- Home
- Astrology
- Thulam Rasi Palan Nov 29: துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் அடிக்கும் பந்துகள் எல்லாமே சிக்ஸர் தான்.!
Thulam Rasi Palan Nov 29: துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் அடிக்கும் பந்துகள் எல்லாமே சிக்ஸர் தான்.!
Nov 29 Thulam Rasi Palan : நவம்பர் 29, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 29, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:
துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமானதாகவும், நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும் நாளாகவும் இருக்கும்.
புதிய முயற்சிகளை தொடங்கவும் நிலுவையில் இருக்கும் வேலைகளை முடிக்கவும் நல்ல நாளாகும். உடல் மற்றும் மனதில் ஒருவித சோர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவுகள் அல்லது லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவசரப்பட்டு பெரிய முதலீட்டு முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பங்குகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகளும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. நண்பர்கள் குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, இணக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சூழல்கள் உருவாகும்.
பரிகாரங்கள்:
இன்று லட்சுமி நாராயணரை வணங்குவது அதிர்ஷ்டத்தை தரும். மகாலட்சுமியை வணங்குவது நிதி நிலைமையை மேம்படுத்தும். பெருமாள் கோவிலுக்கு நாட்டு சர்க்கரை அல்லது தேன் தானம் செய்யலாம். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

