- Home
- Astrology
- அக்டோபர் 25, இன்றைய ராசி பலன்: அதிர்ஷ்டம் யாருக்கு? சில ராசிகளுக்கு எச்சரிக்கை! பல ராசிகளுக்கு பணமழை.!
அக்டோபர் 25, இன்றைய ராசி பலன்: அதிர்ஷ்டம் யாருக்கு? சில ராசிகளுக்கு எச்சரிக்கை! பல ராசிகளுக்கு பணமழை.!
இன்றைய ராசி பலன் 12 ராசிகளுக்கும் பலவிதமான பலாபலன்களைக் கொண்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும் தொழில், குடும்பம், நிதிநிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த கணிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும் நாள். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். இருந்தபோதிலும் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் சில சவால்கள் இருந்தாலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், ஆனால் நிதானம் அவசியம். பயணம் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 6 | நிறம்: நீலம்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்ற உங்களுக்கு சிறப்பான நாள். திட்டமிட்ட செயல் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சவாலை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்டநாள் நினைத்திருந்த காரியம் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு தொடர்பு கொள்வர். உங்களின் அன்புக்காக ஏங்கும் நபரை இன்று புரிந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 11 | நிறம்: பிங்க்
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு அல்லது பொருள் ஆதாயம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். வணிகம் மற்றும் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்பத்துவ வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் சாதனைகள் பெருமை தரும். மொத்தத்தில் இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் அள்ளித்தரும்.
அதிர்ஷ்ட எண்: 2 | நிறம்: பிரவுன்
கடகம்
கடக ராசி நேயர்களே, இன்று சொத்து தொடர்பான முடிவுகளில் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் தொழிலில் முன்னேற்றம் காணலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். சமூகத்தில் உங்களது பெயர் உயர்வடையும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஊக்கம் கிடைக்கும். கணக்கு அறிவியில் உள்ளிட்ட பாடங்களில் தெளிவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வரும். பண வரவு உங்களை உற்சாகப்படுத்தும்.
அதிர்ஷ்ட எண்: 11 | நிறம்: நீலம்
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, உங்களால் எதிரிகள் தோற்கடிக்கப்படுவர். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்யும் முன் ஆராய்ந்து நடப்பது நல்லது. குடும்பத்தில் நீண்டகால கருத்து வேறுபாடுகள் காணாமல் போகும். வாகன யோகம். வீடு வாங்கும் யோகம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்: 5 | நிறம்: பச்சை
கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பிள்ளைகளின் முன்னேற்றம் மன திருப்தி தரும். நீண்டகால நிலுவையில் இருந்த பணிகள் முடியும். வீட்டில் சுப செயல்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. விருந்தினர்கள் வருகை சந்தோஷம் தரும். சமூகத்தில் மரியாதை உயரும். போட்டிகள் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7 | நிறம்: மஞ்சள்
துலாம்
துலாபம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பணி சுமை அதிகமாகும் நாள். உடல் சோர்வு ஏற்படலாம் என்பதால் சரியான நேரத்தில் சாப்பிடவும். இன்ற வருமானம் குறையும், செலவு எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். குடும்பத்துடன் நேரம் கழிப்பது மன அமைதியும் சந்தோஷமும் தரும். பயணம் மகிழ்ச்சி தரும். பால்ய நண்பரின் உதவி உங்களை சந்தோஷப்படுத்தும்.
அதிர்ஷ்ட எண்: 1 | நிறம்: மெரூன்
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்று வேலை, வியாபாரம் தொடர்பான சில தடைகள் இருக்கும். இதனால் மன அமைதி குறையலாம், ஆனால் கடின உழைப்பின் பலன் விரைவில் கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டு மற்றும் ஆதரவு கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். புதிய முதலீடுகள் குறித்த யோசனை வரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
அதிர்ஷ்ட எண்: 12 | நிறம்: சிவப்பு
தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்று தொழிலில் வெற்றி கிடைக்கும். பயண வாய்ப்புகள் இருக்கலாம். நண்பர்களின் உதவியால் சில முக்கிய விஷயங்கள் சீராகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. எதிரிகளுக்கு எதிராக தெளிவான முடிவுகள் தேவை. சிந்தித்து செயல்பட்டால் சந்தோஷமும் வெற்றியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4 | நிறம்: ஆரஞ்சு
மகரம்
மகர ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பணியிடத்தில் மரியாதை உயரும் நாள். நீண்ட கால சொத்து பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். மாலை நேரத்தில் உடல்நலத்தைப் பராமரிக்கவும். சமூகச் செயலில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலும் பணியிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். உறவினர்கள் பரிசுடன் உங்களை சந்திக்க வருவர். புதிய தொழிலை தொடங்குவது குறித்த யோசனை வரும். முதலீடுகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 8 | நிறம்: வெள்ளை
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் அதிகம். நீண்ட கால முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்துடன் சந்தோஷ சுற்றுலா போகலாம். உடல் மற்றும் மனநலத்துக்கு சிறப்பு கவனம் தரவேண்டியது நலம். எதிர்காலத்துக்கான புதிய திட்டங்களை உருவாகும்.
அதிர்ஷ்ட எண்: 10 | நிறம்: நேவி ப்ளூ
மீனம்
மீன ராசி நேயர்களே, எல்லா துறைகளிலும் லாப வாய்ப்பு பிரகாசமாக உண்டு. பெரியோரின் ஆலோசனையுடன் செயல்படுங்கள், அப்போதுதான் நினைத்தது நடக்கும். குடும்பத்துக்காக புதிய முடிவுகள் எடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். நிதானமான பேச்சு மூலம் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட எண்: 3 | நிறம்: மெஜந்தா