- Home
- Astrology
- Today Rasipalan: இன்றைய ராசிபலன் (ஜூலை 8)! இன்று உங்களுக்கு பணவரவா? புதிய வாகன யோகமா? 12 ராசிகளின் முழு பலன்கள்!
Today Rasipalan: இன்றைய ராசிபலன் (ஜூலை 8)! இன்று உங்களுக்கு பணவரவா? புதிய வாகன யோகமா? 12 ராசிகளின் முழு பலன்கள்!
Rasipalan: ஜூலை 08, புதன் கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான முழுமையான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நாளில் எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம், பணவரவு, மற்றும் தொழில் முன்னேற்றம் ஏற்படும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

12 ராசிகளுக்கான பலன்கள்
ஜூலை 08 புதன் கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான முழுமையான பலன்கள். இன்று எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம் , பணவரவு, புதிய வாகனம் உள்ளிட்டவைகள் குறித்து பார்க்கலாம்.
மேஷ ராசி
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் பெயரும் புகழும் உயரும். நினைத்த காரியங்கள் சரியான நேரத்தில் முடியும். தொழில், உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
ரிஷப ராசி
தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு எரிச்சலை உண்டாக்கும். நீண்ட தூர பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தாமதமாகவே முடியும். நிதி நிலைமை சற்று சிரமத்தை ஏற்படுத்தும்.
மிதுன ராசி
திடீர் பண வரவு உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். பெரியவர்களின் ஆசிகள் உங்களுக்குக் கிடைக்கும்.
கடக ராசி
தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் கீர்த்தியும், மதிப்பும் உயரும். நீங்கள் தொடங்கிய காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
சிம்ம ராசி
அதிர்ஷ்டம் கைகூடி வரும். தெய்வீக தரிசன பாக்கியம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் லாபகரமாக அமையும். சொத்துத் தகராறுகள் நீங்கும். மாணவர்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ஆகியவை சுமாராகவே இருக்கும்.
கன்னி ராசி
வேலைகளில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தமும், கவலையும் அதிகரிக்கும். சண்ட சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. வாகனப் பயணங்களில் எச்சரிக்கை அவசியம்.
துலாம் ராசி
வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு வலுப்படும். பார்ட்னர்ஷிப் தொழில் லாபகரமாக நடக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகத்தில் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள். விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள்.
விருச்சிக ராசி
எதிரிகளை வெல்வீர்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக மாறும். பழைய கடன்களில் இருந்து நிம்மதி கிடைக்கும். உடல்நலப் பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
4 ராசிகளில் உச்சம் பெற்ற சுக்கிரன்..! தொட்டதெல்லாம் ஜாக்பாட் தான்..! இனி கவலையே வேண்டாம்..
தனுசு ராசி
பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்தி வரும். வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய யோசனைகள் செயல்வடிவம் பெறும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் சாதகமாக அமையும்.
மகர ராசி
வீட்டில் அமைதியான சூழல் நிலவும். புதிய வாகனம் அல்லது நிலம் வாங்குவீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். மன அமைதி கிடைக்கும்.
கும்ப ராசி
உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும். பயணங்கள் லாபகரமாக இருக்கும். தொழில், உத்தியோகம் சாதகமாகவே செல்லும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீன ராசி
பொருளாதார ரீதியாக லாபம் உண்டாகும். உங்கள் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும்.

