 

ரோஹிணி – பண வரவு; 

மிருகசீரிடம் – பயண யோகம். 

முதலீடு: நிலம்/வீட்டு நிலம் முதலீடு சிறந்தது.

312
மிதுனம் (Gemini)
Image Credit : Twitter

மிதுனம் (Gemini)

சாதனைக்கு ஏற்ற நாள். உங்கள் முயற்சிகள் சிறந்த பலனை தரும். தொழிலில் உயர்வு வாய்ப்பு உள்ளது. புதிய நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, நன்மை தரும் உறவுகள் உருவாகும். பண வரவு திருப்தியாக இருக்கும். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். பிள்ளைகளால் பெருமை. நண்பர்களுடன் பயண வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் சீரான நிலை காணலாம். மனநிலை நேர்மறையாக இருக்கும். தந்தையின் ஆலோசனை பாக்கியம் தரும். புதிய வணிக முயற்சிகளுக்கு இன்றைய நாள் உகந்தது. குடும்ப விழாக்கள் நடத்த திட்டமிடலாம். அலுவலகத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். 

மிருகசீரிடம் – பயண நன்மை

திருவாதிரை – பணம் கைக்கு வரும்

புனர்பூசம் – சந்தோஷம் அதிகம்

முதலீடு: இரும்பு சாமான்களில் முதலீடு செய்யலாம்.

412
கடகம் (Cancer)
Image Credit : Facebook

கடகம் (Cancer)

இன்று பூரண நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் உதவி கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் மேலோங்கும். உறவினர்கள் உதவி தருவார்கள். பிள்ளைகள் தொடர்பான சுபசெய்தி உண்டு. ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். சண்டைகள் தவிர்த்து அமைதியாக நடந்தால் நன்மை பெருகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கியதில் மனநிறைவு ஏற்படும். தந்தையின் ஆலோசனை சிறந்த பயன் தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளியூர் பயணம் வெற்றியளிக்கும். பணவரவு திருப்தி தரும். வீட்டில் புதிய பரிசுகள் வாங்க வாய்ப்புகள் உண்டு. உணவில் கட்டுப்பாடு அவசியம். எதிர்பாராத செலவுகள் வரலாம். ஆன்மீக சிந்தனை வளர்க்க, சந்திர பகவான் வழிபாடு சிறந்தது. 

புனர்பூசம் – சந்தோஷ செய்தி 

பூசம் – கல்வி யோகம்

ஆயில்யம் – மனநலம் 

முதலீடு: சூப்பர் மார்கெட் முதலீடு நன்று

512
சிம்மம் (Leo)
Image Credit : Facebook

சிம்மம் (Leo)

இன்று திடீர் சந்திப்புகள் அதிக மகிழ்ச்சி தரும். தொழிலில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளிடம் மதிப்பு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சிறு சிக்கல்கள் இருந்தாலும் பேச்சால் தீரும். பட்டம், பதவிகள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளை சீரமைக்கவும். வியாபாரம் விரிவடையும். புதிய நபர்களுடன் பழக்கம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு மனநிறைவு தரும். பிள்ளைகளின் கல்வியில் சிறந்த முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் சிறிய கோளாறுகள் வரலாம்; அதனை தவிர்க்க உணவில் தவிர்க்க கட்டுப்பாடு அவசியம். தாயாரின் ஆசீர்வாதம் நன்மை தரும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். சூரியனுக்கு ஜபம் செய்து மனநிம்மதி பெறலாம். குடும்ப உறவுகள் வலுப்படும். வெளிநாட்டு தொடர்புகள் வளரலாம்.

மகம் – பணவரவு

பூரம் – சந்திப்பு நன்மை 

உத்திரம் – புதிய வாய்ப்பு 

முதலீடு: ஹார்டுவேர் முதலீடு உகந்தது

612
கன்னி (Virgo)
Image Credit : our own

கன்னி (Virgo)

இன்று நிதானமாக செயல்பட வேண்டும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பான சந்தோஷ செய்தி வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.  அலுவலகத்தில் உங்கள் பணியாற்றும் பாணி பாராட்டப்படும். புது முதலீடுகள் திட்டமிட ஏற்ற நாள். பணவரவு திருப்திகரமாக வரும். குடும்ப உறவுகள் வலுப்படும். சுகாதாரத்தில் கவனம் தேவை. மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். தாய் வழி உதவியால் பாக்கியம் கிடைக்கும். விநாயகருக்கு அர்ச்சனை செய்து சுகம் பெறலாம். வாகன யோகம் கூடும். உத்திரம் – சந்தோஷம்

ஹஸ்தம் – நன்மை தரும்

சித்திரை – முயற்சி வெற்றி

முதலீடு: தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

712
துலாம் (Libra)
Image Credit : our own

துலாம் (Libra)

இன்று உங்கள் முயற்சிகள் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் நிம்மதி மேலோங்கும். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். செலவுகளை சீரமைக்கவும். மனநிலை நேர்மறையாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். உங்களுக்கு தலைமை பொறுப்பு தேடி வரும். வெளியூர் பயணம் சாதகமானது. புதிய வாடிக்கையாளர் வரவேறுவர். தந்தையின் ஆலோசனை பாக்கியம் தரும். ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். லட்சுமி பூஜை செய்து மனநிம்மதி பெறலாம். பணவரவு திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வாகன யோகம் கூடும். தொழிலில் வளர்ச்சி நிச்சயம். உறவினர்கள் உதவி பெறுவார்கள். 

சித்திரை – முயற்சி வெற்றி

சுவாதி – பண வரவு

விசாகம் – சந்தோஷம்

முதலீடு: நில முதலீடு உகந்தது.

812
விருச்சிகம் (Scorpio)
Image Credit : our own

விருச்சிகம் (Scorpio)

இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் கைகூடும். புது ஒப்பந்தங்களில் சிக்கல் வரும்; பொறுமையுடன் சமாளிக்கவும். மனநிலை உற்சாகம் தரும். குடும்ப உறவுகள் வலுப்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பிள்ளைகள் தொடர்பான நன்மை சுபசெய்தி வரும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பங்குசந்தை முதலீடுகள் லாபம் தரும். ஆரோக்கியத்தில் சீரான நிலை காணலாம். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். அனுமன் வழிபாடு செய்து மன நிம்மதி பெறலாம். வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். புது முயற்சி வெற்றி பெறும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும். 

விசாகம் – சந்தோஷம்

அனுஷம் – முயற்சி வெற்றி

கேட்டை – பண வரவு

முதலீடு: கட்டுமானம் முதலீடு நன்று

912
தனுசு (Sagittarius)
Image Credit : our own

தனுசு (Sagittarius)

இன்று முயற்சிகள் சிறந்த பலனை தரும். தொழிலில் உயர்வு வாய்ப்பு. குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியம் சீராகவே இருக்கும். புது முயற்சிகள் வெற்றி தரும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். குருவுக்கு வழிபாடு செய்து நிம்மதி பெறலாம். பயண யோகம் உள்ளது. தந்தையின் ஆலோசனை நன்மை தரும். பண வரவு அதிகம். வாடிக்கையாளர் தொடர்பு விரிவடையும். புதிய வணிக முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். வெளியூர் முயற்சிகளில் சாதனை.

மூலம் – சந்தோஷம்

பூராடம் – முயற்சி வெற்றி

உத்திராடம் – நன்மை

முதலீடு: கல்வி முதலீடு நல்லது.

1012
மகரம் (Capricorn)
Image Credit : Twitter

மகரம் (Capricorn)

இன்று தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்ப சந்தோஷம் மேலோங்கும். புது வருமானம் கிடைக்கும். ஆன்மீக சிந்தனை வளர்கின்றது. பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. செலவு கட்டுப்பாடு அவசியம். தாயாரின் ஆசீர்வாதம் கிடைக்கும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வெளியூர் பயண யோகம் தரும். சனி வழிபாடு நன்மை தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். புது முயற்சி வெற்றி பெறும். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும்.

உத்திராடம் – முயற்சி வெற்றி

திருவோணம் – சந்தோஷம்

அவிட்டம் – நன்மை 

முதலீடு: நில முதலீடு சிறந்தது.

1112
கும்பம் (Aquarius)
Image Credit : Twitter

கும்பம் (Aquarius)

இன்று சாதனைக்கு ஏற்ற நாள். தொழிலில் முன்னேற்றம். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். புது முயற்சி வெற்றி தரும். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். பணவரவு திருப்தி தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். விநாயகர் வழிபாடு செய்ய நல்ல நாள். வெளியூர் பயணம் சாதகமாக இருக்கும். தந்தையின் ஆலோசனை பாக்கியம் தரும். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். 

அவிட்டம் – சந்தோஷம்

சதயம் – நன்மை

பூரட்டாதி – முயற்சி வெற்றி 

முதலீடு: ஆன்லைன் முதலீடு நல்லது

1212
மீனம் (Pisces)
Image Credit : Twitter

மீனம் (Pisces)

இன்று திடீர் சந்திப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி தரும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். புது வாய்ப்புகள் கைகூடும். குடும்ப உறவுகள் வலுப்படும். பிள்ளைகள் சந்தோஷம் தருவர். செலவுகள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது. ஆன்மீக சிந்தனை மேலோங்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து மன நிம்மதி பெறலாம். வெளிநாடு தொடர்பு வளரலாம். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சி வெற்றி தரும்.  பூரட்டாதி – முயற்சி வெற்றி

உத்திரட்டாதி – சந்தோஷம்

ரேவதி – நன்மை

முதலீடு: பொருட்களை வாங்கி விற்பது லாபம் தரும்

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
ஆன்மீகம்
இராசி அறிகுறிகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சிம்மத்தில் நுழையும் செவ்வாய்: அதிர்ஷ்டக் கதவை தட்டப்போகும் 4 ராசிகள்.. இனி பணமழை!
Recommended image2
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image3
Astrology: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Related Stories
Recommended image1
Astrology: உங்கள் ராசிப்படி சொந்த கார் வாங்கும் யோகம் எப்போது? – ஜோதிடக் கூற்றும், பரிகார ஆலோசனைகளும்!
Recommended image2
Astrology: இந்த நாளில் தொழில் தொடங்குங்கள் ஜாலியா! நீங்களும் "அம்பானி" ஆகலாம் ஈசியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved